காதலிக்க முடியாதவள் நான்......!!!

அடித்து பிடித்து
பேருந்தில்
ஏறியதிலிருந்தே
வைத்த கண் வாங்காமல்
சொக்கிபோகிறாய் என்னழகில்...!!!

இது " லேடீஸ் சீட்" எனக்கூறி
சினிமா வில்லன் போல்
அமர்திருந்த ஒருவரை எழுப்பி
அவர் முறைப்பை வாங்கிகொண்டு
நான் அமர இடம் பிடித்தாய்...!!!

வயதான பெரியவருக்கு
உன் இருக்கையை
தருகிறாய்...!!!

படிக்கட்டில்
பயணிப்பவர்களை
மென்மையாக
எச்சரிக்கிறாய்....!!!

பெண்கள் நிற்க
இடம் ஒதுக்கி
தருகிறாய்
விரல் சூப்பும் குழந்தையின்
கட்டை விரலை
எடுதுவிடுகிறாய் .......!!!

இவற்றுகிடையே
அவ்வபொழுது
வேறு எங்கோ பார்த்தபடியே
என்னையும் பார்த்துக்கொள்கிறாய்
ஆம் உன் அழகான பார்வையால்
கொல்கிறாய்....!!!

நீயும் பார்க்க
மாநிறத்தில் இருந்தாலும்
கொஞ்சம் அழகாகவும்
இருக்கிறாய்.
உன்னை எனக்கும்
பிடித்துதான் இருக்கிறது.....!!!

அதைவிட
கூட்ட நெரிசலில்
ஒவ்வொரு நிறுத்தம்
வரும்பொழுதும்
நான் இறங்குகிறேனா என
பதற்றத்துடன்
நீ என்னை தேடுவதும்
எனக்கு பிடித்தது.....!!!

ஆனால்..,
உன்னை கண்டுகொள்ளாமல்
இறங்கி வந்துவிட்டதால்
எனக்கும் வருத்தம் தான்...!!!

மூன்று தங்கைகளுடன்
முடியாத பெற்றோர்களுடன்
மொத்த குடும்பமும்
என் ஒருவளின்
கைகளை நம்பியிருக்க
என்ன செய்வேன் ஆண்மகனே...???
கற்பனையில் கூட
காதலிக்க முடியாதவள் நான்......!!!

நாளை மீண்டும்
அதே பேருந்தில்
வந்துவிடாதே.....!!!
எழுதியவர் : jaisee (7-Sep-10, 8:35 pm)
பார்வை : 879

மேலே