முத்துமணி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  முத்துமணி
இடம்:  ஜகார்த்தா, இந்தோனேசியா
பிறந்த தேதி :  18-Nov-1959
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Sep-2015
பார்த்தவர்கள்:  199
புள்ளி:  25

என்னைப் பற்றி...

தமிழ் ஆர்வலன்
அன்பு ஊர்வலன்
என்பதைத் தவிர
மன்பதைக்குச்
சொல்ல
ஏதுமற்றவன் -ஆயின்
தீதுமற்றவன்

என் படைப்புகள்
முத்துமணி செய்திகள்
முத்துமணி அளித்த படைப்பில் (public) Thanjai Guna மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Nov-2015 4:43 pm

தாய்

அவள்
உதிரத்தில் குளித்து
உயிர் வளர்த்தேன்..
அவள்
உதிரம் குடித்து
உடல் வளர்த்தேன்..

அவள்
உலகைக் கொடுத்தாள்,
உவகை கொடுத்தாள்
உணவைக் கொடுத்தாள்,
உணர்வைக் கொடுத்தாள்

அவள்
அடிகளில் தான்
அகிலம் அடக்கம்
ஆண்டவன் அவள்
அன்பினில் முடக்கம்

மேலும்

அழகான கவிதை நண்பரே வாழ்த்துக்கள் 05-Aug-2016 6:36 am
தாய்மை பாராட்டுக்கள் நன்றி 29-Feb-2016 2:35 am
நன்றிகள் பல 23-Nov-2015 5:54 am
அருமை...... விவரிக்க வார்த்தை இல்லை....... இதை உணர்ந்த எவரும் முதியோர் இல்லம் தேடுவதில்லை........ 21-Nov-2015 11:33 am
பிரதீப் ராஜேந்திரன் அளித்த படைப்பில் (public) Mythili Ramjee மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Nov-2015 8:21 am

10 மாதம் குடி இருந்த என் முதல் வாடகை வீட்டில் (கருவறையில்)
மீண்டும் ஒரு முறை வாழ்ந்து பார்க்க வேண்டும்....

கதற கதற என் அம்மா என்னை விட்டு சென்ற ஆரம்ப பள்ளியில்
மீண்டும் ஒரு முறை அமர்ந்து பார்க்க வேண்டும்....

அரக்கால் சட்டை மாட்டி அலுப்போடு நான் சென்ற பள்ளியை
மீண்டும் ஒரு முறை வியப்போடு சுற்றி பார்க்க வேண்டும்....

தோளோடு தோள் உரசி
கையோடு கை சேர்த்து
கதை 100 பேசிய என் முதல் தோழியை
மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும்....

மதபேதம் இல்லாமல், பந்தம் ஏதும் இல்லாமல், வேறுபாடு பார்க்காமல்
என் நண்பனின் எச்சில் உணவை
மீண்டும் ஒரு முறை ருசி பார்க்க வேண்டும்....

காதலின் ஆசை தூண்டி

மேலும்

எளிமையான , உண்மையான வரிகள்... 05-Mar-2016 9:38 am
பிழை திருத்தப்பட்டது நண்பரே. நன்றி. 23-Nov-2015 6:33 pm
நன்றி நண்பரே 23-Nov-2015 6:29 pm
அருமை நண்பா.... 20-Nov-2015 4:26 pm
உதய குமார் அளித்த படைப்பில் (public) Gopinathan Pachaiyappan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Nov-2015 11:03 am

மீண்டும் மீண்டும்
விதையுறை தேடி ஓட வேண்டும்
முளை விட...

மீண்டும் மீண்டும்
தரையை தேடி ஓட வேண்டும்
தளிர் விட...

மீண்டும் மீண்டும்
தண்ணீர் தேடி ஓட வேண்டும்
வேர் விட...

மீண்டும் மீண்டும்
சூரியன் தேடி ஓட வேண்டும்
இலைகள் வளர...

மீண்டும் மீண்டும்
வண்டுகள் தேடி மணம் வீச வேண்டும்
இனவிருத்தி செய்திட...

மீண்டும் மீண்டும்
சருகுகள் உதிர்த்திட அசைந்தாட வேண்டும்
வறுமை சமாளிக்க...

