காலநிலை கசிந்த இரண்டாவது பயணம்
காலநிலை கசிந்த இரண்டாவது பயணம்
-----------------------------------------------
அஃரிணைகள் அறிந்திருக்கும்
பெட்ரோலைத் தெளித்த வாசனையில்
ஆரம்பித்த பயணமது
கைதொடும் இருக்கையில் அவள்
இரண்டு மணிநேரத்துக்கு முன்னர்தான்
தெளிந்த வானம்
மனசு எண்ணிக்கொள்ளும்
உருவங்களாய் மேகங்களை
கிழித்தெறிந்திருந்தது காற்று
மரங்களை ஓட்டுகிறார்,,,
இயற்கையழகை ஒவ்வொன்றாகவும்
கூட்டாகவும் இழுத்துப்போடுகிறார்
சலவைத் தொழிலாளிகள் விவசாயிகள் இன்னும் பலர்
பாவம் ஆற்றில் விழுந்திருப்பார்கள்
மரங்கள் விழுந்திருக்கும்
கண்ணாடி திறந்தால் வேகமாய் ஓடும்
மீண்டும் மூடினால் மெதுவாய் ஓடுவதாய்
ஓர் உணர்வு அவளைப்பார்க்கையில்,,,
புத்தம் புது மழை
நனைய ஆசை என்னைவிட அவளுக்கு
தூவானம் குறைந்த
புழுதி குலைத்த மழை
இதில் காய்ச்சலும் தடுமலும்
கலந்திருக்கும் சொல்லி நகர்ந்தாள்
பயணிக்கிறேன்,