kavithai எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முளைவிடும் ஒவ்வொரு தளிரும் மரமாகாது;
அரும்பிடும் ஒவ்வொரு மொட்டும் மலராகாது;
ததும்பிடும் ஒவ்வொரு கனவும் கை சேராது;
உதிக்கும் ஒவ்வொரு எண்ணமும் செயல் வடிவமாகாது;

செலவிடும் ஒவ்வொரு நொடியும் திரும்பி வராது;
திறவாத ஒவ்வொரு மனமும் காயம் படாது;
தளர்வு தரும் ஒவ்வொரு துன்பமும் நீடிக்காது;
பயணம் எங்கோ இருக்க, பாதங்கள் இங்கே நின்று விடக்கூடாது...  

மேலும்

      நான் பூ
  --------------------
அந்திக்கு முந்திடுவேன் - முதலில்
அகிலத்தைப் பார்த்திடுவேன்
திசை  நிரம்ப மனம் பரப்பி
உங்கள் சிந்தை கவர்ந்திடுவேன்
சுற்றத்தோடு வாழும் கலை
கற்றுக் கொடுத்துடுவேன்.
உங்கள் விழிகளுக்கு விருந்தாக
வழியெங்கும் பூத்திடுவேன்
உதிர்ந்தே விழுந்தாலும்
உங்கள் பாதம் தாங்கிடுவேன்.
இறைவன் தோளில் உறைந்திடுவேன்
பூவையர் குழலில் நிறைந்திடுவேன்
தலை மீதேறி அமர்ந்தாலும்
தலைக்கனம் இன்றி வாழ்ந்திடுவேன்
பூத்தாலும் மலராய்ப் பூத்திடுவேன்
புதைந்தாலும் விதையாய்  முளைத்திடுவேன்
அமைதிக்கும் அழகுக்கும்
அகிலம் சொல்லும் பொருளாவேன்.
காலை மலர்ந்து மாலை உதிரும்
ஒருநாள் வாழ்வெனினும்
மறுநாளும் பூத்திடுவேன் பூவாகவே.
மதித்தாலும் மிதித்தாலும்
மனம்தளரா குணத்துடனே
மறுபடியும் பிறந்திடுவேன் மலராகவே!!!

அரும்பாய் மொட்டாய்  மொக்குள நனையாய்
முகையாய் போதுவாய் முகிழாய் மகிழ்வாய்
மலராய் அலராய் அதனுள் மணமாய்
வருவாய் வெற்றியைத் தருவாய் தினமே!!!



மேலும்

மௌனமாய்ப்  பூக்கின்ற
மலர்களாய்  - நாங்கள்
நித்தம் நித்தம்
புத்தம் புதிதாய் மலருகின்றோம்.
அவை
தன்னலம் கருதாமல்
திசை நிரப்புகின்ற
நறுமணம் போல
நாங்களும்
சுயநலம் விடுத்து
பொதுநலம் பேணுகின்றோம்.
பூக்கள் மலர்ந்து
புன்னகை பூப்பதற்க்காய்
நிலவும் கதிரும்
இரவு பகலாய்
உதவி செய்வதை போல
நல்லோரின் துணையால்
நலம் பேணி வாழுகின்றோம்
ஒரு மலர் மாலையில்
விதம் விதமாய்
பல மலர்கள்
இருப்பதை போல
எங்கள் மனமலர்கள்
பல கொண்டு - இந்த
நூல் மலரை தொடுத்து - உங்கள்
கால் மலரில் வைக்கின்றோம்..
வாசித்து மகிழ்ந்திடுவீர் !!!







