lambaadi - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  lambaadi
இடம்:  tenkasi
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Apr-2013
பார்த்தவர்கள்:  1473
புள்ளி:  1514

என்னைப் பற்றி...

kavignan

என் படைப்புகள்
lambaadi செய்திகள்
lambaadi - lambaadi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
31-Mar-2020 10:51 am

உலகின் ஒட்டுமொத்த
நீதி நூல்களையும்
ஒரே வார்த்தையில்
மொழி பெயர்த்தால்
அதன் பெயர் 
" கொரோனா"....

ஆறறிவு மனிதனுக்கு
ஒரு செல் கூட அற்ற
நுண்ணுயிர் ஒன்று
உபதேசம் செய்கிறது...

மனித இனத்தின்
மீதான இந்த
எச்சரிக்கை மணி
உலக அசரீரியாக
ஒரு சேர ஒலிக்கிறது...

தலைகனத்தின்
உச்சத்தில்
உலகினை ஆட்டிப்படைத்திட்ட
வல்லரசுகளின் உச்சந்தலையில்
இயற்கை கொடுத்த
சம்மட்டி அடியிது...

செவ்வாய் கிரகத்தில்
புகுந்து
வீடு கட்ட திட்டமிட்டவனின்
நுரையீரலில் புகுந்து
கூடு கட்டிக் கொண்டிருக்கிறது
ஒரு சிறு கிருமி....

கடவுள் துகள்
கண்டுபிடித்தவனின்
கண்ணுக்குள்
விரலை விட்டு
ஆட்டிக்கொண்டிருக்கிறது
கண்ணுக்குத் தெரியா
நுண்ணுயிரொன்று...

கிரீடத்தையும் 
பிச்சைப் பாத்திரத்தையும்
தனது நோயென்னும்
துலாக்கோலில்
சமமாக எடைபோடுகிறது 
இந்த ஆச்சரியக் கிருமி..

பணம் பணமென்று
எதைப் பற்றியும்
கவலைப் படாது
ஓடியவனை
பிணம் பிணமாய்
சாலையில் சாய்த்திருக்கிறது
இந்த
(அ) சாதாரண நோய்..

இயற்கைக்கு எதிராக
தறிகெட்டு ஓடிய
மனித வர்க்கத்தின்
சுய நலத்தேரின்
அச்சாணியைப் பிடுங்கி
தீர்ப்பு எழுதிக் கொண்டிருக்கிறது
தீய நோயொன்று....

இன்றும்
அதே வானம்...
அதே சூரியன்...
அதே நிலா...
அதே கடல்...
அதே காற்று...
அதே மலை...
ஆனால் மனிதன்
நேற்று ஆடாத ஆட்டம் போட்டவன்...
இன்று அழுது புலம்புகிறான்...
நாளை...???

இயற்கை மட்டுமே
இங்கு மாறாதது...
இந்த உலகம் இயற்கையினுடையது..
நாமெல்லாம்
தற்காலிக ஒப்பந்தக்காரர்கள்
இங்கு
எதையுமே
பங்கு போடவோ...
பாகம் பிரிக்கவோ...
பங்கம் விளைவிக்கவோ
உரிமையற்றவர்கள்...
இதைப் பின்பற்றாததன்
விளைவு...
அழிந்து கொண்டிருக்கிறோமென்று
அழுது கொண்டிருக்கிறோம்...

விமானங்களற்ற உச்சிவானம்...
கப்பல்களற்ற நடுக்கடல்...
வாகனங்களற்ற சாலை...
புகைமண்டலமற்ற வாயுமண்டலம்...
தொலைவில் கேட்கும்
பறவையின் ஒலி...
காற்றோடு பேசும்
இலைகளின் மொழி..
இத்தனை சோகத்திலும்
அனுபவித்திட
எத்தனையோ இருக்கத்தான் செய்கிறது...

