கல்லூரி மாணவ மாணவியருக்கான கவிதைப் போட்டி 2014 - எழுத்து.காம்
எழுத்து நடத்தும் கல்லூரி மாணவ மாணவியருக்கான கவிதைப் போட்டி 2014
போட்டி விவரங்கள்:
1. போட்டி வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 17 வரை மட்டுமே.
2. ஒரு மாணவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
3. கவிதை காப்புரிமை பெற்றதாக இருத்தல் கூடாது. சொந்த கவிதையாக இருத்தல் வேண்டும்.
4. கவிதை சமர்ப்பிக்கும் முன், மாணவர்கள் தங்களின் மின்னஞ்சல் (Email) மற்றும் அலைப்பேசி எண் (Mobile Number) கொண்டு எழுத்தில் பதிவு (Register) செய்தல் வேண்டும்.
5. கீழ்காணும் தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் மட்டுமே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
தலைப்புகள்:
கனவுகள் மெய்ப்படவேண்டும்
துகிலாத நினைவுகள்
உணர்வுகளின் ஊர்வலம்
நாம் எங்கே போகிறோம்
சிறு துளி பெரு வெள்ளம்
தாய் தந்தை அன்பு
மாசில்லா உலகு
தாய் மொழி வழி கல்வி
தோற்றினும் முயற்சி செய்
நாளைய சமுதாயம்
கல்வி முறையில் மாற்றம்
வாழ்க்கை வாழ்வதற்கு
அன்போடு இருங்கள்
வளமான எதிர் காலம்
தாயின் அன்பு முத்தம்
வகுப்பறை
சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
நட்பின் சான்று
உன்னை சிந்தித்தால்
என் காதல்
பரிசு விவரங்கள்
சிறந்த கவிதைக்கு ரூபாய் 5000 /- பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
குறிப்பு:
பரிசுத் தொகை காசோலையாக வெற்றிப் பெற்ற மாணவரின் கல்லூரி முகவரிக்கு அனுப்பப்படும்.
கவிதை எழுதும் மாணவர்கள் தவறாமல் கல்லூரி முகவரியை தங்களின் கவிதைக்கு கீழே குறிப்பிடவும்.
கல்லூரி மாணவ மாணவியருக்கான கவிதைப் போட்டி 2014 - எழுத்து.காம் போட்டி | Competition at Eluthu.com