உழைப்பே உயர்வு
இளைஞனே...
உன் பிறப்பு எப்படி இருந்தால்
என்ன ?
உழைப்பு உன்னை உயரத்தில்
ஏற்றி வைக்கும்
உன் உடலில் பூத்த
வியர்வை பூக்களுக்கு
ரோஜா பூக்களின்
மாலை காத்துக்கொண்டிருக்கும்
கற்காலம் முதல்
கணினி காலம் வரை
உழைப்பின் மேன்மையை
உலகிற்கு பறைசாற்றிக்
கொண்டிருக்கும் போது,
நீ மட்டும் சோம்பி இருப்பது
அழகல்ல..
எழுந்து வா ...
எறும்பை பின்தொடரு ..
உன்னால் முடியுமட்டும் உழை
உடலால் மட்டுமல்ல அறிவினாலும் .,
உழைப்பு தரும்
வெற்றிமலைகளுக்கு தனி மனமுண்டு
வெற்றிக்கனிகளுக்கு தனி சுவையுண்டு
மே தின வாழ்த்துகளுடன் .,
அன்புடன் ஆர்கே..