எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மௌனமாய்ப் பூக்கின்ற மலர்களாய் - நாங்கள் நித்தம் நித்தம்...

மௌனமாய்ப்  பூக்கின்ற
மலர்களாய்  - நாங்கள்
நித்தம் நித்தம்
புத்தம் புதிதாய் மலருகின்றோம்.
அவை
தன்னலம் கருதாமல்
திசை நிரப்புகின்ற
நறுமணம் போல
நாங்களும்
சுயநலம் விடுத்து
பொதுநலம் பேணுகின்றோம்.
பூக்கள் மலர்ந்து
புன்னகை பூப்பதற்க்காய்
நிலவும் கதிரும்
இரவு பகலாய்
உதவி செய்வதை போல
நல்லோரின் துணையால்
நலம் பேணி வாழுகின்றோம்
ஒரு மலர் மாலையில்
விதம் விதமாய்
பல மலர்கள்
இருப்பதை போல
எங்கள் மனமலர்கள்
பல கொண்டு - இந்த
நூல் மலரை தொடுத்து - உங்கள்
கால் மலரில் வைக்கின்றோம்..
வாசித்து மகிழ்ந்திடுவீர் !!!நாள் : 8-Jul-24, 11:46 am

மேலே