இனி 
இந்த உலகத்தை இயற்கையிடம்
ஒப்படைப்பதைத் தவிர
வேறு வழியில்லை...

இயற்கையே விஞ்ஞானி...
இயற்கையே ஆசான்...
இயற்கையே இறைவன்...

மேலும்

lambaadi - எண்ணம் (public)
31-Mar-2020 10:51 am

உலகின் ஒட்டுமொத்த
நீதி நூல்களையும்
ஒரே வார்த்தையில்
மொழி பெயர்த்தால்
அதன் பெயர் 
" கொரோனா"....

ஆறறிவு மனிதனுக்கு
ஒரு செல் கூட அற்ற
நுண்ணுயிர் ஒன்று
உபதேசம் செய்கிறது...

மனித இனத்தின்
மீதான இந்த
எச்சரிக்கை மணி
உலக அசரீரியாக
ஒரு சேர ஒலிக்கிறது...

தலைகனத்தின்
உச்சத்தில்
உலகினை ஆட்டிப்படைத்திட்ட
வல்லரசுகளின் உச்சந்தலையில்
இயற்கை கொடுத்த
சம்மட்டி அடியிது...

செவ்வாய் கிரகத்தில்
புகுந்து
வீடு கட்ட திட்டமிட்டவனின்
நுரையீரலில் புகுந்து
கூடு கட்டிக் கொண்டிருக்கிறது
ஒரு சிறு கிருமி....

கடவுள் துகள்
கண்டுபிடித்தவனின்
கண்ணுக்குள்
விரலை விட்டு
ஆட்டிக்கொண்டிருக்கிறது
கண்ணுக்குத் தெரியா
நுண்ணுயிரொன்று...

கிரீடத்தையும் 
பிச்சைப் பாத்திரத்தையும்
தனது நோயென்னும்
துலாக்கோலில்
சமமாக எடைபோடுகிறது 
இந்த ஆச்சரியக் கிருமி..

பணம் பணமென்று
எதைப் பற்றியும்
கவலைப் படாது
ஓடியவனை
பிணம் பிணமாய்
சாலையில் சாய்த்திருக்கிறது
இந்த
(அ) சாதாரண நோய்..

இயற்கைக்கு எதிராக
தறிகெட்டு ஓடிய
மனித வர்க்கத்தின்
சுய நலத்தேரின்
அச்சாணியைப் பிடுங்கி
தீர்ப்பு எழுதிக் கொண்டிருக்கிறது
தீய நோயொன்று....

இன்றும்
அதே வானம்...
அதே சூரியன்...
அதே நிலா...
அதே கடல்...
அதே காற்று...
அதே மலை...
ஆனால் மனிதன்
நேற்று ஆடாத ஆட்டம் போட்டவன்...
இன்று அழுது புலம்புகிறான்...
நாளை...???

இயற்கை மட்டுமே
இங்கு மாறாதது...
இந்த உலகம் இயற்கையினுடையது..
நாமெல்லாம்
தற்காலிக ஒப்பந்தக்காரர்கள்
இங்கு
எதையுமே
பங்கு போடவோ...
பாகம் பிரிக்கவோ...
பங்கம் விளைவிக்கவோ
உரிமையற்றவர்கள்...
இதைப் பின்பற்றாததன்
விளைவு...
அழிந்து கொண்டிருக்கிறோமென்று
அழுது கொண்டிருக்கிறோம்...

விமானங்களற்ற உச்சிவானம்...
கப்பல்களற்ற நடுக்கடல்...
வாகனங்களற்ற சாலை...
புகைமண்டலமற்ற வாயுமண்டலம்...
தொலைவில் கேட்கும்
பறவையின் ஒலி...
காற்றோடு பேசும்
இலைகளின் மொழி..
இத்தனை சோகத்திலும்
அனுபவித்திட
எத்தனையோ இருக்கத்தான் செய்கிறது...

இனி 
இந்த உலகத்தை இயற்கையிடம்
ஒப்படைப்பதைத் தவிர
வேறு வழியில்லை...

