கல்லால் அடிக்க

கல்லால் அடிக்க ?

தோட்டத்தில் நின்று,
கல் எடுத்து அடித்தேன் மாங்காய் தின்ன என்று
தின்றதோ மாங்காய் இல்லை,
தின்றது அயல் வீட்டார்
கொச்சை மொழி.

கடைக்கு செல்லும்
போதெல்லாம்,
மங்கை ஒருத்தி அங்கு
வருவாள்,
மயக்கம் கொண்டேன்
அவள் மீது,
கல்லெறியை மறந்திட்டு
கண்ணடித்தேன்,
இப்பவும் நான் தின்றது
கொச்சை மொழி.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (6-Sep-21, 10:19 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : kallal adikka
பார்வை : 64

மேலே