மேலும்

எரிதழல் எடுத்துவா தோழி!!!--------------------------------------------
இறைவனே
பெண்களுக்கு ஏனிந்தப்பிறவி தந்தாய்?
இல்வாழ்க்கை ஆனாலும்
பொது வாழ்க்கை ஆனாலும்
அவர்களுக்கு
நல் வாழ்க்கையே  இல்லையே !!
நிலவரங்கள் மாறி
கலவரங்கள் ஆகும்போது
களப்பலி ஆவதெல்லாம்
பெண்கள்தானே !!
பெண்மையை ...
கோவில் கருவறைக்குள்
சக்தியாய்
பார்க்கும் உலகம்
மனிதக் கூட்டத்தில்
சகதியாய் பார்க்கிறதே !!
இனியொரு விதி செய்வோம்
இன்னொரு முறை
துகிலுரியப்படும்போது
கண்ணனுக்காகக்
காத்திருக்க வேண்டாம்
தீ மிதிக்கச் சொல்லும்
ராமன்களை
செவிமடுக்க வேண்டாம்

தமிழ் மகளாம்
கண்ணகியாய் மாறிடுவோம்
மதுரை எரிந்தது போல்
மனித மிருகங்கள்
எரிந்து அழியட்டும்.இனிமேலாவது
மாதரையும் மதிக்கின்ற
மானுடம் தழைக்கட்டும்.
மாமுகி .



மேலும்

செம்மொழியான தமிழ்மொழி
-----------------------------------------------
கல்லும் மண்ணும் தோன்றாத
காலத்தே தோன்றியது எங்கள் தமிழ்
சொல்லும் அணியும் குன்றாத
இலக்கணம் இயற்றியது எங்கள் தமிழ்
இயலிசை கூத்தாய் குறையாத
இனிமை படைத்தது எங்கள் தமிழ்
முதலிடை கடையாய் மங்காதசங்கம் அமைத்தது  எங்கள் தமிழ்
குறுசுவை குறளாய் அழியாத
வேதம் ஈன்றது எங்கள் தமிழ்
கரும்பினும் சுவையாய் உடையாத
சிலம்பு படைத்தது எங்கள் தமிழ்
பகைகெடு வீரமெனில் தளராத
வல்லினமாவது எங்கள் தமிழ்சுவைதரு காதலெனில் மலராக
மெல்லினமாவது எங்கள் தமிழ்
விதிசொலும் நீதியெனில் மாறாத
இடையினமாவது எங்கள் தமிழ்
களவையும் கற்பையும் அழியாத
காவியம் ஆக்கியது எங்கள் தமிழ்
உடலையும் உயிரையும் பிரியாத
உயிர்மெய் ஆக்கியது எங்கள் தமிழ்
வழிபடு இறைவனை அழைக்கத்திரு
வாசகம் தந்தது எங்கள் தமிழ்
எதிர்படு பகைவரை அழித்து பரணி
நாதம் முழங்கியது எங்கள் தமிழ்
அன்று தொல் காப்பியன் கண்டஇலக்கணப் பொன்மொழி எங்கள் தமிழ்
இன்று நல் தலைவர்கள் கண்டஇலக்கியச் செம்மொழி எங்கள் தமிழ்
காலம் வென்றெடுத்த அறவழி
சொன்ன மறைமொழி எங்கள் தமிழ்
ஞாலம் வென்றெடுக்கும் அறிவியல்
சொல்லும் புதுமொழி எங்கள் தமிழ்இல்லை என்பதை இல்லையாக்கும்
இனிய வாய்மொழி எங்கள் தமிழ்
உள்ள அன்பதை கொள்ளையாக்கும்
புதிய தாய்மொழி எங்கள் தமிழ்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
பேச்சும் மூச்சும் எங்கள் தமிழே
ஊனும் தமிழ் ஊன்  உறைந்து  வாழ்
உயிரும் தமிழ் அது எங்கள் தமிழே
மாமுகி

மேலும்

யாப்பு மோனையும் இல்லாதது பாவினமோ

நேரிசை வெண்பா


அகத்தியன் செய்த அணிமோனை வேண்டாம்
பகரும் கவினின் பகரம் --- விகற்ப
மதையேற் றிடாநம் மனமும் கொதிக்க
பதைக்குதையோ பாவினமாம் பார்

