மையற்ற கிறுக்கல்கள்

வெற்றிக்கு விருந்தளிக்கும் நாம்
தோல்விக்கு மருந்தளிக்க மறக்கிறோம்...

பேசாமல் நகர்வதும் பேசிவிட்டு செல்வதும்
பாசத்தின் வெளிப்பாடு
அன்பிற்கு இல்லை
எந்நாளும் பாகுபாடு

அமைதி அடைந்த பிறகு
மனம்
ஆசுவாசம் கொள்கிறது
முடிவில்...

வாழ்வை சுவாரஸ்யமாக்க
வெற்றிடமின்றி
நிரப்பி வையுங்கள்
அன்பை....

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (22-May-23, 11:12 am)
பார்வை : 168

மேலே