எல்லாம் பேரழகுப்பெண்ணே🌏
மின்னிக்கண் சிமிட்டி
கண்ணில் பொன் கொட்டி
விண்ணில் மின் வெட்டும்
வெள்ளிகளின் வீதிக்குள்
வெண்மதி விளக்கு
அவளும் பெண்ணே!
வெள்ளித்தகடுடுத்தி
தள்ளித்தள்ளி
மெல்லத்தான்
ஓடும் மெல்லின
நதி அவளும்
பெண்ணே!
துளிர் எடுத்து
தளிர் விடுத்து
வெளி எடுக்கும்
பளிர் தொடுக்கும்
பூக்களின் இனமதுவும்
பெண்ணே!
எத்திக்கும் சுவைகொட்டி
தித்திக்கும் தேன்கொட்டி
தாய் வழியே
தான் வந்த
தமிழ் மொழியும்
பெண்ணே!
தான் பிறந்து
தான் வளர்ந்து
தான் போற்ற
தாகம் தீர்க்கும்
தாய் நாடதுவும்
பெண்ணே!
விண் நம்பி
விதை விதைத்து
வியர்வை தைத்து
விளை எடுக்கும்
விளை நிலமதுவும்
பெண்ணே!
கவிதையும் பெண்ணே!
காடும் பெண்ணே !!
கடலும் பெண்ணே !!!
கழனியும் பெண்ணே!!!!🙎♀️
நிரோஷா
✍️