சேர்த்தவர் : Rosichandra5f2e81d21fa4f, 23-Mar-22, 9:00 am

கவிதைகளில் கலைச்சொற்கள்

போட்டி விவரங்கள்

*இனிய அறிவிப்பு*

*தேடல் களம் அறக்கட்டளை*
மற்றும்
*செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்,* *தமிழ்நாடு அரசு.*

சார்பில்,
ஒவ்வொரு திங்கள்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகிற தொடர் நிகழ்வான,

*கவிதைகளில் கலைச்சொற்கள்*
எனும் பொருண்மையில், சங்க இலக்கியக் கலைச்சொற்களைக் களமாடவைக்கும்,

*காணொளி கவித்திறனாய்வரங்கம்*

வருகிற *27.03.2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணி* அளவில் நடைபெற உள்ளது.

எங்குமே நடைபெறாத புதிய முயற்சியை, நமது தேடல்களம் தொடர்ந்து முன்னெடுத்து வருவது, தாங்கள் அறிந்ததே.

அவ்வகையிலான இத்தொடர் நிகழ்வில், கீழே கொடுக்கப்பட்டுள்ள 12 - இலக்கியக் கலைச்சொற்களை
24-வரிகளுக்குள் பயன்படுத்தி, சுவையான கவிதையைப் படைத்திடப் பாவாணர்களை அன்போடு அழைக்கிறோம்.

நமது அரிய தொடர் இலக்கியப் பயணத்தில் பங்கெடுத்துக் கொள்ள, கீழ்க்கண்ட இணைப்பினைச் சொடுக்கி, தங்களின் பெயரினைப் பதிவிட்டு, பங்கேற்பினை உறுதி செய்து கொள்ள வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

*பதிவு செய்துகொள்ள சொடுக்க வேண்டிய இணைப்பு*

https://forms.gle/ijXQyCUvcWfeEML59

அறிவார்ந்த பாவாணர்களின் பாக்களிலே, கொஞ்சி விளையாட வேண்டியக் கலைச் சொற்கள், அதனதன் பொருள்களோடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. *ஏதிலி* - அகதி;
2. *அதல்* - தோல், தண்ணீர்;
3. *அடவி* - காடு, மிகுதி, நந்தவனம்;
4. *சுவல்* - தோள், மேடு;
5. *தெருள்* - தெரிந்து கொள், உணர்வுறு, தெளி, ஐயமற அறி;
6. *அருத்தி* - ஆசை;
7. *சழக்கு* - அறியாமை, தீமை, பொய், குற்றம்;
8. *கச்சுரு* - நெருப்பு, தீ, கனல், அலை;
9. *கம்பலை* - ஒலி, ஆரவாரம், நடுக்கம், துன்பம்;
10. *அருகு* - குறை;
11. *தேசு* - அழகு, ஒளி, ஞானம், பெருமை, புகழ்;
12. *ஒக்கல்* - பேணுதல் சொந்தங்கள்.

மேற்கண்டக் கலைச் சொற்களைக் கவிதைக்குள் செதுக்கி,
*வருகிற 26.03.2022-க்குள், அனுப்ப வேண்டிய அலைபேசி எண் 8695006900

*முயன்றால் விண்ணைத் தொடலாம்.* *வரலாறு நமக்காகக் காத்திருக்கிறது.* *அதன் பக்கங்களில் நம் பெயரைப் பதிப்போம்.* *தமிழ்ப்பற்றோடு நமது பாசத்தை உலகறியச் செய்வோம்.*
*சாதனை அரங்கில் சந்திப்போம்.*

பாசத்துடன்,

*நந்திவரம் பா.சம்பத்குமார்* நிறுவனர் / தலைவர், தேடல்களம் அறக்கட்டளை.
8695006900

பரிசு விவரங்கள்

பங்கேற்கும் அனைவருக்கும் புலனம் வழி சான்றிதழ் அனுப்பப்படும்...

ஆரம்ப நாள் : 23-Mar-2022
இறுதி நாள் : 27-Mar-2022  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 28-Mar-2022

கவிதைகளில் கலைச்சொற்கள் போட்டி | Competition at Eluthu.com



மேலே