இயற்கையே விஞ்ஞானி...
இயற்கையே ஆசான்...
இயற்கையே இறைவன்...

மேலும்

lambaadi அளித்த எண்ணத்தை (public) Tanu மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
05-Mar-2016 7:03 pm

வேறு  நிலாக்கள் 28 பாலா 
பார்வையற்றவனும் ஓவியமும்ஒரு நாள் பரிசுபெற்ற 
ஓவியமொன்று 
பார்வையற்ற ஒருவனைக் காண 
அவனில்லம் தேடி வந்தது 
குனிந்த படி 
ஆர்மோனியத்தை வாசித்துக்கொண்டிருந்த 
அவன் 
கதவோரம் நின்றுகொண்டிருந்த 
தன்னை அடையாளம் 
காண முடியாததால் 
தொண்டையை செருமியது ... 
செருமிய ஓவியத்தின் 
குரல் கேட்டு 
விசாரிக்கலானான் ... 
ஓவியம் சொல்லிற்று .. 

வண்ணங்களின் கலவையில் 
உதிரம் பெற்று 
தூரிகையின் ஸ்பரிசத்தால் 
உருவம் பெற்று 
விரல்களின் விளையாடலால் 
உயிர் பெற்று 
கண்களால் மோட்சம் பெற்று 
சாகாவரம் பெற்ற 
சுவர்கப்பொன்னோவியம் என்றது ... 

பார்வையற்றவன் சொன்னான் 
விழியுணர முடியா 
செவிப் பிரதேசத்தின் 
ஒலிப் பிரஜைநான் 
என் ஆலாபனைகள் 
காற்றில் விரல் கோதும் போது 
ஆத்மாவின் 
எல்லாத் துளைகளிலும் 
மயிற்பீலி மதுரமிசைக்கும் 
புவிபுலர 
புல்லாங்குழலில் நான் நுழைந்தால் 
விழி மயிலிரண்டும் 
தானாய் நடனமாடுமென்றான் .... 

உடனே ஓவியமுருகி 
இசையாய் ஓடி 
ஆர்மோனியத்திற்குள் பாய்ந்தது 
வண்ணங்களனைத்தும் 
ஸ்ருதியை தந்திகளின் 
கம்பிகளில் கலந்தது 
செவியிரண்டும் விழிகளாய் 
திறந்திட 
பார்வையற்றவன் ஓவியத்தை 
ருசித்துப் பருகியபடி 
ஆர்மோனியத்தின் தாளக்கட்டைகளை 
தூரிகையாக்கி 
தனதிசையாலொரு 
புதிய ஓவியத்தை 
ஒலிகளால் வரையத்தொடங்கினான்... 
அது ஒளியோவியமாய் 
ஒரு நிலவென மாறி 
ஓடும் நதிநீரினில் 
தனது ஒளியினை கரைத்தது ... 

ஓவியம் பார்வையற்றவனின் 
இசைமேவும் விரல்களைபிடித்து 
நதி நீரில் அமிழ்த்தியது 
அவன் நீரின் சில்லிடலில் 
நிலவோவியத்தின் வண்ணமுணர 
நிலவு பெருமிதத்தின் 
வெட்கத்தினால் 
மேகங்களுக்குள் ஒளிந்தோடிட 
பார்வையற்றவன் ஓவியனானான் 
ஓவியம் இசையாகியது .

மேலும்

போற்றுதற்குரிய அரிய படைப்பு பாராட்டுக்கள் கற்பனை புது யுகம் வாழ்வியல் தத்துவம் தமிழ் அன்னை ஆசிகள் 24-Oct-2017 6:25 am
ஓவியமும் பார்வையற்றவனும் முன்ஜென்மத்தில் காதலர்களாக இருந்திருப்பார்களோ..! லம்பாடி அவர்களே நீர்தான் அவர்களின் தூரிகையாகவும் ஆர்மோனியமாகவும் இருந்திருப்பீரோ..! என்னொவொரு வர்ணஜாலம் உங்கள் கவிதையில் ...! 05-Mar-2016 7:37 pm
lambaadi - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2016 1:58 pm

புரட்சித் தாயே...

