எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முளைவிடும் ஒவ்வொரு தளிரும் மரமாகாது; அரும்பிடும் ஒவ்வொரு மொட்டும்...

முளைவிடும் ஒவ்வொரு தளிரும் மரமாகாது;
அரும்பிடும் ஒவ்வொரு மொட்டும் மலராகாது;
ததும்பிடும் ஒவ்வொரு கனவும் கை சேராது;
உதிக்கும் ஒவ்வொரு எண்ணமும் செயல் வடிவமாகாது;

செலவிடும் ஒவ்வொரு நொடியும் திரும்பி வராது;
திறவாத ஒவ்வொரு மனமும் காயம் படாது;
தளர்வு தரும் ஒவ்வொரு துன்பமும் நீடிக்காது;
பயணம் எங்கோ இருக்க, பாதங்கள் இங்கே நின்று விடக்கூடாது...  

பதிவு : மதுராதேவி
நாள் : 16-Jul-24, 11:19 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே