kaviraj - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  kaviraj
இடம்:  chennai
பிறந்த தேதி :  25-Nov-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Feb-2022
பார்த்தவர்கள்:  334
புள்ளி:  222

என்னைப் பற்றி...

நான் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது...
யாரும் ................................

என் படைப்புகள்
kaviraj செய்திகள்
kaviraj - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Feb-2023 9:23 pm

பனித்துளி போல்
பரிசுத்தமாய்
நம் நட்பு...

நிலவோடு
மட்டுமே
நம் உரையாடல்கள்..

அன்புடன் ஆர்கே..

மேலும்

kaviraj - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jan-2023 8:58 pm

என்னை
தூரத்தில் பார்த்ததும்,
சிக்கித் தவிக்கும்
உன் கன்னக்குழி
புன்னகைக்குள்
ஒருநூறு கவிதைகள்
ஒளிந்து கிடக்கும்
நான் வாசிக்க...


அ| பெI அ | 6

அன்புடன் ஆர்கே..

மேலும்

kaviraj - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jan-2023 7:22 pm

நீ
வானவில் போல
வந்து
மறைந்து விட்டாய்...
இப்போது
எனக்கு மழைக்காலம்..

அ | பெ | அ - 5

அன்புடன் ஆர்கே..

மேலும்

kaviraj - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jan-2023 7:08 pm

(அ | பெI அ - 4)

நான் அருகினில் வந்தால்,
தூரம் செல்கிறாய்...

பேசினால்,
மெளனம் காக்கிறாய்...

உரிமை கொண்டால்,
யாரோ போல் பார்க்கிறாய்...

விலகிச் சென்றால் மட்டும்
கோபம் கொள்கிறாய்
என்னவளே ...
என்ன
உன் நியாயம்?

அன்புடன் ஆர்கே..

மேலும்

kaviraj - kaviraj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-May-2022 9:00 pm

முடியாத வாக்குறுதிகளை
ஏன் முன் வைக்க வேண்டும்?
உச்சிக்கும் பாதத்திற்கும்
ஏன் முடிச்சிட வேண்டும்?
அரசூழியர்கள் நம்பிக்கையை
ஏன் குழி தோண்டி புதைக்க வேண்டும்?

விடியல் ஆட்சி
எங்கள் கிழக்கில் இன்னும்
உதயமாகவே இல்லை
உதயசூரியன் ஒரு வேளை
ஓய்வெடுக்க சித்தமாகி விட்டதோ...

அரசாங்கத்தின் ஆணிவேர்கள்
அரசு ஊழியர்கள்
வேர்களை அசைத்துப் பார்ப்பது
தான் மனுதர்மமா?

தாயைப் போல்
அரவணைக்க வேண்டியவர்களுக்கு
எதற்கு
மாற்றான் தாய் மனோபாவம்?

மூத்த பிள்ளைகளுக்கு சகலத்தையும்
வாரி வழங்கி விட்டு
இளைய பிள்ளைகளை வீதியில் விடுவதா?

ஓய்வூதியம் என்பது ஊழியர்களின் உரிமை அதை
கொச்சையாக நினைப

மேலும்

வெள்ளையக் கொடுங்கோலனே ஓய்வு ஊதியம் ஆரம்பித்தான் பின் காமராஜர் ஆரம்பித்து பிறகு சுமார் இருபது வருடங்களுக்கு முன் வரை பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வு ஊதியம் உண்டு. பிறகு சேர்ந்தவர்களுக்கு இல்லை என்பது வுண்மையில் ஞாயமில்லை தான். மாநில அரசில் அவர்கள் அடிக்கும் கூத்திற்கும் கும்மாளத்திற்கும் அளவே கிடையாது. காமராஜர் காலத்தில் தனக்கு செக்யூரிடியாக ஒருதலமைக் காவலரை வைத்திருந்தார். ஆனால் இன்றைய மந்திரிகள் பாதுகாப்பு பிரிவுக்கென ஐஜி. DIG பல SP DSP INPECTORS S.I. s PALA காவலர்கள் என நிரம்பி ஒரு பட்டாளமே இயங்கி வருகிறது. அரசியல் வாதிகள் வளர்த்த காட்டு ரவுடிகள் வீரப்பன் மற்றும் நக்சல் களை பிடிக்க I.S I தீவிரவாதிகள் பிடிக்க நடவடிக்கை தடுக்க. திறமையில்லா காவல் அதிகாரிகள் கூட்டம் அவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை அப்ஸ் செய்யும் அதிகாரிகள் கோடி கோடி யாக மாவட்ட ஆட்சியருக்கு ஒதுக்கப்படும் கணக்கில் வராத நிதிகள் இதே போல் MLA KKU ஒதுக்கும் நிதிகள். மணி மண்டபம் கட்டும் நிதிகள் சிலை வைக்கும் நிதிகள் கட்டிட திறப்புவிழா என்ற கணக்கில் கணக்கு வழக்கிலா செலவு. மந்திரிகளின் கட்டுப்பாடு இல்லா பயண செலவுகள் MLA விடுதிகள் பராமரிப்பு மந்திரிகளின் மாளிகை களின் செலவுகள் திராவிடர் புத்தக மொழி பெயர்ப்பு செலவு. தேவை இல்லாமல் இஸ்திரி பெட்டியிலிருந்து எதையும் இனாமாக வழங்குதல் ஆட்டுகுட்டி மாட்டு கன்றுகள் இனாமாக கொடுப்பது அதற்கான விழா செலவுகள் என்ற பலவிதத்தில் ஆடம்பரமாக வாழும் அரசியல வாழ்க்கையை கைவிட்டாலே ஓய்வு ஊதியம் பாதியாவது வழங்கலாம். சாராயப் பணம் கொள்ளை கொள்கையாக வரா அது எங்கே போகிறது. ரோடு. பாலம் சாக்கடை கட்டிடம் முதல் எல்லாவற்றிற்கும் சிமெண்ட்டை கைப்பிடி கனக்கில் போட்டு காட்டிடும் கட்டடங்கள் இரண்டாண்டுக்குள் மீண்டும் மீண்டும் புதுப்பிப்பது. இதைத்தானே செய்கிறார்கள். வெளிநாட்டு பெட்ரோலில் ஒடும் பஸ்ஸில் இலவசம் யாராவது கேட்டார்களா ? இப்படடி கண்டபடி கண்ட கண்ட இலவசங்கள். மாணவர் இல்லாத பள்ளிக்கு பத்து ஆசிரியர் நியமிப்பது போ ன்ற விரயங்களை தவிற்காதது போன்றவர்ரை யும் நீக்குங்கள். அரசாங்கம் ஊழியர் இல்லாது நடக்குமா ? ஓய்வு ஊதியம் அவர்களுக்கு கொடுக்க அரசாங்கம் வருமானத்தை பெருக்க வேண்டாமா? வருமானம் தரக்கூடிய தொழிற்கூடங்களுக்கு இலவச தண்ணீர் இலவச மின்சாரம் என்பன தந்து அவர்களிடம் மொத்தமாக கமிஷன் வாங்கிக்கொண்டால் அரசுக்கு எப்படி வருமானம் வரும் . எப்படி ஓய்வூதியம் கொடுப்பார்கள். ஆளத்தெரியா கொள்ளையர் ஆண்டால் இப்படித்தான் நடக்கும். Co-- operative முனிசிபாலிடி போன்ற டிபார்ட்மெண்ட் களுக்கு ஓய்வு தந்து புதிதாக பெருக வைத்ததும் தவறு. இதெல்லாம் அரசாங்கத்தின் அமைச்சர்களின் குற்றம். 20-May-2022 3:59 pm
உண்மை ஐயா . நன்றிகள் 10-May-2022 8:59 pm
கேடு வரும் பின்னே மதிக்கெட்டுவிடும் முன்னே. - இதற்கு அரசும் ஆளுவோரும் பொருந்துவர். 10-May-2022 5:53 pm
kaviraj - kaviraj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-May-2022 8:46 pm

இரவினில்
தொட்டிலில் தூங்கியே பழகிய உன்னை
கட்டிலில் பழக்கப்படுத்த
தொட்டிலை மறைத்து வைத்து
காக்கை எடுத்துச் சென்றதாக
கதை கட்டினோம்.,

கதையை நம்பி
கட்டிலில் உறங்கிப் போனவன்..

காலையில்
எழுந்ததும்
தன்னிடம் இருந்த
காக்கை பொம்மையை
அடித்துக் கொண்டிருக்கிறான் ...

