வரவேற்போம் இனிய தமிழ் புத்தாண்டை

அன்புடன் தீந்தமிழை வரவேற்கும் நம்மை கண்டு!
வந்தது தமிழ் புத்தாண்டு, புதுப்பொலிவு கொண்டு!

தமிழ் தரும் தேனினும் இனிய ரசத்தை மொண்டு!
நம்மை குளிப்பாட்டுகிறது இன்று தமிழ் புத்தாண்டு!

நல்லவைகளை தினம் பலரிடம் கேட்டு, விண்டு!
புரிவோம் , ஏழை எளியோர்க்கு சிறு தொண்டு!

இனிப்பு கசப்பு கலந்து புளிப்பு பச்சடியை உண்டு!
பொது நலனை கெடுக்கும் செயல்களிலிருந்து மீண்டு!

வாழ்க உங்கள் நலமும் வளமும் அமைதியும், நீண்டு!

உங்கள் அனைவருக்கும் எமது அன்பான, கனிவான, இதமான, பதமான, சுகமான, நிறைவான, பணிவான
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐💐💐💐

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (14-Apr-22, 11:31 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 88

மேலே