மனோஜ்குமார் பாண்டியன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மனோஜ்குமார் பாண்டியன் |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 26-Sep-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 115 |
புள்ளி | : 3 |
இரத்தத்தில் கவிதை தெளித்து கடினமான காதல்கள்..
பண கணக்கு பையிருப்பு எனக்கு என
கணக்கு காதல்கள்..
முத்தமிடலை முழுநேரமாய் முயலும்
மையல் காதல்கள்...
காத்திருப்பும் பின்தொடர்வதுமே தகுதி என
ஒருதலை காதல்கள்..
பிறன்மனை மட்டும் நோக்கும் தொடர்களுக்கு பிரியமான
தருதலை காதல்கள்..
இவை எல்லாம் தாண்டியும்...
சத்தமில்லாமல் மௌன மொழி பேசி...
ஒற்றை பார்வையினில் மோகந்தனிந்து..
கை பிடித்தவளே கடைசிவரை என்றும்..
காதல் கொண்டவனே கணவன் எனவும்..
பிற்போக்காய் வாழும் சில காதலர்களால்...
வாழ்கிறது ஆங்காங்கே....
"காதலும்"
--- மனு
வெண்ணிலா வெட்கத்தில்
மேக திரை போடும்
தருணம் உணர்கின்றேன்!
..
...
....
.....
நீ நாணம் கொண்டு
ஆடை திருத்தும் பாங்கில் !
மனோஜ்குமார் பாண்டியன்
!****மனு*****!
மெல்லிய காற்று இதமாய் தழுவி செல்ல!
கடலரசி, மாலை கதிரவனை கட்டி தழுவி, தனக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் இழுத்து கொள்ள! அங்கே ஒரு கூடல் அழகாய் அரங்கேறி கொண்டிருக்கின்றது!
நாகரீகம் கருதி நிலா மகள் ஓரமாய் எட்டி பார்த்து காத்திருந்தாள், இந்த கூடல் முடியும் தருணத்திற்கு!
இயற்கையை ரசிப்பது என்றும் சலிக்காதது என நினைத்து கொண்டே அருகில் திரும்பி பார்த்தேன்!
இயற்கையின் கூடல் நடுவே உன்னுடன் ஒரு ஊடல்!
சில நேரங்களில் ஊடலுக்கு காரணம் தேவை இல்லை! சிறு நினைப்பும் சிறு பார்வையும் மட்டும் கூட போதும்! ஏன் காரணமே இன்றி வரும் ஊடல்கள் காதலில் அதிகம்!
கடற்கரையில் அருகே தழுவாத கண்ணியமான இடைவெளியில் நீ!
சொல்லாமல் வருவதுதான் காதல் என்றேன்
சொல்லாமல் விட்டாலது சோகம் என்றாய்.
நில்லாமல் ஓடிடும் நீயோர் நிலவு என்றேன்
பொல்லாத கற்பனையைக் கைவிடு என்றாய்
கைவிட மாட்டேன் காதலியே என்றேன்
கையடித்துச் செய் கலியாணம் என்றாய்
இல்லாமல் இருப்பதுதான் அழகு என்றேன்
இல்லாமல் என்றால் ஆடையா என்றாய்
பொல்லாத ஆண்மகன் நானல்ல என்றேன்
சல்லாபம் சொல்லாமல் தெரியும் என்றாய்.