விடியலும் ஓய்வூதியமும்

முடியாத வாக்குறுதிகளை
ஏன் முன் வைக்க வேண்டும்?
உச்சிக்கும் பாதத்திற்கும்
ஏன் முடிச்சிட வேண்டும்?
அரசூழியர்கள் நம்பிக்கையை
ஏன் குழி தோண்டி புதைக்க வேண்டும்?

விடியல் ஆட்சி
எங்கள் கிழக்கில் இன்னும்
உதயமாகவே இல்லை
உதயசூரியன் ஒரு வேளை
ஓய்வெடுக்க சித்தமாகி விட்டதோ...

அரசாங்கத்தின் ஆணிவேர்கள்
அரசு ஊழியர்கள்
வேர்களை அசைத்துப் பார்ப்பது
தான் மனுதர்மமா?

தாயைப் போல்
அரவணைக்க வேண்டியவர்களுக்கு
எதற்கு
மாற்றான் தாய் மனோபாவம்?

மூத்த பிள்ளைகளுக்கு சகலத்தையும்
வாரி வழங்கி விட்டு
இளைய பிள்ளைகளை வீதியில் விடுவதா?

ஓய்வூதியம் என்பது ஊழியர்களின் உரிமை அதை
கொச்சையாக நினைப்பது மடமை

விடியலுக்காக தூங்காமல்
விழித்திருக்கும் நண்பர்களுக்காக...

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (9-May-22, 9:00 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 90

மேலே