மதுராதேவி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மதுராதேவி |
இடம் | : போளரை |
பிறந்த தேதி | : 01-Jul-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 413 |
புள்ளி | : 57 |
முளைவிடும் ஒவ்வொரு தளிரும் மரமாகாது;
அரும்பிடும் ஒவ்வொரு மொட்டும் மலராகாது;
ததும்பிடும் ஒவ்வொரு கனவும் கை சேராது;
உதிக்கும் ஒவ்வொரு எண்ணமும் செயல் வடிவமாகாது;
திறவாத ஒவ்வொரு மனமும் காயம் படாது;
தளர்வு தரும் ஒவ்வொரு துன்பமும் நீடிக்காது;
பயணம் எங்கோ இருக்க, பாதங்கள் இங்கே நின்று விடக்கூடாது...
எந்தன் ஆடையில் தவழ்வது உந்தன் விரல் தடங்களோ?
உந்தன் மார்பினில் எந்தன் கன்னங்களின் பதிவோ?
எந்தன் கூந்தல் காட்டினில் நுழைவது உந்தன் கள்ள விரல்களோ?
உந்தன் செவிகளைக் கூசுவது எந்தன் மூச்சுப்புயலோ?
எந்தன் இதழ் ரோஜாக்களைத் தைப்பது உந்தன் மீசை முற்களோ?
உந்தன் ஆடை நூலிழையில் பின்னிக்கிடப்பது எந்தன் கருப்புத் தோகைகளோ?
எந்தன் கழுத்தில் மருதாணி வைப்பது உந்தன் இதழின் அழுத்தமோ?
உந்தன் இச்சைகளைத் தீர்ப்பது எந்தன் உடல் வனப்போ?
எந்தன் கொதிக்கும் உடலிற்கு வேட்கை தருவது உந்தன் தீரா காதலோ?
உந்தன் விரல்களின் இடைவெளி எந்தன் அடைக்கலம் நாடியோ?
எந்தன் வளைவுகளின் நிறுத்தங்கள் உந்தன் ஓய்வு
தெவிட்டா காதல்...
என் வாழ்வின் பக்கங்களில் அழிக்க முடியாத ஒரு பெயர் - நிலா
குழந்தைப் பருவத்தில்...
அன்னை மடியில்
அழுத நிலையில்
கண்கள் கதறி
கன்னங்கள் சிவந்து
உண்ண மறுத்து
உணவை வெறுத்து
நான் செய்த நாடகங்கள்
உன்னைக் காட்டி
எந்தன் பாட்டி
நிலாச்சோறு ஊட்டி
தோள்மீது சாய்த்து
நித்திரையில் ஆழ்த்திய
அவ்வினிய நினைவுகள்
இளமைப் பருவத்தில்...
புத்தகம் ஏந்தி
பள்ளி புதுந்து
குறும்புகள் குறைந்து
குணங்கள் மாறி
நட்புகள் தோன்றி
வண்ணங்கள் பூட்டி
வாழ்க்கையின் கோணங்கள் மாறிய நாட்கள்
உன் ஒளியிலே பயின்று
உன்னுறவிலே மகிழ்ந்து
உன் தரிசனம் வேண்டி
காத்திருந்த தருணங்கள்
மங்க
தெரு ஓரத்தில் ஓர் அனாதைக் குழந்தை
அம்மழலையை அருவருப்பாய் பார்க்கும் மக்கள்
அழுகையில் அழகைத் தேடும் மனிதனே
கருவறையில் இருந்து வெளிவருகையில்
மருத்துவர்களுக்கு நீயும் ஓர் அருவருப்பே...
இறைவன் என்னை ஏன் படைத்தான் என்று
நான் கண்டறியவில்லை
-உன்னைக் காணும் முன்
உன் கண்களில் இருந்த அன்பை
நான் அறிந்திருக்கவில்லை
-உன் நட்பு கிடைக்கும் முன்
தனிமையைப் பற்றி தெரிந்திருக்கவில்லை
-உன் பிரிவுக்கு முன்
சந்தோஷத்தை சந்திக்கவில்லை
-உன் பிரிவுக்குப் பின்
முறம் போல் இருப்போர் – நல்லோர்
ஆவனவற்றை தேக்கி, தூசைப் புடைத்து...
சல்லடை போல் இருப்போர் – தீயோர்
தேவையை நீக்கி, உபயோகமற்றவற்றை தன்னுள் நிறுத்தி...
தாங்கள் முறமா? சல்லடையா?
பாரதி சொன்னான் புரட்சிப்பெண்கள் வேண்டும் என்று
மறுக்கிறேன் அவனை இன்று நான்
ஆணின் மனதில் தான் புரட்சி வேண்டும்
பெண்ணை சமமாய் மதிக்கும் மனம் வேண்டும்
நிராயுதபாணியாய் ஒருவன் நின்றால் அவனிடம்
போர் செய்யமாண்டான் ஓர் ஆண்மகன்
ஆனால் இன்றோ பெண்ணை நிராயுதபாணியாக்கி
அவளை சூறையாடுகிறாய்... கசப்பான உண்மை
கள்ளிப்பால் ஊற்றினார்கள் அன்று சாபம்
என எண்ணி பெண்ணிற்கு கட்டாயமாக
கற்பைச்சூறையாடியவன் என்று தெரிந்தும் அவனுக்கு
சட்டம் ஏன் கொடுக்கவில்லை கள்ளிப்பாலை?
படித்தவன் பண்பு உடையவன் அக்கால கருத்து
இக்காலத்தில் படித்தவன் தான் அதிகத் தவறு செய்கிறான்
கட்டணம் வாங்கிய கல்வித்துறை ஒழுக்கத்தை
விற்கவ
இனிய தோழமைகளே ....
"மண் பயனுற வேண்டும்" குடும்பத்தின் மாலை வணக்கம் .அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் .
ஏற்கனவே எங்கள் கட்டுரை , எண்ணம் பதிவின் படி மிகுந்த மகிழ்ச்சியோடு இங்கே கவிதை போட்டியை அறிவிக்கிறோம் .
இந்த போட்டிக்கு நீங்கள் பேராதரவு தர வேண்டும் . உங்கள் பேராதரவு என்பது நிச்சயம் போட்டியில் நீங்கள் பங்கு பெறுதலே .நீங்கள் எழுதும் எழுத்துக்கள் இந்த மண்ணை பயன் பெற செய்ய வேண்டும் . நிச்சயம் செய்யும் . ஆகையால் அனைவரும் வாருங்கள் . எழுதுங்கள் .உங்கள் எழுத்து தளம் மற்றும் வெளி நட்பு வட்டத்துக்கும் தெரிவியுங்கள் .காரணம் மண் பயனுற வேண்டும் .
போட்டி தகவல்கள் .
1. மொத்தம் மூன்