அன்புள்ள வாசகியே

அன்புள்ள வாசகியே..

என்னை எழுத்தாளனாக்கி விட்டு
நீ வாசகியாகி விட்டாய்

உன் வருகைக்குப் பிறகு
என் முகப்புப்பக்கத்துடன் சேர்த்து
முகமும் அழகாய்த் தெரிகிறது..

எனக்காக காத்திருக்கும்
உன் தகவல்களுக்கும்
கால் நோகக் கூடாது என்பதில்
கவனமாய் இருக்கிறேன்..

உன் தேடல் நேரங்களை
மிச்சம் செய்யவே
எனது படைப்புக்களை
சிறந்தவையாக்கி முகப்பில் நிறுத்த
என் எழுத்துக்களுக்கு வல்லமை தருவாயென
கடவுளிடம் கோரிக்கை அனுப்புகிறேன்

உன் கருத்துரைகளை படித்து விட்டு
பதில் அனுப்ப தடுமாறி நிற்கிறேன்..
சிலவற்றை சேர்ப்பதும்.,
சிலவற்றை அழிப்பதுமாக.,
கடைசியில்
நன்றியையே முடிவு செய்கிறேன்


அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (2-May-22, 8:17 pm)
பார்வை : 154

மேலே