விடுமுறை 🌴🌷🌜

மேகம் வந்து வந்து
மோகனமாய் தொட்டுச்செல்லும்
அகன்று உயர்ந்த
அழகான மலை

அடர்த்தியாக செழித்த
செடிகளின் செருக்கு
கண்ணுக்கு குளிர்ச்சி
தொடர்ச்சியாக ஒலிக்கும்
பட்சிகளின் சப்தம்
காதுக்கு மகிழ்ச்சி

இலைகளின் நுனிகளில்
பூத்து நின்ற
நீர்த்துளிகள் சில
வடிந்து விழும்
வதனக்காட்சி
வசந்தம் தரவில்லை

தென்றல் வந்து வந்து
தேகம் வருடிச்சென்றது
தேன் தேடி வண்டுகள்
அங்கும் இங்கும்
பண் பாடித்திரிந்தன

கொண்டு வந்த
தேநீர்க்கோப்பை
கண்டு நிற்கும்
காட்சிகளில் ஒன்றானது
ஆவி பறந்தும் சூடு
அளவாய் இருந்தது
ஒரு மிடர் அருந்திவிட்டு
ஆழமாய் பார்ப்பதெல்லாம்
அழகழகாய் ஆர்ப்பரித்து
குறிப்புக்கள் தந்தது

கண்களிற்கு கவிதை
சுவைக்கு தேநீர்
சூட்டுக்கு கம்பளி
மெட்டுக்கு பறவைகள்
மேனிக்கு சூரியன்
மனதுக்கு மகிழ்ச்சி

வாய் மொழிகள்
பேசவில்லை
மெய் விழிகள்
கவிதை பேசின
பல மணிகளில் மடல்
எழுதி முடித்தது மனது

சொல் ஒன்று
மெல்வதற்கு
மெல்லக்குனிந்தபோது
தரை எல்லாம்
வெள்ளிகளாய்...........
படுத்திருந்த பனித்துகள்கள்
விடுமுறைக்கு வந்திருந்தன
ஆதவனைக்கண்டு..
அகம் உருகி
அஸ்தமனமாகிச்சென்றன

பனித்துகள்களின்
விடுமுறை
என்
பணத்துளிகளின்
விடுமுறையை
நினைவாக்கியது
எல்லாமே அளவு தான்
அர்த்தமுள்ள வாழ்க்கையில்.......⚡

எழுதியவர் : நிரோஷனி றமணன் (6-Feb-22, 12:07 am)
சேர்த்தது : நிரோஷா றமணன்
பார்வை : 100

மேலே