நீயும் நானும்

நீயும் நானும் மழைநீரா!
நீந்தும் விழியில் உவர்நீரா!
உணவில் கலந்த உமிழ்நீரா!
உணர்வில் உறைந்த செந்நீரா!

யாரிடம் சொல்ல நம் கதையை
யாருக்கும் ‌யாரும் இங்குமில்லை
எங்கே செல்ல தெரியவில்லை
எனினும் வாழவா வழியில்லை

கடந்தது எல்லாம் போகட்டும்
கடப்பதில் மனம் மகிழட்டும்
வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்
வாழ்ந்திட நினைவுகள் உயிரூட்டும்

உதவ நமக்கு யாருமில்லை
உயர்ந்திட உதவி தேவையில்லை
உழைப்பை போன்ற நண்பனில்லை
உன்னை அறிந்தால் தோல்வியில்லை

சிரிப்பை சிக்கனம் செய்யாதே!
சிந்திக்க நீயும் மறக்காதே!
உலகம் பெரியது மறவாதே!
உன்னைக் குறைவாய் நினைக்காதே!

நடந்தால் பாதை உருவாகும்
நல்லெண்ணம் வாழ்க்கை வரமாகும்
வருந்திப் பயனில்லையெனில் வருந்தாதே!
வருங்காலத்தை நினைத்து கலங்காதே!

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (6-Sep-21, 4:52 pm)
Tanglish : neeyum naanum
பார்வை : 151

மேலே