நிரோஷனி றமணன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  நிரோஷனி றமணன்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-May-2020
பார்த்தவர்கள்:  139
புள்ளி:  11

என் படைப்புகள்
நிரோஷனி றமணன் செய்திகள்
நிரோஷனி றமணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-May-2022 3:23 pm

கண்ணும் கண்ணும்
கதை பேசும் அழகு
பெண்ணும் பெண்ணும்
மொழி பேசும் அழகு
புன்னகை சிந்தும்
பூ மகள்
பொன்னகை சிந்தும்
பொன் மகள்
என
கவிதைகள் வடிப்பதும்
இலக்கியங்கள் அவளுக்கு
இலக்கணம் முடிப்பதும்
எவ்வளவு தூரம்
இனிக்க இனிக்க
இதயம் தொடுகின்றதோ
அவ்வளவு தூரம்
இலக்கியங்கள் விற்கப்படும்
விளம்பரங்கள்
விளைச்சல் எடுக்கும்.

மேலும்

நிரோஷனி றமணன் - நிரோஷனி றமணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2022 12:07 am

மேகம் வந்து வந்து
மோகனமாய் தொட்டுச்செல்லும்
அகன்று உயர்ந்த
அழகான மலை

அடர்த்தியாக செழித்த
செடிகளின் செருக்கு
கண்ணுக்கு குளிர்ச்சி
தொடர்ச்சியாக ஒலிக்கும்
பட்சிகளின் சப்தம்
காதுக்கு மகிழ்ச்சி

இலைகளின் நுனிகளில்
பூத்து நின்ற
நீர்த்துளிகள் சில
வடிந்து விழும்
வதனக்காட்சி
வசந்தம் தரவில்லை

தென்றல் வந்து வந்து
தேகம் வருடிச்சென்றது
தேன் தேடி வண்டுகள்
அங்கும் இங்கும்
பண் பாடித்திரிந்தன

கொண்டு வந்த
தேநீர்க்கோப்பை
கண்டு நிற்கும்
காட்சிகளில் ஒன்றானது
ஆவி பறந்தும் சூடு
அளவாய் இருந்தது
ஒரு மிடர் அருந்திவிட்டு
ஆழமாய் பார்ப்பதெல்லாம்
அழகழகாய் ஆர்ப்பரித்து
குறிப்புக்கள்

மேலும்

பெரு மதிப்புடன் மிக்க நன்றிகள். நாளாந்த வாழ்க்கையின் பதிவுகளை கவிதைகளாக வடிக்கும் ஆர்வம் தான் எனக்கு.உங்கள் கருத்தூட்டல் மகிழ்வளிக்கின்றது.✨✨ 06-Feb-2022 10:57 am
வணக்கம் நிரோஷனி றமணன் அவர்களே அருமையான கவி வரிகள். வாழ்க்கையில் எல்லாமே அளவுடன் இருந்தால் அமைதியுடன் கூடிய அழகு நிலைத்து நிற்கும்....!! வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!! 06-Feb-2022 5:27 am
நிரோஷனி றமணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jan-2022 1:39 am

விழியாகி பின் விதையாகி
மொழியாகி அதுகதையாகி
வழியான விதமாக
வாழ்வாகி வதிவாகி
வளமாகி வாழ்ந்து நிற்கும்🌺

மேலும்

நிரோஷனி றமணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2021 9:14 pm

மண்ணுக்கு மரம் நட்பு
மரத்திற்கு நிழல் நட்பு
நிழலிற்கு நாம் நட்பு
நிதர்சனமாய் வேர் அதுவே
அகமாக நேர் நட்பு

தேனோடு மலர் நட்பு
மலரோடு மலர் நட்பு
மாலையாகி மணம் பரப்ப
மகரந்தம் நிகர் நின்று
அகமாகி ஆட்கொள்ளும்

அலையோடு நுரை நட்பு
நுரையோடு கரை நடப்பு
கரையோடு கடல் நட்பு
கடலோடு உவர் நட்பு
உவரோடு மணல் நட்பு
மணலோடு புனல் சேரும்
மகத்தான நிலம் தானே
அகத்தாலே மிக நட்பு

உயிருக்கு மெய் நட்பு
மெய்யிற்கு ஒலி நட்பு
உயிரிற்கும் மெய்யிற்கும்
உணர்வாக சொல் நட்பு
சொல்லோடு சொல்லாக
மொழியாகி தான் நிற்க
தமிழான அகம் தானே
முழுதாக முக நட்பு .

மேலும்

நிரோஷனி றமணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2021 3:53 am

சிவனும் யேசுவும்
புத்தரும் அல்லாவும்
அத்தனையும் ஒன்று தான்
அன்று நாம் கற்றது
அன்பு தான் மார்க்கம்
அன்பு தான் எல்லாம்
அப்படியே அறிந்ததும்
ஆத்மீகம் ஆறுதல்
வணங்குதல் மேன்மை
தியானம் சாந்தம்
தொழுதல் சுபீட்சம்
தொகுப்பாய் கொடுத்தது
எவ்வளவு நம்பிக்கை
இறைவன் மீது
அத்தனையும் அவனே என
வணங்கி வணங்கி
வணங்கியபடி
வையகம் சேர்ந்த கொடுமை
எதனை சார்ந்தது
மனிதர்கள் தானே பிரிவினர்
இறைவனை ஏன் பிரித்து
இப்படி.....
இரத்த வரலாறு எழுதுகிறார்கள்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே