கண்ணா நீ வருவாயா

அன்பென்ற அலையிலே
ஆழியாய் வந்தவனே
தத்தளிக்கும் என் மனத்தை
கரைச் சேர்ப்பது எப்போது
வரமொன்று நான் கேட்க
வரவில்லை உன்னிடமே
தாரமென்று நீ சொல்ல
கேட்க காத்திருக்கு என் மனமே
கோபியர் கொஞ்சல் எல்லாம்
சீக்கிரம் மறந்து விடு
கோமகள் காத்திருக்கேன்
பூமாலை சூட வந்துவிடு
இளமை கோலத்தில்
பார்ப்பவை எல்லாம் அழகாகும்
காலம் கடந்தபின்னே
முதுமையின் கோலம் புரியலாகும்
என்னுயிர் நாதத்தில்
உன்னன்பே அழகாகும்
எந்நாளும் என் சுவாசம்
உனக்காக உயிர்வாழும்
கேட்டு பெறுவதல்ல ஆருயிர் அன்பு அன்பே!
கேட்காமல் பெற்றிடவே
காத்திருக்கேன்
பலகாலம் அனபே!
நீ‌ வருவாய் என வாசலில்
பொற்பாதம் வைக்கிறேன்
உன் வருகையை எண்ணி
வாசல் வழி விழித்திருக்கின்றேன்
நீயும் வருகின்றாய் நீங்காமல்
நினைவுடனே வாழ்ந்திடவே
நானும் வாழ இயலாமல்
தவிக்கின்றேன் நினைவுடனே
வெண்ணெய் உண்ட வாயிற்குள் உலகம்
வெண்மனத்திற்குள் என்னை ஏற்க செய்கின்றாய் கலகம்
சரணாகதி அடைந்த அன்பிற்கில்லை எல்லை
சற்று கண்ணோக்கிப் பார்த்தால் தீரும் தொல்லை.

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (31-Aug-21, 10:33 pm)
பார்வை : 164

மேலே