ஓரிடத்தில் நிற்க்கும் மரமே
மீண்டும் மீண்டும் இவ்வளவு ஓட
உலகை அல்ல
அண்டத்தையே சுற்ற போகும் மனிதா!
சின்ன தோல்விக்கே
சிறகொடிந்து விழுந்தால் எப்படி?
முதல் முயற்சியில் வென்றால் திறமைசாலி
மீண்டும் மீண்

மேலும்

அருமை நண்பா... 20-Nov-2015 4:29 pm
உம் பாடலோடு எம்மை ஓட வைத்ததையா உன் நடை.... அழகு 20-Nov-2015 3:33 pm
வருகைக்கும், பார்வைக்கும் மிக்க நன்றி நண்பரே... 16-Nov-2015 2:00 pm
ஓரிடத்தில் இருக்கும் மரமே ஓடாமலா இருக்கிறது என்பது அருமையான கற்பனை! வித்தியாசமான கற்பனையும் கூட! தொடர்ந்து வித்தியாசமான கற்பனைகளால் எழுத்து தளத்தை அழகுபடுத்துங்கள்! 16-Nov-2015 12:12 pm
முத்துமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2015 10:57 am

மீண்டும் மீண்டும்
ஆண்டும் கூடத்
தூண்டில் போட்டுத்
தூண்டித் துண்டாடும்
பதவியெனும் பாழும்
நாற்காலி!

உலகப் பந்தின்
ஒரு துளி இடந்தனை
சிலகாலம் வாழும் இந்த
மலசல மாசு தாங்கிய
சின்ன வாழ்வினுயிர்
தன் பெயரில் மாற்றிட
கலகம் செய்யும்
மீண்டும் மீண்டும்..

சுற்றம் மற்றும்
சூழுயர் உற்றம் தனில்
குற்றம் கண்டே
கூத்தாடும் நெஞ்சம்
மீண்டும் மீண்டும்.

பசி, காமம்,
பழியுடன் குரோதம்
பேதம், தற் பெருமை
ஓதும் மனிதம்
மீண்டும்.. மீண்டும்…

ஆயின்…

பதவி பட்டம்
பணமுடன் புகழும்
உதவி ஆகுமோ
உயிரொடுங்கு வேளை?
கதறி அழுதுக்
கலங்கி வேண்டினும்
சிதறிய காலம்
சேருமா

மேலும்

உமது வரிகளின் பொருள் தனில் பாவேந்தன் பாரதிதாசன் சுவாசம்தனை அடியேன் இலக்கியவாதிகள் அனைவரும் சுவாசிக்கும் வண்ணம் இப்படைப்பை அளித்தமைக்கு நன்றி........நன்றி.......நன்றி..... அன்பின் நழ்வாழ்த்துக்கள் அன்பரே !....... 21-Nov-2015 10:45 am
கவிதை அருமை !!! வாழ்த்துக்கள் !!! 21-Nov-2015 9:14 am
முத்துமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Nov-2015 4:09 pm

வரதட்சணை

அன்பே…
கல்யாணச் சந்தையில் நம்
காதல் விலைபேசப்பட்ட போது.
என்
ஆண்மை அவமானப் பட்டது

சொந்தங்களே தீப் பந்தங்களாக
நெஞ்சைச் சுட்டபோது
உயிரே பாரமானது
உணர்வே ஈரமானது..

தலை கவிழ்ந்து வாழ்வதை விட
தலை சாய்க்கத் துணிந்து விட்டேன்
உன்னில் வாழும் என்னுயிரை
உடனே எனக்குத் தருவாயா?

மேலும்

ஆண்மகன் மனமதுவும் இதுவானால்........ பெண்ணவள் மனமது என் கூறும் என்றறிவேன் இவ்வரிகளின் பிரதிபலிப்பாய்..... தொடரட்டும் ஏதுமற்ற உறவுகளுக்காய் எல்லாம் இழக்க காத்திருக்கும் இதயத்தின் வலிதனை வெளிப்படுத்தும் தங்களின் முயற்சி .......... 21-Nov-2015 10:52 am
நன்று.. நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 14-Nov-2015 12:11 am
முத்துமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Nov-2015 9:51 am

மரணம்

யுகம் யுகமாய் உண்ட பின்னும்
உயிர்ப்பசி அடங்கா
காய சண்டிகையே
காலச் சண்டாளியே!

மரண தேவதையே
சரித்திரங்களையும்
சகாப்தங்களையும்
வடிக்கின்ற காலத்தின்
கைகாரியே!

