இன்னும் குழந்தையாக

இடைவெளி வெளிச்சத்தில்
சாதித்த நீர்வீழ்ச்சி தூறல்களில்
ஒருபுறம் ரத்த ரசாயனம்
முற்பிறப்பு சோகத்தை
முப்பது வெள்ளிக் காசுகளுக்கு
விற்பனை செய்யும்.

இவனின் மறுசுழற்சி பட்டத்தை
பட்டயம் போட்டு குறித்துச் சென்றவர்கள்
நேற்றைய காற்றில்
விளைவித்ததை தூற்றிட்ட போது
உருப்படாத நகலோடு
உயரத் தூக்கி வீசினார்கள்.

வானத்து வல்லூறு
விசேடப் பொழுதுகளில்
அதிக சத்தத்தில் அது வந்து பார்த்தபோது
ஒருசேர குரலிட்டார்கள்
:பரமாத்மா வந்து விட்டார்:

அப்போது நடந்த அந்த நெரிசலில்
சிக்குண்டு செத்தவர்கள்
சாவுக்கு முன் முணுமுணுத்த
கிருஷ்ணா காப்பாற்று என்ற ஈனசுரம்
என்காதில் மட்டுமல்ல
அந்த பிராந்தியத்தில்
இன்னும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது .

எழுதியவர் : சுசீந்திரன். (9-Nov-15, 5:06 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
பார்வை : 84

மேலே