பகரும். = சொல்லுதல்

பகரம். =. பதில்






தாங்கள் இந்த எழுத்துத் தளத்தில் பலவருடஙகளாகஎழுதி வருவது
பலரும் அறிந்தது. இந்தத் தளத்தில் அனேகரும் காதல்
பற்றியே உரைநடை பாடலையே ஏதோ யாப்பிலக்கணப் பாடலைப்
போன்று எழுதி வருவதும் அதை ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்வதும்
உமக்கும் பரிச்சயமே. நீங்களும் பலபல பாடல்களை வெண்பா என்றும்
கலிவிருத்தம் கலித்துறை என்றும் எழுதி அதை யாப்பார்வலர்கள்
கவனிக்கவும் என்றும் ஒராண்டாய் எழுதி வருகின்றீர்கள். அப்பாடல்களில்
பலத்திலும் கனிச்சீர்களும் பூச்சீர் நிழல் சீர்கள் வரை எழுதினீர்கள் .. நானும்
மற்றொருவர் பாவலர் பாமணி டாக்டர் அவர்களும் இதைச் சுட்டிக்காட்டி
பலமுறை அப்படி எழுதுவது தவறு என்று கூறியது எழுத்தில் இன்றும் கிடக்கிறது.
அதற்கு நீங்கள் யாப்புப் பாக்கள் வேறு நான் எழுதுவது பாவினம் என்றீர்கள்


பவினமென்று யாப்பிலக்கண நூலில் விதிகள் சொல்லவில்லை என்று நான் சொல்லி
வந்தேன். மேலும் பாவினத்து வெண்பா கலிவிருத்தம் கலித்துறை என்று எழுதாதீர்கள்.
அப்படி நீங்கள் எழுத மற்றவர்களும் அந்தப் பிழையை செய்வார்கள் என்றும் கேட்டுக்கொண்டேன்.
ஆனால் நீங்கள் தொடர்ந்து பிழையாக எழுதி அதற்கு கலித் துறை கலி விருத்தம் அறு சீர் விருத்தம்
என்றெல்லாம் இஷ்டம் போல எழுதி வந்தீர்கள். பலதடவை டாக்டர் திரு வ. கன்னியப்பன் அவர்கள்
உங்கள் பாட்டைத் திருத்தி சரியான எதுகை மோனை போட்டு எழுதிக் காட்டியும் நீங்கள்
உங்கள் பிழையை ஒத்துக்கொள்ளாமல் அது பாவினம் மோனை வேண்டாமென்றீர்... அப்படியாயின்
கலி விருத்தம் கலித்துறை என்றும் அறுசீர் விருத்தம் எண்டும் குறிக்காதீர் என்றும் சொன்னோம்.

நான் 20.10.22 இன்று

குதிரை சவாரியாக் கழுதை சவாரியா ?

என்ற நேரிசை வெண்பா எழுதினேன்

புணரக் கழுதை குதிரையை யீனா
உணர்ந்துநீ யாப்பில் புனைவாய் --- கணக்காய்
நுணுக்கங் களையும் புரிந்து ஒதுக்கு
பனுவலாகா பாவினம் பார்


முதல் வரியில். பு. கு மோனை

இரண்டில். உ. பு. மோனை

மூன்றில். நு. பு. மோனை

நான்கில். ப. பா மோனை



யாப்பிலக்கணம் குதிரை என்றால் மற்றவை கழுதை
பாவினத்தில் யெவரும் செய்யுள் இலக்கியம் படைக்கவில்லை
முதலையும் மூர்கனும் கொண்டது விடாரென யாப்பு எழுத முடியாது
இல்லாத பாவினதை உறுதி செய்யாதீர்

ணு. னு வர்க எதுகை. இரு விகற்ப நேரிசை வெண்பா

என்ற வெண்பாவில் மோனைகளின் அவிசியமும்
பாவினம் என்பதொன்று இல்லை என்று எழுதினேன்


அதற்கு நீங்கள் பதில் சொல்லும் விதத்தில் 20.10.22 பகல் 2.16 மணிக்கு
கீழ் கண்ட இன்னிசைக் சிந்தியல் வெண்பா எழுதி


பாவினம் எழுதி நாவினில் உலவச் செய்வோம்
யாப்பினை என்று எழுதி மழுப்பி இருந்தது.