அன்புடன் ஆர்கே ..

மேலும்

நன்றி ஐயா .. 10-May-2022 8:55 pm
நல்ல புனைவு 10-May-2022 5:54 pm
kaviraj - kaviraj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-May-2022 8:17 pm

அன்புள்ள வாசகியே..

என்னை எழுத்தாளனாக்கி விட்டு
நீ வாசகியாகி விட்டாய்

உன் வருகைக்குப் பிறகு
என் முகப்புப்பக்கத்துடன் சேர்த்து
முகமும் அழகாய்த் தெரிகிறது..

எனக்காக காத்திருக்கும்
உன் தகவல்களுக்கும்
கால் நோகக் கூடாது என்பதில்
கவனமாய் இருக்கிறேன்..

உன் தேடல் நேரங்களை
மிச்சம் செய்யவே
எனது படைப்புக்களை
சிறந்தவையாக்கி முகப்பில் நிறுத்த
என் எழுத்துக்களுக்கு வல்லமை தருவாயென
கடவுளிடம் கோரிக்கை அனுப்புகிறேன்

உன் கருத்துரைகளை படித்து விட்டு
பதில் அனுப்ப தடுமாறி நிற்கிறேன்..
சிலவற்றை சேர்ப்பதும்.,
சிலவற்றை அழிப்பதுமாக.,
கடைசியில்
நன்றியையே முடிவு செய்கிறேன்


மேலும்

..... 07-May-2022 7:06 pm
Sirappu.. 07-May-2022 5:42 pm
kaviraj - kaviraj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-May-2022 8:30 pm

அதோ அந்த இடத்தில் தான்
பல ஆண்டுகளாக
உன்னை நான் சந்திக்கிறேன்

நான் உன்னை
பார்க்க நினைக்கும்போதெல்லாம்
கோவிலென மனதிற்குள்
தோன்றி மறையும் அந்த இடம்...

பார்க்க வரும் சமயங்களில் எல்லாம்
கற்பக தருவென வற்றாமல்
தரிசனங்களை வாரி வாரி
வழங்கியது அந்தஇடம்..

அந்த சாலையில்
எத்தனையோ வேகத்தடைகள்
இருந்த போதும்
என் கவனத்தை ஈர்த்த வேகத்தடை
அதுதான்
அதனைக் கடக்கும் பொழுதுதான்
என் அத்தனை வேகமும்
அனிச்சையாய்
குறைந்து விடுகிறது ...

உனக்கும் எனக்குமான நினைவுகள்
என்னுள் துளியாய் தொடங்கி
கடலாய் மாறி விட்டது..

இன்று உன்னைக் காணாத
அந்த இடம்
என்னையே வெறித்துப் பார்க்கிறது
கவலையில் கரைகிறது
கொஞ்சம் நெருங்கியது

மேலும்

நன்றி.. 07-May-2022 7:04 pm
Semmmmmmmmma... 07-May-2022 5:45 pm
kaviraj - kaviraj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Apr-2022 11:15 am

என் வழியெங்கும் சிந்தனை விதைகள்
பூக்களாய் சிதறிக் கிடக்கின்றன
நான் சிந்திப்பவைகளை
எழுதிக் கொள்ள முடி வதில்லை

எழுதியவைகளை
படிடிெயடுக்க முடிவதில்லை

படியெடுத்தவைகளை
தட்டச்சு செய்ய முடிவதில்லை

தட்டச்சு செய்தவைகளில்
வேகப்பிழைகள்
களைய முடிவதில்லை.

கால வெள்ளத்தோடு
நாமும் ஓடியே தீர வேண்டிய சூழ்நிலை...

நேர நெருக்கடிக்கிடைபில்
இவை
அனைத்தையும் தாண்டி ,
நீண்ட பயணத்திற்கு பின்னரே....
தளத்தை வந்தடைகிறது.,
படைப்புகள்


அன்புடன் ஆர்கே..

மேலும்

Fbla poduma.. Nalla iruku.. 22-Apr-2022 7:49 pm
kaviraj - kaviraj அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-Feb-2022 6:34 pm

நீ இல்லாத இடம் 
*வெற்றிடம்* ...,

காற்றும் உட்புக முடிவதில்லை .....

  அன்புடன் ஆர்கே..

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே