மகனதிகாரம்- 5

இரவினில்
தொட்டிலில் தூங்கியே பழகிய உன்னை
கட்டிலில் பழக்கப்படுத்த
தொட்டிலை மறைத்து வைத்து
காக்கை எடுத்துச் சென்றதாக
கதை கட்டினோம்.,

கதையை நம்பி
கட்டிலில் உறங்கிப் போனவன்..

காலையில்
எழுந்ததும்
தன்னிடம் இருந்த
காக்கை பொம்மையை
அடித்துக் கொண்டிருக்கிறான் ...

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (9-May-22, 8:46 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 60

மேலே