உங்கள் பாடல் இதுதான்

பாவினத்தை பாவைநாம் யாப்பின்
அழகினில்

நாவில் உலவிடச் செய்திடுவோம்
பூவிழியே

பூவிதழே புன்னகைபோ தும்


அதற்கு நானும் ஒரு கருத்து அளித்தேன் அதுவும் கீழே உள்ளது

" தம்பி கவின் சாரலருக்கு வணக்கம்

பாடலின் இரண்டு மூன்று வரிகளில் மோனை யில்லை மற்றும் பாவினக் கருத்து பரப்பல் தவறு
இதைத்தான் துளி விஷம் என்பது .. எழுந்து நிற்க முடியாதவனுக்கு யாப்பு பாவினமும் இரண்டு பெண்டாட்டி எதற்கு !


"" யாப்பிலக்கணத்திற்கு எதிராக பாவினம் என்ற விஷத்தை பரப்பதீர்கள் "" என்று சொன்னேன்

அதற்கும் விடாமல் நீங்கள் தந்த பதில்


இலக்கண அணுகுமுறைகள்
வேறானது
தளை தட்டா
சீரமைப்புதான் வெண்பாவின்
அடிப்படை விதி
அண்மையில் யாப்பிலக்கணம்
தெரிந்து ஆர்வத்தில் எழுதுகிறீர்கள் நன்று
அதனாலே உங்கள் கருத்திற்கு
மரியாதை கொடுத்து எழுதுகிறேன்
தமிழ்க் கடவுள் முருகனுக்கு
இரண்டு மனைவியர்கள்
அதுபோல் தமிழ்க்கவிதைக்கு
இருவர்
ஒருத்தி யாப்பினள்
இன்னொருத்தி புதுக்கவிதையினள்



நான் உங்களைக் கேட்டது யாப்பு என்று பாவினத்தை புகுத்தவேண்டாமென்றேன் நீங்களோ பாவினம் விடுத்து
புதுக்கவிதை இன்னொரு மனைவி என்கின்றீர் இப்போது பாவினம் மாறி புதுக்கவிதையை
போட்டு எதற்கு திசை மாற்றுகிறீர்,குழப்புகின்றீர். பாவினம் என்ன ஆயிற்று.


மேலும் நானும் "". அண்மையில் யாப்பிலக்கணம் தெரிந்து ஆர்வத்தில் எழுதுகிறீர்கள் நன்று """
என்று ஏதோ நான் யாப்பு அறியாத அப்பாவி இன்றுதான் கற்றுக் கொண்டவனென சொல்லுகிறீர்கள்

நான் 40 வருடமாய் சித்தர்களின் வெண்பா களி விருத்தம் கலித்துறை கழிநெடிலடி விருத்தம் போன்ற யாப்புப் பாடல்களை படித்து வருகிறேன்.ஆனால் 5 வருடங்களாகத்தான் எழுத்தில் எழுதுகிறேன் அந்த
40 வருட படிப்பு அனுபவமில்லையா போதாதா. ?


வெண்பாவில் மோனை வேண்டும் என்று கேட்டால் உங்கள் பதில்


""" தளை தட்டா சீரமைப்புதான் வெண்பாவின் அடிப்படை விதி மோனை தேவையில்லை
அடிப்படை விதி யில்லை என்கிறீர்கள். எங்கிருக்கிறது வேண்டாமென்று சட்டம்


நான் காட்டுகிறேன் வேண்டுமென்ற சட்டம் இதுதான
எனது பதிலும் இதுதான்

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அகதியனும் வள்ளுவனும் வெண்பாவில் கலித்துறை
கலிவிருத்தத்தில் எதுகை மோனை வைத்து எழுத கவின் சாரலருக்கு அது தெரியவில்லையா
அல்லது எழுத வரவில்லையே என்பதை சொல்ஸ்ட்டும்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய சில பழைய கலித்துறையும் வெண்பாவும் தந்துள்ளேன்
பாருங்கள். அதில் யாரெல்லாம் வெண்பாவில் மோனையை எழுதி இருக்கிறார் பாருங்கள்


சுமார் 40 வருடங்களாக 28 சித்தர்களின் நூல்களை 50 க்கும்ர் மேற்ற்பட்ட நூல்களைப் பலமுறை
ஆழ்ந்து படித்திருக்கிறேன்

சித்தர்கள் அகத்தியர் கொங்கணர் சிவ வாக்கியர் கைலாய முநிகள் யாக்கோபு போகர்
கோரக்கர் மச்சர் தன்வந்திரி திருமூலர் மற்றுமுள்ளோர் அனைவரும் யாப்பின் இலக்கணத்தில்
விருத்தங்கள் வெண்பா கலித் துறை கலிவிருத்தம் பாடல்களிலே தக்க எதுகை மோனை யுடன்
பாடியுள்ளதை ஆயிரக்கணக்கில் பார்க்கலாம். கேட்டால் நானே காட்டுகிறேன் . எங் கிருந்து
வந்தது உங்கள் பாவினம் காட்டுங்கள்.

