தமிழுக்கு தமிழால் நீராட்டு --முஹம்மத் ஸர்பான்

முண்டாசு கவிஞனே!
முத்தமிழ் அறிஞனே!
வண்டுக்கும் மலர் என்றாய்
தண்டுக்கும் மலர் என்றாய்

கடலில் ஆடும் அலையே!!
பாரதி பாடல் கேட்டாயோ?
மனையில் மணக்கும் துளசியே!!
காற்று உனக்கு மேவும் விரலா?

புதுமையில் தமிழ் பிறந்தது
அதில் உனக்கு ஓர் நீராட்டு
பொதிகையில் வீசும் காற்றே!!
பாற்கடலில் பாரதிக்கு நாவாட்டு.

கவிதையில் தவழும் குழந்தை
உன் வரிகள் பிடித்துதான் எழுகிறான்.
வானுக்கு மேகம் என்றால் அழகு
தமிழுக்கு பாரதி என்றால் பேரழகு

எனக்கும் வேண்டும் அமுதம்
பாடவா அந்தியில் பாஞ்சாலி சபதம்
பச்சைக்கிளிகள் மடி தூங்க
கிளைக்குள் கேட்குது குயில் பாட்டு

காலை பனியில் குளிக்கும் மயில்கள்
மாலை மெத்தையில் கவியாகும்.
உலகம் எதுவரை நீள்கிறதோ அதுவரை
தமிழுக்கு உன்னால் உடைசெய்வேன் பாரதியே!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (12-Dec-15, 5:27 pm)
பார்வை : 178

மேலே