போர்...
போர்க்களம்...
போராட்டம்...
எதிரிகள்...
நயவஞ்சகம் ...
வெற்றி...
தோல்வி...யென
இறுதிவரை
போர்களங்களையே
தன் பொற்களங்களாக்கிய
வீரத் திருமகளே...

உன் கம்பீரத்தின்
முன்னே..
தலைமைச்செயலகமே
தாழ்பணிந்ததே...

உன்
ஒற்றைச்சுட்டுவிரலில்
உலக உருண்டையில்
தமிழகம்
தனியே சுழன்றதே...

உன் விழுப்புண்கள்
ஒவ்வொன்றையும்
வெற்ற்ப்படிக்கட்டுகளாக்கி
அம்முவாகிய நீ தமிழகத்தின் அம்மாவாகினாயே..

தங்க நிறம் கொண்ட
சிங்க நகர் தலைவியே...
நீ அறிவித்த
110 விதிகளில்
உன் விதி எதுவென்று
தெரியாமல்
போய்விட்டதே...

திரும்பி வருவாய்
என்று தானேயிருந்தோம்..

இரும்புக்குள

மேலும்

lambaadi - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Aug-2016 6:30 pm

கோவர்த்தனகிரி
குடைபிடித்த
குழலூதியே !
இங்கே
விதிக் கோரத்தாண்டவத்தால்
கொடும் மழையில்
நனைந்து தேம்பி
இரட்சிப்பாரின்றியும்-
ஒதுங்க இடமின்றியும்
உனதருமை மேய்ச்சல்கள்
வழி தெரியாது
பாதை மாறி
கசாப்புக் கடை
வீதிகளில் பயணிக்கிறார்கள்
நீயோ
இன்னமும் இரக்கமின்றி
கோபியரோடு கொஞ்சிக்கொண்டிருக்கிறாய் !

த்ருனாவிரதச் சுழற்காற்றினை
உன் பாரம் கூட்டி
விழ வைத்த
யதுகுல திலகனே -
கொடும் பூதனைகள்
மார்பு திறந்து கிடக்கிறார்கள்
யார் யாரோ அமுதருந்தி
அகிலத்தின் பெரும்பகுதியை
அழித்துக் கொண்டிருக்க
நீ
இன்னமும் பாராமுகமாய்
அன்றலர்ந்த தாமரை மலர்சூடி
பாம்புப் படுக்கையில்

மேலும்

காவியங்களின் சாயலில் கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Aug-2016 9:48 am
lambaadi - எண்ணம் (public)
05-Mar-2016 7:03 pm

வேறு  நிலாக்கள் 28 பாலா 
பார்வையற்றவனும் ஓவியமும்ஒரு நாள் பரிசுபெற்ற 
ஓவியமொன்று 
பார்வையற்ற ஒருவனைக் காண 
அவனில்லம் தேடி வந்தது 
குனிந்த படி 
ஆர்மோனியத்தை வாசித்துக்கொண்டிருந்த 
அவன் 
கதவோரம் நின்றுகொண்டிருந்த 
தன்னை அடையாளம் 
காண முடியாததால் 
தொண்டையை செருமியது ... 
செருமிய ஓவியத்தின் 
குரல் கேட்டு 
விசாரிக்கலானான் ... 
ஓவியம் சொல்லிற்று .. 

வண்ணங்களின் கலவையில் 
உதிரம் பெற்று 
தூரிகையின் ஸ்பரிசத்தால் 
உருவம் பெற்று 
விரல்களின் விளையாடலால் 
உயிர் பெற்று 
கண்களால் மோட்சம் பெற்று 
சாகாவரம் பெற்ற 
சுவர்கப்பொன்னோவியம் என்றது ... 

