போட்டிகள் நடத்துவது தொடர்பான விதிமுறைகள் (Pottigal Nadathuvathu Thodarbaana Vithimuraigal)

(Rules to Conduct Competitions in Eluthu)போட்டி நடத்தும் உறுப்பினர் கவனத்திற்கு:


எழுத்தில் போட்டிகள் நடத்துவது தொடர்பான விதிமுறைகள்:


1. எழுத்து தளத்தில் தனி நபராகவோ, ஒரு குழுவாகவோ அல்லது மற்றொருவருடன் சேர்ந்தோ போட்டிகளை நடத்தலாம்.


2. போட்டி நடத்துபவர் போட்டியின் வெற்றியாளர்களுக்கு சரியான முறையில் பரிசுகள் சென்று சேர்ந்திட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.


3. பரிசு தேதி அறிவித்த பிறகும், பரிசு வழங்க தாமதித்தாலோ அல்லது வெற்றிப் பெற்ற போட்டியாளர் புகார் செய்தாலோ, எழுத்து குழுமம் அந்த போட்டி நடத்துனரை மேலும் போட்டிகள் நடத்த அனுமதிக்காது.


4. போட்டிகள் அரசாங்க விதிகளுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.


5. ஒரு தனி நபரை தாக்கும் விதமாகவோ அல்லது ஆபாசமானதாகவோ அல்லது எழுத்து விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டதாகவோ இருத்தல் கூடாது.


6. அவ்வாறு இருக்கும் பட்சத்திலோ அல்லது அது சம்பந்தமாக எவரேனும் புகார் செய்ய நேரிட்டாலோ, அத்தகைய போட்டிகள் உடனே தளத்திலிருந்து நீக்கப்படும் மேலும் அந்த போட்டி நடத்துனரை மேலும் போட்டிகள் நடத்தவும் எழுத்து அனுமதிக்காது.


7. மேலும் விவரங்களுக்கு எழுத்து குழுமத்தை கேள்வி பதில் பகுதியில் தொடர்பு கொள்ளவும் .

மேலே