அகத்தியர் பரிபாஷைத்திரட்டு. 500

அகத்தியர். ( காய கற்ப ரகசியம் பற்றிய நூல் )


கலித்துறை

காபபு

பரமஞா னோதயத்துப் பரஞ்சுடர் உலகுக் கெல்லாம்
திரமதாய் உதித்தஞான திவாகரன் திருத்தாள் காப்பு
கரமாம் வகாரயோ கமறைப்பு நூற்பாடை யெல்லாம்
முருகவிழ் தமிழ்செய்ய முருகனைங் கரர்தாள் காப்பே

நான்கு வரிகளிலும் ஒன்று மூன்று சீர்களில் தவறாத மோனைகளைப் பாருங்கள்

ப, ப தி. தி. க. க. மு. மு


பாயிரம்


கலித்துறை

இந்தநூலைந் துகாண்டத் தியம்பிய கருவே தென்றா ல்
சந்தேகந் தீர்க்கவேண்டித் தமிழ்கவி யைநூற் றுக்குள்
மந்திரவா தயோக மணிபஞ் சீகரண மார்கம்
சிந்தைசெய்வ காரபாட்டை தீட்சையுஞ் செப்பு மாதே


இக்கலித்துறை யிலும் 1 மற்றும் 3 லும் மோனைகளை கவனியுங்கள்

1.இ. தி 2. ச. த. 3. மா. மா. 4. சி.... தீ


திருவள்ளுவர் எழுதிய காயகற்ப நூலில்.

பஞ்சரத்தினம் எனும் நூலில்


வெண்பா

தன்னை யறிந்தவற்குந் தானன்றோ வானத்தில்
அன்னையவள் வந்துமே ஆதரித்து --- முன்னை
பவமோட்டிப் பாலூட்டிப் பக்குவமேற் கூட்டிச்
சிவநிலையை சேர்ப்பாள் சிறந்து. (பாடல். 74)

வரி 1 இல். த ,. தா,,. 2 இல் அ. ஆ. 3 இல். ப. ,. ப 4 இல். சி. ,. சி

வெண்பா

பிண்டத்தின் மேற்குப் பிரிதிவி தான்கிழக்கு
அண்டத் தினடிமுடி யற்சிப்பார் -- விண்டுமுன்னே
காணாச் சுழிமுனையை கண்டார்க்கு பிண்டத்தில்
மாணா பலிக்கும் மருந்து. (75)

வரி
1. இல். பி. ,பி. 2 இல்ல அ. ,. ய(அ). 3 இல். கா,. க. 4 இல் மா,. மா

வெண்பா

அப்புவுடன் வன்னியும் ஆனதோர் தேயுவும்
இப்புவியி லேக மிருந்திட -- ஒப்பியதோர்
ஆதி வழலை ஆகுமே ஈதறியும்
சேதியின் நூலினால் செய். பாடல். (89)


வரி 1 இல் அ. ஆ. 2 இல் இ,. மி. 3. இல். ஆ. ,. ஆ. 4. இல் சே ,. செ



அகத்தியர் எழுதிய மதி வெண்பா. 100 என்ற நூலிலும் பாருங்கள்
தவறாத மோனையை அகத்தியர் கையாண்டது கண்ணால் பார்த்து நம்புங்கள்
மோனையை அகத்தியர் காலத்திலேயே கையாண்ட ஒன்று . மோனை
வே ண்டாமென்பது கையாலாகாத த் தனம். வேறில்லை என்பேன்

இதுவொரு கிடைத்தற்கரிய நூலாகும்


கடவுள் வாழ்த்தில் பாருங்கள்


வெண்பா

ஆதி சிவனுமையாட் கன்புடனே யன்றுறைத்த
சோதிமதி வெண்பாவைச் சொல்லுதற்கு. -- நீதியுள்ள
மாலைசிறு பெண்ணாம் மனோன்மணியி டம்வைத்த
காளையே றுஞ்சிவன்றாள். காப்பு


1 வது வரியில். ஏ. க. 2 வது சோ சொ. 3. வது மா,. ம. 4 வது. கா,. கா.

