எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் பூ -------------------- அந்திக்கு முந்திடுவேன் - முதலில்...

      நான் பூ
  --------------------
அந்திக்கு முந்திடுவேன் - முதலில்
அகிலத்தைப் பார்த்திடுவேன்
திசை  நிரம்ப மனம் பரப்பி
உங்கள் சிந்தை கவர்ந்திடுவேன்
சுற்றத்தோடு வாழும் கலை
கற்றுக் கொடுத்துடுவேன்.
உங்கள் விழிகளுக்கு விருந்தாக
வழியெங்கும் பூத்திடுவேன்
உதிர்ந்தே விழுந்தாலும்
உங்கள் பாதம் தாங்கிடுவேன்.
இறைவன் தோளில் உறைந்திடுவேன்
பூவையர் குழலில் நிறைந்திடுவேன்
தலை மீதேறி அமர்ந்தாலும்
தலைக்கனம் இன்றி வாழ்ந்திடுவேன்
பூத்தாலும் மலராய்ப் பூத்திடுவேன்
புதைந்தாலும் விதையாய்  முளைத்திடுவேன்
அமைதிக்கும் அழகுக்கும்
அகிலம் சொல்லும் பொருளாவேன்.
காலை மலர்ந்து மாலை உதிரும்
ஒருநாள் வாழ்வெனினும்
மறுநாளும் பூத்திடுவேன் பூவாகவே.
மதித்தாலும் மிதித்தாலும்
மனம்தளரா குணத்துடனே
மறுபடியும் பிறந்திடுவேன் மலராகவே!!!

அரும்பாய் மொட்டாய்  மொக்குள நனையாய்
முகையாய் போதுவாய் முகிழாய் மகிழ்வாய்
மலராய் அலராய் அதனுள் மணமாய்
வருவாய் வெற்றியைத் தருவாய் தினமே!!!நாள் : 8-Jul-24, 2:10 pm

மேலே