பார்வையற்றவன் சொன்னான் 
விழியுணர முடியா 
செவிப் பிரதேசத்தின் 
ஒலிப் பிரஜைநான் 
என் ஆலாபனைகள் 
காற்றில் விரல் கோதும் போது 
ஆத்மாவின் 
எல்லாத் துளைகளிலும் 
மயிற்பீலி மதுரமிசைக்கும் 
புவிபுலர 
புல்லாங்குழலில் நான் நுழைந்தால் 
விழி மயிலிரண்டும் 
தானாய் நடனமாடுமென்றான் .... 

உடனே ஓவியமுருகி 
இசையாய் ஓடி 
ஆர்மோனியத்திற்குள் பாய்ந்தது 
வண்ணங்களனைத்தும் 
ஸ்ருதியை தந்திகளின் 
கம்பிகளில் கலந்தது 
செவியிரண்டும் விழிகளாய் 
திறந்திட 
பார்வையற்றவன் ஓவியத்தை 
ருசித்துப் பருகியபடி 
ஆர்மோனியத்தின் தாளக்கட்டைகளை 
தூரிகையாக்கி 
தனதிசையாலொரு 
புதிய ஓவியத்தை 
ஒலிகளால் வரையத்தொடங்கினான்... 
அது ஒளியோவியமாய் 
ஒரு நிலவென மாறி 
ஓடும் நதிநீரினில் 
தனது ஒளியினை கரைத்தது ... 

ஓவியம் பார்வையற்றவனின் 
இசைமேவும் விரல்களைபிடித்து 
நதி நீரில் அமிழ்த்தியது 
அவன் நீரின் சில்லிடலில் 
நிலவோவியத்தின் வண்ணமுணர 
நிலவு பெருமிதத்தின் 
வெட்கத்தினால் 
மேகங்களுக்குள் ஒளிந்தோடிட 
பார்வையற்றவன் ஓவியனானான் 
ஓவியம் இசையாகியது .

மேலும்

போற்றுதற்குரிய அரிய படைப்பு பாராட்டுக்கள் கற்பனை புது யுகம் வாழ்வியல் தத்துவம் தமிழ் அன்னை ஆசிகள் 24-Oct-2017 6:25 am
ஓவியமும் பார்வையற்றவனும் முன்ஜென்மத்தில் காதலர்களாக இருந்திருப்பார்களோ..! லம்பாடி அவர்களே நீர்தான் அவர்களின் தூரிகையாகவும் ஆர்மோனியமாகவும் இருந்திருப்பீரோ..! என்னொவொரு வர்ணஜாலம் உங்கள் கவிதையில் ...! 05-Mar-2016 7:37 pm
lambaadi - கவித்தாசபாபதி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jan-2016 2:23 am



முதல் எண்ணம்
வேறு நிலாக்கள் 45 - கார்த்திகா
வேறு நிலாக்கள் 44 - ருத்ரா நாகன்
வேறு நிலாக்கள் 43- கவித்தாசபாபதி
வேறு நிலாக்கள்-42-கனா காண்பவன்
வேறு நிலாக்கள் -41சுசீந்திரன்.
வேறு நிலாக்கள் 40 - ஈஸ்வரன் ராஜாமணி
வேறு நிலாக்கள் 39 - ஈஸ்வரன் ராஜாமணி
வேறு நிலாக்கள் 38 வெள்ளூர் ராஜா
வேறு நிலாக்கள் 37 உருவக கவிஞர்கள்
வேறு நிலாக்கள் 36 எழுத்து கவிஞர்கள்
வேறு நிலாக்கள் 35- நிலாகண்ணன்
வேறு நிலாக்கள் 34-கார்த்திகா
 
வேறு நிலாக்கள் 33-கவிஜி
வேறு நிலாக்கள்-32-சுஜய் ரகு
வேறு நிலாக்கள் 31 - ஜி ராஜன்
வேறு நிலாக்கள் 30 நா முத்துகுமார்
வேறு நிலாக்கள் 29 ஈழக்கவிஞர் சோலைக்கிளி
வேறு நிலாக்கள் 28 பாலா
வேறு நிலாக்கள் 27 சேயோன் யாழ்வேந்தன்
வேறு நிலாக்கள்-26 புலமி
வேறு நிலாக்கள் 25 கவித்தாசபாபதி
வேறு நிலாக்கள் 24 மனோ ரெட்
வேறு நிலாக்கள் 23- வெள்ளூர் ராஜா
வேறு நிலாக்கள் 22 நிலாகண்ணன்
வேறு நிலாக்கள் 21 சிற்பி பாலசுப்பிரமணியம்
வேறு நிலாக்கள் 20 ரமேஷாலம்
வேறு நிலாக்கள் 19 கட்டாரி 
வேறு நிலாக்கள் 18 பழநி பாரதி
வேறு நிலாக்கள் -17 சுசீந்திரன்
வேறு நிலாக்கள் -16 சுஜய் ரகு
வேறு நிலாக்கள் 15 - குமரேசன் கிருஷ்ணன்
வேறு நிலாக்கள் 14 - ஜின்னா
வேறு நிலாக்கள் 13 பிரணவன்
வேறு நிலாக்கள் 12 -கார்த்திகா
வேறு நிலாக்கள் 11 - G . ராஜன்
வேறு நிலாக்கள் 10 கார்த்திகா முதல் கலாம் வரை
வேறு நிலாக்கள் 9 ரமேஷாலம்
வேறு நிலாக்கள் 8 அகன்
வேறு நிலாக்கள்- 7 கிருத்திகாதாஸ்
வேறு நிலாக்கள்-6 நிலாகண்ணன்
வேறு நிலாக்கள் 5 கட்டாரி
வேறு நிலாக்கள் -4 பாலா
வேறு நிலாக்கள்3புலமி
வேறுநிலாக்கள்2கவிஜி
வேறு நிலாக்கள் 1 பிரணவன்

மேலும்

கற்பனை திறன் அற்புதம் ... 16-Mar-2016 3:32 pm
தனியாக பதிவிடுங்கள் தோழரே உங்கள் படைப்பாக தலைப்பில் "வேறு நிலாக்கள் 28 பாலா " என்று இருக்கட்டும், உள்ளே அதே படத்தையும், பார்வையற்றவனும் ஓவியமும் என்ற தலைப்பை கொடுங்கள் . மேற்கண்ட கவிதையின் இணைப்புகளை சொடுக்கினால் தெரியும். 05-Mar-2016 5:59 pm
வேறு நிலாக்கள் 28 ஒரு நாள் பரிசுபெற்ற ஓவியமொன்று பார்வையற்ற ஒருவனைக் காண அவனில்லம் தேடி வந்தது குனிந்த படி ஆர்மோனியத்தை வாசித்துக்கொண்டிருந்த அவன் கதவோரம் நின்றுகொண்டிருந்த தன்னை அடையாளம் காண முடியாததால் தொண்டையை செருமியது ... செருமிய ஓவியத்தின் குரல் கேட்டு விசாரிக்கலானான் ... ஓவியம் சொல்லிற்று .. வண்ணங்களின் கலவையில் உதிரம் பெற்று தூரிகையின் ஸ்பரிசத்தால் உருவம் பெற்று விரல்களின் விளையாடலால் உயிர் பெற்று கண்களால் மோட்சம் பெற்று சாகாவரம் பெற்ற சுவர்கப்பொன்னோவியம் என்றது ... பார்வையற்றவன் சொன்னான் விழியுணர முடியா செவிப் பிரதேசத்தின் ஒலிப் பிரஜைநான் என் ஆலாபனைகள் காற்றில் விரல் கோதும் போது ஆத்மாவின் எல்லாத் துளைகளிலும் மயிற்பீலி மதுரமிசைக்கும் புவிபுலர புல்லாங்குழலில் நான் நுழைந்தால் விழி மயிலிரண்டும் தானாய் நடனமாடுமென்றான் .... உடனே ஓவியமுருகி இசையாய் ஓடி ஆர்மோனியத்திற்குள் பாய்ந்தது வண்ணங்களனைத்தும் ஸ்ருதியை தந்திகளின் கம்பிகளில் கலந்தது செவியிரண்டும் விழிகளாய் திறந்திட பார்வையற்றவன் ஓவியத்தை ருசித்துப் பருகியபடி ஆர்மோனியத்தின் தாளக்கட்டைகளை தூரிகையாக்கி தனதிசையாலொரு புதிய ஓவியத்தை ஒலிகளால் வரையத்தொடங்கினான்... அது ஒளியோவியமாய் ஒரு நிலவென மாறி ஓடும் நதிநீரினில் தனது ஒளியினை கரைத்தது ... ஓவியம் பார்வையற்றவனின் இசைமேவும் விரல்களைபிடித்து நதி நீரில் அமிழ்த்தியது அவன் நீரின் சில்லிடலில் நிலவோவியத்தின் வண்ணமுணர நிலவு பெருமிதத்தின் வெட்கத்தினால் மேகங்களுக்குள் ஒளிந்தோடிட பார்வையற்றவன் ஓவியனானான் ஓவியம் இசையாகியது . .....லம்பாடி. .. 05-Mar-2016 5:42 pm
lambaadi அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Jan-2016 9:37 pm

