சுமை தூக்கும் மாணவர்கள்
📚📚📚📚📚📚📚📚📚📚📚
*கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
📚📚📚📚📚📚📚📚📚📚📚
குருவி தலையில்
பனம்பழம் வைத்த
கதைதான்
எமது நாட்டில்
மாணாக்கர்கள்
முதுகில் வைத்த
பாடத்திட்டங்கள்.....
ஆசிரியர்கள்
இறுதி பாடம்
நடத்தி
முடிப்பதற்குள்ளேயே!
இறுதித்தேர்வு
வந்துவிடுகிறது
இதில் மாணவர்கள்
படிப்பது எப்படி ...?
அறிவாளியாக்க
கொண்டுவந்த
பாடத்திட்டங்கள் எல்லாம்
மாணவர்களை
முட்டாளாக்கிக்
கொண்டுள்ளது .....!!
இன்றையப்
பாடத்திட்டங்கள்
மாணவர்களுக்கு
கற்றுக் கொடுத்தது
என்னவோ
மூட்டை தூக்கும்
தொழிலைத்தான்....
பாடத்திட்ட மயிலிறகை
மாணவவண்டியில்
அதிகரித்ததால்
நம்பிக்கை அச்சாணி
உடைந்து தான் போகிறது...
இன்றைய கல்வியை
சுவைத்து
சாப்பிட முடியாமல்
பலர்
அப்படி விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்....
இன்றைய
பாடத்திட்டத்தால்
நிமிர்ந்த மாணவர்களைவிட
கூன் விழுந்தவர்களே
அதிகம அதிகம்....
மருத்துவராக
பொறியாளராக
பட்டதாரியாக வருவதற்கு
கொண்டுவந்த
பாடத்திட்டங்கள்
மாணவர்களை
மனநோயாளியாக்கி
விடுமோ என்ற
பயத்தை தான்
ஏற்படுத்தியுள்ளது ....
அவர்கள்
எவ்வளவுதான்
படித்தாலும்
பட்டுத்தான்
தெரிந்துக் கொள்ள
போகிறார்கள்
வாழ்வதற்கான
அறிவை.......
அதுவரைக்குமாவது
அவர்கள்
கவலைப்பட்டு வாழாமல்
இருந்துவிட்டு போகட்டுமே!...!
*கவிதை ரசிகன் குமரேசன்*
📚📚📚📚📚📚📚📚📚📚📚