அனலை தாங்கியே

நிலைமண்டில ஆசிரியப்பா

பழமையின் பெருமைப் பேசியே மிகைகொளல்
அடைவதை விலக்கியே ​பழமையின் பெருமையை
பட்டொளி வீசவே பழமையால் புதிதையே
பலவகை படைக்கலாம் குழுவாய் இணைந்தே.

எதுவுமே அசையா தன்மையில் இருப்பின்
ஏதுவோ வளர்ச்சி ஊடுறும் மரக்கால்
நிலையாய் வேண்டும் முயலல் என்றுமே
துவளா நிலையே தொடரும் வெற்றியே.

பழங்களின் விதைகளும் முளைக்குமே எளிதாய்
பார்த்த தில்லையே வாழையின் விதையில்
வாழைக் கன்றது முளைத்தே எங்குமே
மனிதர் வார்த்தையும் இதுபோல் பலவகை.

கதிரவன் கதிரினால் செழிக்கும் மரங்கள்
கதிரவன் அனலை தாங்கியே குளிர்தரும்
அதுபோல் துன்பம் நம்மையும் தழுவும்
தன்மையில் காக்கும் யாவரும் இறையே.

மொழியும் நிலமும் குருதியும் இதயமாம்
இதனையே நினைக்கா யாருமே இருப்பரோ
நல்லவ ரெனவே அறியா வண்ணம்
நாமிருப் பாதோ பாறையின் நிலையே.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (6-Sep-21, 11:04 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 53

மேலே