இந்த வார கல்கியில் பிரசுரமான எனது கவிதை

மேலும்

பாராட்டுக்கள் தட்டச்சு செய்து தனி பதிவாக பதிவிடுங்கள். நன்றி 06-Mar-2016 7:01 am
மிக்க நன்றி சந்தோஷ்....நிச்சயம் பதிவிடுகிறேன் 24-Jan-2016 7:57 pm
மிக்க நன்றி நட்பே 24-Jan-2016 7:56 pm
ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே 24-Jan-2016 7:52 pm
lambaadi அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Jan-2016 2:32 pm

இன்றைய ஜுனியர் விகடனில் வெளிவந்த எனது கவிதை

மேலும்

நன்றி. ....சந்தோஷ். .. 24-Jan-2016 10:47 am
நன்றி. ....சந்தோஷ் 24-Jan-2016 10:45 am
நன்றி. ....நண்பரே 24-Jan-2016 10:45 am
நன்றி நண்பரே. .. 24-Jan-2016 10:44 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
12-Dec-2015 5:27 pm

முண்டாசு கவிஞனே!
முத்தமிழ் அறிஞனே!
வண்டுக்கும் மலர் என்றாய்
தண்டுக்கும் மலர் என்றாய்

கடலில் ஆடும் அலையே!!
பாரதி பாடல் கேட்டாயோ?
மனையில் மணக்கும் துளசியே!!
காற்று உனக்கு மேவும் விரலா?

புதுமையில் தமிழ் பிறந்தது
அதில் உனக்கு ஓர் நீராட்டு
பொதிகையில் வீசும் காற்றே!!
பாற்கடலில் பாரதிக்கு நாவாட்டு.

கவிதையில் தவழும் குழந்தை
உன் வரிகள் பிடித்துதான் எழுகிறான்.
வானுக்கு மேகம் என்றால் அழகு
தமிழுக்கு பாரதி என்றால் பேரழகு

எனக்கும் வேண்டும் அமுதம்
பாடவா அந்தியில் பாஞ்சாலி சபதம்
பச்சைக்கிளிகள் மடி தூங்க
கிளைக்குள் கேட்குது குயில் பாட்டு

காலை பனியில் குளிக்கும்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 09-Feb-2016 2:15 pm
சிந்தனை மிகவும் சிறப்பு 09-Feb-2016 2:00 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 24-Jan-2016 10:13 am
பாராட்டுக்கள் 24-Jan-2016 12:14 am
lambaadi - lambaadi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jul-2015 3:23 pm

இந்தியத் தென்கோடியிலொரு
ஏழைச் சிப்பியினில்
உருவான விஞ்ஞான முத்தொன்று
உழைப்பால் உயர்ந்து
நெற்றி தவழும் வெண்பட்டுக்
குழலோடும் ..
பவள மல்லிச்சிரிப்போடும்
இமயத்தையே மிஞ்சி
உலகே சலாம் செய்யும் "கலாம்"_ஆனது ...

தேசத்தை மணந்து கொண்ட
இந்த பிரமச்சர்ய தேவவிரதன்(பீஷ்மர்)
கனவுகளின் நம்பிக்கையை
கணைகளென தொடுத்தபோதெல்லாம்
"அக்னிச் சிறகு" முளைத்து
மாணவர்கள் மாற்றம் பெற்றனர். ..

வல்லரசுகளை வாய்பிளக்க வைத்த
இந்த இந்திய ஏவுகணை
திரும்பியே வரமுடியாத
தொலைவிற்க்கு விண்ணில்
பாய்ந்து விட்டதே. ...

இந்திய இளைஞர்களின்
எதிர்காலத்திற்கு
வழிகாட்டிய
விஞ்ஞான விளக்கொன்று

மேலும்

காலத்தின் போக்கில் கலாம் விளைந்ததன் காரணத்தால் அக்கினிச் சிறகுகள் சிறகொடிந்து போனது அவர் புகழ் பாடும் இக்கவி மகிமை நிறைந்தது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Dec-2015 11:55 pm
ஈடு சொல்ல முடியாதவருக்கு ஏற்ற அருமையான அஞ்சலி. 28-Jul-2015 8:44 pm
சிறப்பான அஞ்சலி கவி . 28-Jul-2015 6:00 pm
கம்பீரமான கவிதாஞ்சலி .. 28-Jul-2015 5:55 pm
lambaadi அளித்த படைப்பை (public) ப்ரியஜோஸ் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
10-Jul-2015 8:01 pm

புறத் திரள்களேதுமற்ற
அகத்திரள் நிறையுனது
ஆழ்தூண்டில் மாட்டுதலின்
தகவுறு தக்கைகள்
உள்ளிளுக்கையில்
புலப்படும்
வலி மண்டலங்களின்
அன்புச் சுழலில்
சிக்கித் தவிக்கிறதென்
இதயத்தின் தொண்டை...

பதிவுரிமமேதுமற்று
தன்னிச்சையாகவே
கற்பிதக் கோட்பாடுகளேதுமின்றி
உன்னை என்னில்
ஒரு பொருட்டுமின்றி
புரிபடாதவொரு
ஆதிமொழியின்
பாறைக்கல்வெட்டென
பதித்து செல்கிறாய். .

முகமைகளேதுமற்ற
உனது
செயல்பாடுகளின் வழி
செறிந்து பொழிகிற
பெருமழையாய்
மன வெளிவழியே
கசிந்து செல்கிற
உன் சிறுதுளிகளில்
என் சோகவடிநிலங்களின்
விரக்தி வண்டல்கள்
விளைந்து செழிக்கின்றன. ..

உனதக நிலைப்புத்த

மேலும்

அழகாக தமிழ் சொற்கள் உங்கள் கைவிரலின் மோதிரம் அதில் பிடிக்கப்பட்ட பேனா மூடப்படாத கவிதை புத்தகம் 13-Dec-2015 11:57 pm
அருமை தோழா 26-Jul-2015 7:09 pm
மிக்க நன்றி ருத்ரா 13-Jul-2015 7:31 pm
நன்றி நட்பே 13-Jul-2015 7:30 pm
மேலும்...
கருத்துகள்

மேலே