காதலும் வாழுமோ
இரத்தத்தில் கவிதை தெளித்து கடினமான காதல்கள்..
பண கணக்கு பையிருப்பு எனக்கு என
கணக்கு காதல்கள்..
முத்தமிடலை முழுநேரமாய் முயலும்
மையல் காதல்கள்...
காத்திருப்பும் பின்தொடர்வதுமே தகுதி என
ஒருதலை காதல்கள்..
பிறன்மனை மட்டும் நோக்கும் தொடர்களுக்கு பிரியமான
தருதலை காதல்கள்..
இவை எல்லாம் தாண்டியும்...
சத்தமில்லாமல் மௌன மொழி பேசி...
ஒற்றை பார்வையினில் மோகந்தனிந்து..
கை பிடித்தவளே கடைசிவரை என்றும்..
காதல் கொண்டவனே கணவன் எனவும்..
பிற்போக்காய் வாழும் சில காதலர்களால்...
வாழ்கிறது ஆங்காங்கே....
"காதலும்"
--- மனு