சற்றுப்புறத் தூய்மை

சுற்றுப்புறத் தூய்மை !
*********

மண்ணும் மணிநீரும் மயங்கிடா வானும் /
உண்ணும் உணவும்
உயிர்வளியும் நமதே!

இன்றோடு முடியாது இயங்கிடும் பேருலகு /
என்றென்றும் நிலையானால் எதிர்காலம் பயனாமே !

நீரினிலும் நிலத்தினிலும் நீக்கிடுக மாசினையே/
வேரினிலும் பாரிலும் வேரறுப்போம் கழிவினையே/

மாசில்லாச் சூழலிலே மானுடமும் வாழ்ந்துவிடின் /
காசினியில் இயற்கைக் காலமெலாம் நீண்டிடுமே/

கரிவாயும் பிறவாயும் கழிநீரும் வேண்டாம் /
சரியானப் பொறிகளால் சகத்தினைக் காப்பொமே !

-யாதுமறியான் .

எழுதியவர் : யாதுமறியான் (5-Feb-22, 1:52 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 53

மேலே