மொட்டை
மொட்டை
👱👱👱👱👱👱👱👱
பூட்டிய நிலையில் கோயிலின் கோலம்
உண்டியல் திறந்திங்கு என்னடா லாபம்...
கல்லாக் கட்ட பலதுறை இருக்க
கடவுளே நமக்கேன் இத்துறை கிடைக்க...
இரவு முழுவதும் கவலையில் கடக்க
"இறைவன்"- "பேன்" வரம் நினைவினில் பிறக்க...
முடியும் ,முடியும், முடியும்.
"முடி"
ரூ.அறுபதாயிரம் கிலோ விலை இருக்கு
ஒருரூபாய் பிளேடுக்கு என்னடா கணக்கு...
உள்ளே தலையில ஒன்னுமே இல்லை
ஓட்டு போடைல தெரிஞ்சுகிட்டோமல்ல...
வெளியில முடிவச்சு என்னத்த கிழிக்க
இலவசம்னு சொல்லு வருவான் மழிக்க...
பெண்கள் தலைமுடிக்கு தனிக்கவனம் செலுத்து
பேருந்துப் பயணமும் இலவசமா இருக்கு...
சாம்பு,சாயக்கடைக்காரனெல்லாம்
சரியாக் கவனிக்கா தவறதை உணரனும்...
கட்டணமில்லா மொட்டைய நெனைச்சா
அடிப்பதற்கு இல்லை இதைவிட பெருசா...
💇💇🏼♂️💇💇💇💇💇💇💇💇💇🏼♂️