பெண்

கண்ணும் கண்ணும்
கதை பேசும் அழகு
பெண்ணும் பெண்ணும்
மொழி பேசும் அழகு
புன்னகை சிந்தும்
பூ மகள்
பொன்னகை சிந்தும்
பொன் மகள்
என
கவிதைகள் வடிப்பதும்
இலக்கியங்கள் அவளுக்கு
இலக்கணம் முடிப்பதும்
எவ்வளவு தூரம்
இனிக்க இனிக்க
இதயம் தொடுகின்றதோ
அவ்வளவு தூரம்
இலக்கியங்கள் விற்கப்படும்
விளம்பரங்கள்
விளைச்சல் எடுக்கும்.

எழுதியவர் : நிரோஷனி றமணன்l (1-May-22, 3:23 pm)
சேர்த்தது : நிரோஷனி றமணன்
Tanglish : pen
பார்வை : 442

மேலே