சரவிபி ரோசிசந்திரா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  சரவிபி ரோசிசந்திரா
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Aug-2020
பார்த்தவர்கள்:  1225
புள்ளி:  95

என்னைப் பற்றி...

கவிஞர்/ஆய்வாளர்/எழுத்தாளர்/
எனக்குள் தேடுகிறேன் என்னை

என் படைப்புகள்
சரவிபி ரோசிசந்திரா செய்திகள்
சரவிபி ரோசிசந்திரா - போட்டி (public) சமர்ப்பித்துள்ளார்

*இனிய அறிவிப்பு*

*தேடல் களம் அறக்கட்டளை*

சார்பில்,
ஒவ்வொரு திங்கள்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகிற தொடர் நிகழ்வான,

*கவிதைகளில் கலைச்சொற்கள்*

எனும் பொருண்மையில், சங்க இலக்கியக் கலைச்சொற்களைக் களமாடவைக்கும்,

*காணொளி கவியரங்கம்*

வருகிற *25.04.2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணி* அளவில் நடைபெற உள்ளது.

எங்குமே நடைபெறாத புதிய முயற்சியை, நமது தேடல்களம் தொடர்ந்து முன்னெடுத்து வருவது, தாங்கள் அறிந்ததே.

அவ்வகையிலான இத்தொடர் நிகழ்வில், கீழே கொடுக்கப்பட்டுள்ள 12 - இலக்கியக் கலைச்சொற்களை
24-வரிகளுக்குள் பயன்படுத்தி, சுவையான கவிதையைப் படைத்திடப் பாவ

மேலும்

சரவிபி ரோசிசந்திரா - சரவிபி ரோசிசந்திரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2021 5:24 pm

கவிஞர் என்று சொல்லிக் கொள்ள தகுதி வேண்டும்
தகுதியின்றி கவிஞர் என்றால்
சொற்கள்  ஏசும்
விலைக்கொடுத்து வாங்க இயலும் விருதுயென்றால்
விற்பனைக்கு விலைப்போகும் விளம்பரமா? விருது
சொற்களுக்கு உயிர் கொடுக்கும் கவிஞர் எல்லாம்
தற்பெருமை பேசிக் கொள்(ல்)கின்றனரே!
எல்லாம் தெரியும் எனச் செருக்கு வந்தால்
எல்லாம் மறையும் என மறக்கின்றனரே!
எத்தனைப் பெரிய கவிஞர் நீயென்றாலும்
கண்ணீர் அஞ்சலி மற்றவர்கள் தான் எழுதி தர வேண்டும்.

#சரவிபி_ரோசிசந்திரா

மேலும்

நன்றி சகோ. கட்டாயம் முயற்சி செய்கிறேன். 21-Mar-2021 10:21 pm
கலிவிருத்தம் கவிஞர் என்றிட தக்கமு யற்சியும் கவிஞர் நூல்பல கற்றிட நல்லது கவிஞர் யாப்பதும் கற்றிட போற்றுவர கவியென் றால்பிறர் சொல்திரு டாததே 20-Mar-2021 8:13 pm
ஆமாம் உண்மைதான் சற்று முன் ஒரு உரைநடை வாக்கியம் பட்டறிவு பற்றி எழுதி யிருக்கக் கண்டேன். அந்த உரைநடை சொல்லை ஏன் குறள் வடிவில் எழுத முயற்சிக்க கூடாது. அறியாமல் செய்யும் தவறு தான் நம்மை நமக்கு அறிய வைக்கிறது அறியாமல் செய்யும் தவறொன்றே நம்மை அறியவைக் கும்கருவி யாம் ஓரு சிறிய குறளையும் எழுத முயற்சிக்காது பெரிய பெரிய உரைநடை எழுதும் கும்பல் பெருகி விட்டது என்ன செயய? 20-Mar-2021 7:22 pm
சரவிபி ரோசிசந்திரா - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2021 5:32 pm

இல்வாழ்க்கை


*மறுகெங்கும்* எக்காளமிட
*பணிலம்* பாங்காய் முழங்கியது;
*கடும்பும்*, நட்பும் சூழ்ந்து நிற்க
*வட்டிகை* வாசலை அழகுப்படுத்தியது;
*ஓதை* விண்ணைப் பிளக்க,
எட்டுத்திக்கும் கொட்டியது
*ஆய்* முரசு.
மன்னன் *எலுவையின்* *ஆணத்தில்* திளைக்க,
மங்கையின் உள்ளம் கவ்வைக்கு *ஆஞ்சியது*.
*ஆராமத்தில்* பூத்த ஆணம்
அல்கல் வளர்ந்து பூக்காடானது.
*ஞஞ்ஞையில்* நெஞ்சம் இணைவதில்லை
ஆத்மார்த்த அன்பு பிரிவதுமில்லை
இணையும் வரை *துனியாக* இருக்கும்;
காத்திருந்து கைப்பற்றியதும், இல்வாழ்க்கை இனிக்கும்.

சரவிபி ரோசிசந்திரா

மேலும்

சரவிபி ரோசிசந்திரா - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2021 5:31 pm

அறியாமல் செய்யும் தவறு தான்
நம்மை நமக்கு அறிய வைக்கிறது

மேலும்

சரவிபி ரோசிசந்திரா - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2021 5:30 pm

என் தேவைக்கு நீயும்
உன் தேவைக்கு நானும்
என வாழ்வதல்ல வாழ்க்கை

மேலும்

சரவிபி ரோசிசந்திரா - சரவிபி ரோசிசந்திரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2020 8:31 pm

எது கவிதை?
***************

எழுதியவை எல்லாம் கவிதையா?
என எண்ணிய வேளையில்
என்னிடம் பேசியது
என் எழுதுகோல்

உள்ளத்தில் உறையும் உணர்வை
ஊற்றாய் உரைப்பது கவிதையா?
நெஞ்சத்தில் நெருடும் நினைவுகளை
நிரல்படக் கோர்ப்பது கவிதையா?

வலிகளுக்கு அருமருந்தாய்
மனதை வருடுவது கவிதையா?
வரலாற்றின் பழம்பெரும் உண்மையை
அழியாமல் வடிவமைப்பது கவிதையா?

இயற்கையின் கொடையை
இனிமையாய் இயம்புவது கவிதையா?
காதலின் கவிரசத்தைக் காய்ச்சி
பருகுவது கவிதையா?

எது கவிதை?
என்னுள் ஆயிரம் கேள்விகள் உதயம்

கவிதை ஆயிரம் எழுதுபவர் பலராம்
கவிதையாய் வாழ்பவர் வெகுசிலராம்
விதையை விதைத்திடும் கவிதை
விடைபெறா உலகின்

மேலும்

மிக்க மகிழ்ச்சி சகோ 17-Aug-2020 9:02 pm
ஆஹா காட்டாறுபோல பெருகு வருகிறது கவிதை இந்த காட்டாற்றிர்கு அணைக்கட்டினால் நதியும் அழகாகும் ..... கற்பனையில் வளர்வதே கவிதை கற்பனைக்குன்ற கவிசிங்கம் பூனையாய் போவானே ஆனால் கவிதையின் நிறையும் குறையும் கூற தயக்கம் ஏன்..... இதை வரவேற்க வேண்டும் நல்ல கவிஞனாய் மாறிவிடுவார் வெகு விரைவில் ஆசிகள் இளங் கவியே 17-Aug-2020 8:54 pm

எது கவிதை?
***************

எழுதியவை எல்லாம் கவிதையா?
என எண்ணிய வேளையில்
என்னிடம் பேசியது
என் எழுதுகோல்

உள்ளத்தில் உறையும் உணர்வை
ஊற்றாய் உரைப்பது கவிதையா?
நெஞ்சத்தில் நெருடும் நினைவுகளை
நிரல்படக் கோர்ப்பது கவிதையா?

வலிகளுக்கு அருமருந்தாய்
மனதை வருடுவது கவிதையா?
வரலாற்றின் பழம்பெரும் உண்மையை
அழியாமல் வடிவமைப்பது கவிதையா?

இயற்கையின் கொடையை
இனிமையாய் இயம்புவது கவிதையா?
காதலின் கவிரசத்தைக் காய்ச்சி
பருகுவது கவிதையா?

எது கவிதை?
என்னுள் ஆயிரம் கேள்விகள் உதயம்

கவிதை ஆயிரம் எழுதுபவர் பலராம்
கவிதையாய் வாழ்பவர் வெகுசிலராம்
விதையை விதைத்திடும் கவிதை
விடைபெறா உலகின்

மேலும்

மிக்க மகிழ்ச்சி சகோ 17-Aug-2020 9:02 pm
ஆஹா காட்டாறுபோல பெருகு வருகிறது கவிதை இந்த காட்டாற்றிர்கு அணைக்கட்டினால் நதியும் அழகாகும் ..... கற்பனையில் வளர்வதே கவிதை கற்பனைக்குன்ற கவிசிங்கம் பூனையாய் போவானே ஆனால் கவிதையின் நிறையும் குறையும் கூற தயக்கம் ஏன்..... இதை வரவேற்க வேண்டும் நல்ல கவிஞனாய் மாறிவிடுவார் வெகு விரைவில் ஆசிகள் இளங் கவியே 17-Aug-2020 8:54 pm

