சரித்திரம் புரட்டும் ஜான்சியாய்

சூடத்தை பொசுக்கும் சூறாவளி ஆண்களென
மறந்து சுதந்திரம் கேட்டோம் சூறாவளியாய் ........
பெண்களே !!!
ஆணிற்கு சமம் பெண்ணென நமக்கு
நாமே கேட்கும் முன்னே நம் கவி
தேசத்தந்தை பாரதியன்றோ கேட்டது
கேட்டது ஆணனென அனைத்து
ஆண்களையும் நம்புதல் தகுமோ ?
அவன் பூவென உன்னை வர்ணித்தால்
அவன் மூட்டும் தீயில் நீ
பொசுங்கலாகுமோ ??
போதும்! போதும் ! போதும் !
நம்பியது போதும் நாசக்காரர்களை
அடையாளம் கண்டுகொள் .....
தீயில் நீ வேகுமுன் தாயாகும்
சேயே நீ தீயாய் மாறு .....
தண்ணீர் ஊற்றி அணைத்தாலும்
அணையும் முன் பொசுக்கிவிட்டு
அணை அடுத்தவன் உன்
அஸ்தியைக் கூடத்தொட அஞ்சட்டும் ..
ஆடை !ஆடை !ஆடையே
நம் கலாச்சாரமென அலங்கரிக்கும்
அவர்களின் பார்வை உன்னாடைமேல்
என்பதை உணராயோ ?அப்பார்வைக்கு
நீயிடம் கொடுத்தல் உன்சமாதிக்கு
நீதரும் முகவரியென்று அறிவாயோ ?
சிந்தைசெய்! சிந்தைசெய்!சிந்தனையே
சிகரம் தொடும் அகரமென உணர்ந்து
சட்டதிட்டமெல்லாம் காசுள்ள பக்கம்
சாளரம் வீசுமென்று அறிவாயோ ?
தூக்குத் தண்டனை அமலெல்லாம்
சமாதியில் நீ சாந்தாமாகும் வரையே
சின்ன சின்ன சருக்கலிலும் சிதறாதே
சிந்துநதி நீயென மறந்துவிடாதே ......
சிரித்துச் சிரித்துப் பேசாதே நீ
சிரிப்பது சிலர் கண்களுக்கு
சில்லறை வியாபரம் உன்வலியை
சிலாகிக்க அவர்கள் உன்சகோக்கள் அன்று....
குற்றம் புரிந்தது ஆணாகினும்
அதை தூண்டிட்ட தூண்டுகோல்
நீயென் பேசும் சமூகத்திடம்
தன்மானம் உனக்கும் உண்டென
உரக்கக் கூறும்படி நிமிர்ந்து நில் ....
சரித்திரம் புரட்டும் ஜான்சியாய் ....
.