தெவிட்டா காதல்... எந்தன் ஆடையில் தவழ்வது உந்தன் விரல்...
தெவிட்டா காதல்...
எந்தன் ஆடையில் தவழ்வது உந்தன் விரல் தடங்களோ?
உந்தன் மார்பினில் எந்தன் கன்னங்களின் பதிவோ?
எந்தன் கூந்தல் காட்டினில் நுழைவது உந்தன் கள்ள விரல்களோ?
உந்தன் செவிகளைக் கூசுவது எந்தன் மூச்சுப்புயலோ?
எந்தன் இதழ் ரோஜாக்களைத் தைப்பது உந்தன் மீசை முற்களோ?
உந்தன் ஆடை நூலிழையில் பின்னிக்கிடப்பது எந்தன் கருப்புத் தோகைகளோ?
எந்தன் கழுத்தில் மருதாணி வைப்பது உந்தன் இதழின் அழுத்தமோ?
உந்தன் இச்சைகளைத் தீர்ப்பது எந்தன் உடல் வனப்போ?
எந்தன் கொதிக்கும் உடலிற்கு வேட்கை தருவது உந்தன் தீரா காதலோ?
உந்தன் விரல்களின் இடைவெளி எந்தன் அடைக்கலம் நாடியோ?
எந்தன் வளைவுகளின் நிறுத்தங்கள் உந்தன் ஓய்வுக்குடைகளோ?
உந்தன் அணைப்பின் இறுக்கம் எந்தன் ஆசை வலிகளோ?
நீ பூக்கள் பறித்த பின்னும் மீதமுள்ளது எந்தன் சொல்லா ஏக்கங்களோ?