என்னென்ன இருக்கிறது
நம்மிடம் இதுவரை எண்ணவில்லை
என்னென்ன இல்லை நம்மிடம் என நினைத்தவுடன் நீள்கிறது நீண்ட பட்டியல்
ஏன் இதுவரை நாம் எண்ணவில்லை என்று எண்ணினேன்
என்னென்ன இருக்கிறது என்றதும் குறுகும் நம் எண்ணம்
என்னென்ன இல்லை என்றதும் பட்டியலிட பரந்து விரிகிறது
இல்லாத ஒன்றை நினைத்து ஏங்குவது மனித இயல்பா? இருக்கும் ஒன்றிற்கு நன்றி சொல்ல மறப்பது மாபெரும் தவறா?
என எண்ணினேன்
விருப்பத்தை அதிகம் விரிவாக்கி அதில் சிக்கி விடுகிறது நம் மனம்
விருப்பவலையில் சிக்கித் தவிப்பது வேறு யாரோ அல்ல நாமே!
சிந்தித்துச் செயல்பட இறைவன் அனைவருக்கும் கொடுத்திருக்கும் மாபெரும் கொடை எண்ணம்
அதனை இதுவரை நாம் எண்

மேலும்

சரவிபி ரோசிசந்திரா - சரவிபி ரோசிசந்திரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Aug-2020 9:08 am

அனைத்து குறையும்
உனக்கு குறையாக தெரியவில்லை
எனில்
உன் மனம் பண்பட்டு
இருக்கிறது
அனைத்து குறையும் உனக்கு
நிறையாக தெரிகிறது எனில்
உன் மனம் ஈசத்துவத்தில் இருக்கிறது

சரவிபி ரோசிசந்திரா

மேலும்

மகிழ்ச்சி ஐயா 13-Aug-2020 11:44 am
சுருங்கச் சொல்லிய மேலான தத்துவ நிலைப்பாடு ! பாராட்டுக்கள் . 13-Aug-2020 11:36 am
சரவிபி ரோசிசந்திரா - சரவிபி ரோசிசந்திரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2020 10:07 pm

சொல்ல வா சொல்ல வா
நம் காதல் கதையை சொல்ல வா
உணர்வில் உறைந்ததை சொல்ல வா

மனவறையில் நான் வசித்த நேரம்
கருவறை வாசம் வீசியதே
உன் மார்பில் சாய்ந்து உறங்கிய காலம்
மனதில் தாய்மை சுரந்ததே

கால தாமதமாக வந்தாலும்
காதல் கசக்கவில்லை
கரம் பிடித்த நாளில் இருந்து
கண்ணீர் சிந்தவில்லை

சொல்ல வா சொல்ல வா
நீ என் உயிர் அல்லவா
நான் உன் உயிர் அல்லவா

கைகோர்த்து நடந்திட சாலைகள் விரிவாகுதே
கைபேசியும்  காதலில் ஏனோ மௌனமாகுதே

உன்னுடன் கடந்த பாதைகள் எல்லாம்
வாடைக் காற்று  வீசியது
நீயின்றி நானும் கடந்து சென்றால் கோடையாகி நினைவை சுடுகிறது

சொல்ல வா சொல்ல வா
நம் காதல் கதையை சொல்ல வா
உணர்வில்

மேலும்

மகிழ்ச்சி ஐயா 12-Aug-2020 2:35 am
சொல்ல வா சொல்ல வா என்கிறீர்கள் ... சொல்லிவிட்டீர்கள் மிக ரம்மியமான காதல் திருமணம் என்கிற கவிதையாய் . வாழ்த்துக்கள் 11-Aug-2020 11:43 pm
சரவிபி ரோசிசந்திரா - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

நன்று 30-Jun-2021 8:42 pm
வாழ்த்துக்கள்! 09-Mar-2021 4:08 pm
வாழ்த்துக்கள் ..மிக அழகான படைப்பு 05-Feb-2021 8:29 am
அருமை!!! 30-Jan-2021 4:44 pm

வெற்றி நம் கையில்
**********************
கண்மூடி காணும் கனவு
கலைந்திடும் கலங்காதே_ நீ
கண்திறந்து காணும் கனவு வாகைச்சூடும் மறவாதே

முடியாதது  உன்னால் எதுவுமில்லையே
முயற்சி நீ செய்தால் தவறுமில்லையே
காலம் ஒருநாள் மாறும் பொறுத்திடு
வாழ்வில் வசந்தம் வீசும் உழைத்திடு

ஆசையில் பிறந்திடுமே வேட்கை
நம்பிக்கை தானே நம் வாழ்க்கை
உன்னால் எல்லாம் முடியும்
முயன்றால்  கையில் இமயம்

விதையில் ஊக்கத்தை விதைத்திடு
வியர்வை நீரை   ஊத்திடு
விளைச்சல் வரும்வரை காத்திடு
விளைந்ததும்  வெற்றியில் மகிழ்ந்திடு

காலம் மாறிப்போகும் _ நீ
கண்டகாட்சி மாறும்
விண்ணும் உன்னைவியக்கும்_ நீ
விடாமுயற்சி நிறுத்

மேலும்

மகிழ்ச்சி சகோ 09-Aug-2020 2:14 pm
எழுத்து.காம் தளத்தில் புதியதாய் சேர்ந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் நன்றாகவே எழுதியுள்ளீர்; இன்னும் தொடர்ந்து எழுதுங்கள் 09-Aug-2020 1:53 pm
மேலும்...
கருத்துகள்

மேலே