இயற்கையும்🌱நானும்🧍‍♀️

ஈரமண்ணின் வாசமோ
என் உயிரில் கலந்த சுவாசம்
மழையில் நனைந்த மண்ணின் இரமோ
என் கவலைகளின் கண்ணீர் துளிகளின் ஈரம்
இயற்கை சுழல் காற்றுகளோ
என் வாழ்க்கையில் சுழலும் சக்கரம்
இருள் சூழ்ந்த மேகங்களோ
என் இருண்ட வாழ்க்கையின் நேரம்
இனிமையான இயற்கையின் இசைகளோ
என் வாழ்க்கையின் சோகத்தை கலைத்திடும் கீதம்
எழில் அழகு கொஞ்சும் இந்த இயற்கை அழகோ
என் மொத்த அறிவின் அழகு


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (6-Feb-22, 8:20 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 220

மேலே