நிம்மதி

தகுதிசார் பதவி கலைப் பயணம்
தரணிதனில் பகிரும் தவசி சிந்தனை
பெரிது பேசா பேருரை மேன்மையாம்
பெயர் கெடா பெருமை காண்பீர் !

கலையின் சிகரம் கவிஞர் மாட்சி
கற்பனை வேட்கை கவிதை சீற்றம்
தயவான் போற்ற தக்கார் ஏற்றார்
தயக்கம் காணோம் தலைமை ஏற்க !

பட்டரை கவிதை பலவார் நடத்தி
பயிர்ச்சி சீராய் பக்குவம் எய்த
நித்தம் வேண்டி நினைவு கூற
நிம்மதி காணுது நினைத்த நினைப்பே !

எழுதியவர் : மு.தருமராஜு (23-Jan-25, 3:17 pm)
Tanglish : nimmathi
பார்வை : 18

மேலே