அந்த இடம்
அதோ அந்த இடத்தில் தான்
பல ஆண்டுகளாக
உன்னை நான் சந்திக்கிறேன்
நான் உன்னை
பார்க்க நினைக்கும்போதெல்லாம்
கோவிலென மனதிற்குள்
தோன்றி மறையும் அந்த இடம்...
பார்க்க வரும் சமயங்களில் எல்லாம்
கற்பக தருவென வற்றாமல்
தரிசனங்களை வாரி வாரி
வழங்கியது அந்தஇடம்..
அந்த சாலையில்
எத்தனையோ வேகத்தடைகள்
இருந்த போதும்
என் கவனத்தை ஈர்த்த வேகத்தடை
அதுதான்
அதனைக் கடக்கும் பொழுதுதான்
என் அத்தனை வேகமும்
அனிச்சையாய்
குறைந்து விடுகிறது ...
உனக்கும் எனக்குமான நினைவுகள்
என்னுள் துளியாய் தொடங்கி
கடலாய் மாறி விட்டது..
இன்று உன்னைக் காணாத
அந்த இடம்
என்னையே வெறித்துப் பார்க்கிறது
கவலையில் கரைகிறது
கொஞ்சம் நெருங்கியதும்
அழவே தொடங்கி விட்டது
அதனிடம் ஆறுதல் சொல்ல போன
என் கண்களிலும் நீர் துளிகள்
எப்படியோ ஒருவழியாய்
சமாதானம் செய்து விட்டு
மெல்ல நான் நகர்ந்த போது.,
என்னேயே பாவமாய்
பார்த்துக் கொண்டிருந்தது நீயின்றி தனிமையில் தவித்த அந்த இடம்