சக்கரவர்த்திகளையும்
சாமான்யர்களையும்
சமமாக அணைக்கின்ற
சமாதிக் காரிகை நீ!

உறவுக் கொடிகளின்
உதிர மலர்களை
பிரிவுக் கரங்களால்
உரித்தெடுத்து
அமைதி தெய்வத்திற்கு
அர்ச்சனை செய்கின்ற
சூன்யத் தாயின்
கைக்குழந்தை நீ!

முடிவின் முதலே
முதலின் முடிவே
குழப்பத்தின் தெளிவே
தெளிவின் குழப்பமே

நிச்சயமான நிதர்சனம் நீ
நிச்சயமில்லா நேரம் நீ
உயிரின்
உச்சம் நீ!- வாழ்வின்
எச்சம் நீ! எதன்
மிச்சம் நீ!

மேலும்

நன்றி தஞ்சையாரே 23-Nov-2015 5:52 am
என்னை நான் அறிந்த குமர பருவம் முதல் இப்பருவம் வரை நானும் விடைதேடுகிறேன் இன்றுவரை பதிலை எட்டவில்லை தாம் வினவிய இறுதி வினாவிற்கு......... இலக்கியச்சுவடுகள் இன்னும் காத்திருக்கின்றன வாழ்க்கை எனும் வழித்தடம் உமது அனுபவம் எனும் பாதம் பட...... 21-Nov-2015 11:03 am
நன்றி திரு கோபி.. 13-Nov-2015 10:15 am
அருமை அய்யா.... 13-Nov-2015 10:12 am
முத்துமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Nov-2015 9:04 am

இன்று ஏற்றும் தீப ஒளியில்...

சாதி சமயப்பூசல் வெடித்துச் சிதறட்டும்
அன்னிய சக்திகள் பார்த்துப் பதறட்டும்
அடிமையாக்க நினைப்போர் அலறிக் கதறட்டும்
சரிவினை நம் பாரதம் உதறட்டும்- அன்பின்
சோதி எங்கும் சுடராய் நிறையட்டும்
பிரிவினை பேசுவோர் பேடிமை மறையட்டும்....

வாழ்த்துக்கள்:
முத்துமணி, ஜகார்த்தா, இந்தோனேசியா

மேலும்

அருமையான சிந்தனை ---இனிய தீபாவளி வாழ்த்துக்களுடன் கவின் சாரலன் 10-Nov-2015 9:31 pm
முத்துமணி - முத்துமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Oct-2015 4:31 pm

தவம் செய்வது வரம் நாடியே!
இதழில் இனிப்பவளே!
இமையில் பனிப்பவளே!
என்றும் புதியவளே
இதயத் தீந்தமிழே!

உந்தன்
விழிக்கோலங்களில் விழுந்துவிட
வெம்மைக் காற்றில் கலந்துவிட- உன்
வாசல் கோடியில் வட்டமிடும் சின்ன
வயதோனைக் கொஞ்சம் பார்த்தால் என்ன?

எந்தன்
சந்தனத் தோட்டமே
நந்தவனப் பூங்காற்றே
கனவுகளின் கோட்டமே
கவிதைகளின் தேனூற்றே!

வசந்தமே
உன்னை மூச்சில் சேர்த்து
ஆத்மாவுக்குள் அனுப்பும் போது
அந்தரங்கத்துள் அரங்கம்
அமைக்கிறாய்..

வைர முத்துவோடும்
வலம் புரியாரோடும்
வாசமுடன் வாசம் செய்யும் நீ
என்னை மட்டும் ஏனோ
மோசம் செய்கிறாய்?
உந்தன்
ஆவலனைக்
காவலனாய்க் காதலனாய்
எண்ண வேண்

மேலும்

தமிழத்தாய் வாழ்த்து மிக அருமை. தமிழன்னை இல்லையேல் நாம் ஏது...... உங்கள் வரிகளில் என்னையே இழந்தேன் . வாழ்த்துக்கள். 08-Nov-2015 8:12 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (83)

மடந்தை ஜெபக்குமார்

மடந்தை ஜெபக்குமார்

மடத்தாக்குளம்,இராம்நாட்.
சாருமதி

சாருமதி

சென்னை
மதுராதேவி

மதுராதேவி

போளரை

இவர் பின்தொடர்பவர்கள் (83)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
மட்டுநகர் கமல்தாஸ்

மட்டுநகர் கமல்தாஸ்

மட்டக்களப்பு
Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (83)

மேலே