சேர்த்தவர் : man payanura vendum, 9-Feb-15, 1:00 am

மண் பயனுற வேண்டும்- கவிதை போட்டி

மண் பயனுற வேண்டும்- கவிதை போட்டி போட்டி | Tamil Competition
போட்டி விவரங்கள்

இனிய தோழமைகளே ....

"மண் பயனுற வேண்டும்" குடும்பத்தின் மாலை வணக்கம் .அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் .
ஏற்கனவே எங்கள் கட்டுரை , எண்ணம் பதிவின் படி மிகுந்த மகிழ்ச்சியோடு இங்கே கவிதை போட்டியை அறிவிக்கிறோம் .

இந்த போட்டிக்கு நீங்கள் பேராதரவு தர வேண்டும் . உங்கள் பேராதரவு என்பது நிச்சயம் போட்டியில் நீங்கள் பங்கு பெறுதலே .நீங்கள் எழுதும் எழுத்துக்கள் இந்த மண்ணை பயன் பெற செய்ய வேண்டும் . நிச்சயம் செய்யும் . ஆகையால் அனைவரும் வாருங்கள் . எழுதுங்கள் .உங்கள் எழுத்து தளம் மற்றும் வெளி நட்பு வட்டத்துக்கும் தெரிவியுங்கள் .காரணம் மண் பயனுற வேண்டும் .

போட்டி தகவல்கள் .

1. மொத்தம் மூன்று தலைப்புகள் .

அ. நம் தேசம் போற்றுவோம் வளர்ப்போம்

ஆ . நெஞ்சு பொறுக்குதில்லையே

இ . ஆதலினால் காதல் செய்வீர் .

2. ஒருவர் அதிக பட்சம் இரண்டு தலைப்புகளில் எழுதலாம் .இருப்பினும் ஒரு தலைப்புக்கு ஒரு கவிதை மட்டுமே .

3. படைப்பாளி எழுத்து தளத்தின் உறுப்பினர் ஆக இருக்க வேண்டும் .அவரின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும் .உறுப்பினராக இல்லாதவர்கள் உறுப்பினராகி போட்டிக்கு கவிதைகளை பதிக்கலாம் .

4 . போலி கணக்குகளிருந்து கவிதைகள் வேண்டாம் .நிராகரிக்கப் படும் .

5 . அளவு - 20 வரிகள் . நீங்கள் எப்போதும் எழுதுவது போல் எழுதுங்கள் . வரிகள் 20 என்பதன் காரணமாக நிறைய வார்த்தைகளை வரிகளில் திணிக்க வேண்டாம் தயவுசெய்து .

6 . மண் பயனுற செய்யும் . அதாவது சமூக மேம்பாட்டுக்கான படைப்புகளை பதியுங்கள் .

7 . நீங்கள் தெரிந்தெடுக்கும் தலைப்பின் பின் மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி என்று தலைப்பில் சேருங்கள் .

8 . கவிதைகளை பதிவு செய்யும் போது , இறுதியில் மற்ற போட்டிக்கு சமர்பிக்க என்பதை மறக்காமல் சொடுக்கவும் .

வாருங்கள் . எழுதுங்கள் . உங்கள் படைப்புகள் மண் பயனுற செய்யுங்கள் .
வாழ்த்துக்கள் .

மிக்க நன்றி .

இப்படிக்கு
மண் பயனுற வேண்டும்

மகிழினி
வித்யா
கார்த்திகா A K
மனிமேகலைமணி
.................................................................................................................................................................................................
பரிசு விவரங்கள்

முதல் பரிசு - ரூபாய் 3000

இரண்டாம் பரிசு - ரூபாய் 2000

மூன்றாம் பரிசு - ரூபாய் 1000

சிறப்பு பரிசுகள் - ரூபாய் 500 இருவருக்கு

......................................................................................................................................................................................
கவிதை போட்டி ஆரம்ப தினம் - 01/02/2015 ஆங்கில ஆண்டு 2015 , பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி.

கடைசி நாள் - 08/02/2015 - 2015 , பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி .

முடிவுகள் அறிவிப்பு தினம் - 16/02/2015 - 2015 பிப்ரவரி மாதம் பதினாறாம் தேதி .

பரிசு விவரங்கள்

முதல் பரிசு - ரூபாய் 3000

இரண்டாம் பரிசு - ரூபாய் 2000

மூன்றாம் பரிசு - ரூபாய் 1000

சிறப்பு பரிசுகள் - ரூபாய் 500 இருவருக்கு

ஆரம்ப நாள் : 01-Feb-2015
இறுதி நாள் : 08-Feb-2015  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 16-Feb-2015

மண் பயனுற வேண்டும்- கவிதை போட்டி போட்டி | Competition at Eluthu.comமேலே