காப்பான ஐந்துகரன் கந்த முருகவேள்
வாய்ப்பா மலர்த்தான் மனதில்லை -- தேற்றித்
தவமுனி சித்தர்முதற் சாற்றிய நூலெல்லாம்
நவமணியா மிந்நூலை நத்து


1 வது வரையில். கா. க
2 வது வரியில். வ. ம
3 வது வரியில். த. ச
4 வது வரையில் ந. நா


பல ஆயிரம் வருடத்திற்கு முன்னமே தமிழ் படைத்த அகத்தியனும் பிறரு வந்தவர்களும்
எதுகை மோனைஉபயோகித்து எழுதிய ஆயிரக்கணக்கில் எழுதிய பல்வகைப் பாடலுண்டு.
வெண்பா கலிவிருத்தம் கலித்துறை வெண்பா கழி நெடிலடி விருத்தங்களை எங்குவேண்டுமாலும்
கொடுக்கிறேன்.. மோனை ஒன்றிரண்டு விடுபட்ட பாடல்களும் உண்டு .மோனை தேவையில்லை
என்று எங்கும் எவரும் சொன்னதில்லை . ஆனால் பாவினம் என்ற இல்லாத ஒன்றை சொல்லுவது
தவறு . அகத்தியனின் மோனைத் தவறா பாடலே சாட்சி


நன்றி

மேலும்

ஈற்றடியை இப்படியும் கொள்ளலாம்.. பதைக்கின்ற பாவினம் பார் பதைக்கவைக்கும் பாவினம் பார் 23-Oct-2022 5:15 pm
தொடருங்கள், நன்றே தொடருங்கள், அருமையாகச் சொன்னீர், நானும் புதுக்கவிதை எழுதுபவரைக் குறைசொல்லவில்லை, எழுத எழுத கவிதைகள் ஊறும், ஆனால், மரபு வகைக்கு எவ்விதத்திலும் பொருந்தாத ஒரு கவிதையின் கீழே பாவினத்தின் பெயரை ஒரு சிலர் குறிப்பிடுவது மிகவும் தவறு என்பதை நான் ஆமோதிக்கிறேன். அதேபோல, அடுக்குச் சொல்லை அடுக்கடுக்காக அடுக்கி, ஒரு வரிக்கும் இன்னோர் வரிக்கும் இடைவெளிவிட்டு, இரண்டாம் வரியின் ஈற்றுச் சொல்லுக்குபின் இடைக்கோடிட்டால், அது வெண்பா இலக்கணமாகி விடும் என்று சிலர் வெண்பாவைச் சிதைக்கின்றார், சொன்னால் சீறுகின்றார்..முறையாக இலக்கணம் பயிலாமல், வரிசையில் அடுக்கியதை விருத்தம், வெண்பா என்றெல்லாம் பதிவிடும்போது, அதையும் இலக்கணம் அறியாத சிலர் பாராட்டுகின்றார்.. என்ன சொல்வது, எப்படிப் புரிய வைப்பது. தொடருங்கள் உங்கள் முயற்சியை விடாதீர்... எதையும் சரியாக ஏற்றுக் கொளாமல் சிதைத்த தமிழின்நற் சீரைப் - புதைத்தார் வதைக்குமவர் பாக்கள் வனைந்த தெலாமும் பதைக்குதய்யா பாவினம் பார் நேரிசை வெண்பா பெருவை கி.பார்த்தசாரதி 23-Oct-2022 5:09 pm

மனிதம் - மதம்
ஓர் எழுத்து குறைபாட்டால் எத்தனை முரண்பாடுகள்

மனிதம் விதைக்கப்பட வேண்டிய மனங்களில்
மதம் அறையப்படுகிறது..

