இயற்கைப் போற்றுதும்

நீல வானும் ஆழக் கடலும் /
சோலை மலையும் ஆறும் வயலும் /

வாழ்வின் வளங்கள் வழங்கிடும் தாய்நிலம் /
தாழ்விலாக் காதலும் வீரமும் போற்றும் /

மானுடன் செயற்கை மகிழ்ச்சியை நாடி. /
புனிதப் பூமியின் காப்பினை அழித்தான்/

மழைவளம் குன்றிட
மண்திறம் மறைந்திட /
வளிவெப்ப முயர்ந்திடத்
துருவங்கள் உருகிட /

நிலையின் திரிந்திடும் பிழையா உலகம் /
விலையிலா இயற்கையைக் காப்போம் வாழ்வோம் !

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (7-Feb-22, 7:09 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 247

மேலே