படைப்பின் பயணம்

என் வழியெங்கும் சிந்தனை விதைகள்
பூக்களாய் சிதறிக் கிடக்கின்றன
நான் சிந்திப்பவைகளை
எழுதிக் கொள்ள முடி வதில்லை

எழுதியவைகளை
படிடிெயடுக்க முடிவதில்லை

படியெடுத்தவைகளை
தட்டச்சு செய்ய முடிவதில்லை

தட்டச்சு செய்தவைகளில்
வேகப்பிழைகள்
களைய முடிவதில்லை.

கால வெள்ளத்தோடு
நாமும் ஓடியே தீர வேண்டிய சூழ்நிலை...

நேர நெருக்கடிக்கிடைபில்
இவை
அனைத்தையும் தாண்டி ,
நீண்ட பயணத்திற்கு பின்னரே....
தளத்தை வந்தடைகிறது.,
படைப்புகள்


அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (15-Apr-22, 11:15 am)
Tanglish : Padaippin payanam
பார்வை : 93

மேலே