புத்தகம் எடுக்க வேண்டிய கைகள் காவித்துண்டுகள் ஏந்துகின்றன..

தேசியக் கொடி இருக்க வேண்டிய இடத்தில் காவிக்கொடி திணிக்கப்படுகிறது ...

இன்னும் போனால்
பாரத மாதாவும் காட்சி அளிப்பாள் காவி உடையில் கையில் கமண்டலத்துடன் ...


காலம் காலமாக எழாத கேள்விகள்
எங்கிருந்து தொடங்கி வைக்கப்பட்டது..

சிறுபான்மை என நினைத்து நசுக்க நினைப்பது எத்தனை அபத்தம்..
சிறு உளி பெரிய மலையையே பெயர்த்தெடுக்கும் என்பதை மறந்ததின் விளைவு

மாணவ சமுதாயத்தின் மீது 
மதநெருப்பினை உமிழ்ந்தது யார்?

மதம் மனிதனை தின்பது இன்னும் எத்தனை காலங்களுக்கு?
 
நாங்கள் மதங்களை கடந்தவர்கள் எங்களுக்கு ராமரும், நபிகளும் ஒன்று தான்

எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் இந்நாட்டுமன்னர் தான்

மனிதர்களை நேசிப்போம்
மனிதத்தை வளர்ப்போம்

            அன்புடன் ஆர்கே...

மேலும்

தூரம் 

நிலவைப் பிடிக்க முயன்றேன்
 எட்டவில்லை
என் நிலாவை பிடிக்க முயன்றேன் எட்டியது 
எப்படி? 
நான் பிடித்தது என்னவோ என் தோழி வெண்ணிலாவை அல்லவா? 
பெயர் என்னவோ ஒன்று தான் 
ஆனால் அதை பிடிக்கும்
 காலம் தான் தூரம் 
நிலவை பிடிக்க ராக்கெட்டில் போகனும் 
ஆனால் என் நிலாவை பிடிக்க 
மிதிவண்டி ஒன்று போதும் 
நிலாவை (சந்திரனை) பார்க்க 
அறிவியல் மாணவர்களும் விஞ்ஞானிகளும்
 தான் செல்ல முடியும் 
ஆனால் என் நிலாவை (வெண்ணிலாவை) பார்க்க, 
அன்போடு எவர் பார்க்க 
சென்றாலும் பார்க்க முடியும்
தூரம் அன்பிற்கு விதிவிலக்கு.

மேலும்

விண்

வானமே எல்லை
வானைப் பிடிக்க ஆளும் இல்லை
பட்டா போட பத்திரம் இல்லை
கிரயம் பண்ண புரோக்கரும் இல்லை
கிரஹப்பிரவேசம் செய்ய பத்திரிக்கை இல்லை
குடியிருக்க வீடும் இல்லை
மொத்தத்தில் வானமே 
சொர்க்கத்தின் சுதந்திர வில்லை .


மேலும்

புதன் அன்று பிறந்த
புத்தம் புது🌸🌸 பொக்கிஷமே! 🌸🌸
தைத்திங்கள் திருநாள் - எங்கள்
பொங்கல் திருநாள்!
💐நம் இல்லங்கள்💐
💐உள்ளங்கள் 💐
💐மகிழ்ச்சிகள்💐
💐நிறைந்திட💐
💐அன்பு உறவுகள்💐
💐இணைந்திட💐
💐புத்தம்புது பொலிவுடன் 💐
💐புத்தாடைகள்💐
💐ஜொலித்திட💐
💐பக்திபண்புடன்💐
💐பகலவனை வணங்கிட💐💐
💐வெண்ணிற பொங்கல் பொங்கிட!
💐பொங்கல் திருநாளை சிறப்பாக
கொண்டாடுவோம்!💐உழவர் மகிழ்நாளை💐
உன்னதமாய்
வரவேற்போம்💐
💐அனைவருக்கும்💐
🌸என் இனிய🌸
🌸பொங்கல் நல்🌸
🌸வாழ்த்துகள்🌸🌸
💐💐💐💐💐💐💐

மேலும்

மேலும்...

மேலே