பாவாடை தாவணி அணிந்து வரும் உன் அழகு - தாத்தா பேத்தி தாலாட்டு - 6
பாவாடை தாவணி அணிந்து வரும் உன் அழகு -
தாத்தா பேத்தி தாலாட்டு - 6
பாவாடைதாவணி அணிந்துவரும் உன் அழகை
நாளும் நான் கனவினிலே ரசித்திருப்பேன் கண்மணியே
இன்று பால்வாடை உன் இதழில் வீசும் நேரம்
எனை மறந்தேன்
நான் எனை மறந்தேன்
காலமெல்லாம் உன்னருகில்
இருந்திடவே வழியில்லை
எனக்கு வழியில்லை ( பாவாடைதாவணி அணிந்துவரும் உன் அழகை........)
பால்சோறு ஊட்டிடவே ஆலையமே
அழைத்து செல்வேன்
எந்தன் மடியினிலே அமர்ந்திருப்பாய்
அம்மம்மா ஊ ட்டும் நேரம்
புன்னகையில் திளைத்திருப்பேன்
கைகளிலே அணைத்தபடி
இறைவனையே வலம் வருவேன்
அருள் வேண்டி நிற்பேன்
எந்நாளும் அர்ச்சனை செய்வேன் ( பாவாடைதாவணி அணிந்துவரும் உன் அழகை........)
சின்னஞ்சிறு மலரெடுத்தது உன்தலையில்
அழகு பார்ப்பேன்
நீ அழகா மலர் அழகா
எனைக்கேட்டால் உனையே சொல்வேன்
சாத்தியமா நீயென சொல்வேன்
சந்தேகம் ஏதுமில்லே
கண்களிலே மைதீட்டி
கன்னத்திலே பொட்டிட சொல்வேன்
திருஷ்டி பொட்டிட சொல்வேன் ( பாவாடைதாவணி அணிந்துவரும் உன் அழகை........)
காலமெல்லாம் உன் அழகை
ரசித்திருப்பேன் கண்மணியே (( பாவாடைதாவணி அணிந்துவரும் உன் அழகை........)
சின்னங்சிறு கால்களிலே
வெள்ளிமணி ஒலித்துவர
இல்லத்தில் மங்களமே
எந்நாளும் நிலைத்திருக்க
உன் அன்பு பாசத்தினால்
எல்லோரையும் பிணைத்திருப்பாய்
அன்பினால் இணைந்திருப்பாய்
அன்பு வழி ஒன்றே தான்
நம்மை வாழ வைக்கும்
எந்நாளும் துணை இருக்கும் கண்மணியே
பாவாடைதாவணி அணிந்துவரும் உன் அழகை
நாளும் நான் கனவினிலே ரசித்திருப்பேன் கண்மணியே
இன்று பால்வாடை உன் இதழில் வீசும் நேரம்
எனை மறந்தேன்
நான் எனை மறந்தேன்
காலமெல்லாம் உன்னருகில்
இருந்திடவே வழியில்லை
எனக்கு வழியில்லை ( பாவாடைதாவணி அணிந்துவரும் உன் அழகை........)
இதன் காணொளியை யூடுபே இணையதளத்தில் காண https://youtu.be/vW3Qh5cIsQw
.
https://youtu.be/vW3Qh5cIsQw