அறிவுக்கு ஒரு கவிதை

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

*அறிவுக்கு ஒரு கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

குமரேசன்

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

*அறிவு......*

சரி
தப்புக்களை
எடைபோடும் தராசு.... !

வாழ்க்கை கணக்கை
தவறில்லாமல் போடும் கால்குலேட்டர்..... !

விதியை கூட
வென்றுவிடும்
மாபெரும் வீரன்..... !

கல்வி விதையில்
உயிர் பெற்று
புத்தகங்களின் வாசிப்பில்
வளர்ச்சி பெறுவது.... !

இதை....
படித்து சேர்த்தவர்களை விட
பட்டு சேர்த்தவர்களே
அதிகம்....

மனிதனிடம்
உள்ளவற்றில்
வரம்பற்ற
வளர்ச்சி உடையது
இது மட்டுமே.....

புத்திசாலிகளின்
முகவரி ....!

நன்மை
தீமைகளை பிரித்தெடுக்கும் சல்லடை ......

தேட வேண்டிய
செல்வங்களுள்
இதுவும் ஒன்று என்று
தெரிந்த பிறகும்
பலர் தேடுவதில்லை....

பலர்
இதை
ஏனோ?....
தன்னிடம் இருந்தாரும்
பயன்படுத்துவதே! இல்லை...

அறிவு என்பது
நெருப்பு மாதிரி...
பலர்
தீபத்தை ஏற்றுவார்கள்...
சிலர்
வீட்டையும்
கொழுத்துவார்கள்...

*கவிதை ரசிகன்*


🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

எழுதியவர் : கவிதை ரசிகன் (2-May-22, 11:10 pm)
பார்வை : 48

மேலே