வயோதிகம் - சொல்ல துடித்த கதை

வயோதிகம் -
சொல்ல துடித்த கதை

சொல்ல துடித்தகதை; செல்லாத வாழ்க்கை;
சோகம் வடிக்கும் சொ(செ)ல்லாத உறவுகள்;
நரைத்த முடி; நகைக்கும் வயது;
நடுங்கும் சரீரம்; நடக்க முடியாத தள்ளாமை;
நாள் குறிக்கும் நாட்கள்; எங்கும் மயான அமைதி;
சத்தங்கள் காதில் ஒலிக்கவில்லை;
சங்கீதம் சுவைக்க வில்லை;
சரீரம் சீதலம் பிக்காமல் விடவில்லை;
சாத்தி கிடத்திய உடம்பு தான்,
சமாதானம் சொல்லுவது மனது தான்;
தடுமாற்றத்தில் தள்ளி விழுந்த பாத்திரம்;
தட தட வென்றே உருண்டு சிரிப்பதைப் பார்;
பாடு பட்டு எடுத்த பாத்திரம்
பட படத்தே கூறியது; அன்று உனது ராஜியம்;
இன்று எனது ராஜியம் என்றது;
முடிந்தால் குனிந்து எடு என்று கூக்குரல் விட்டது;
தனிமையின் தடுமாற்றம் தான்;
வயதும் வழக்காடுகின்றது;
வந்த வாழ்க்கையும் ஊசலாடுகின்றது;
வயோதிகத்தின் வலிதான்,
விரக்தியில் வாழ்வுதான்;
போராட்டம், போராட்டம்
போக்கிடம் இல்லாத போராட்டம்;
போகத் துடிக்கும் சரீரத்தின் போராட்டம் தான்;
வந்து பார்க்க நாதியில்லை;
வழக்கம்போல கைபேசி தொடர்பு தான்;
கரையும் கைபேசியை கையில் எடுக்கவே கைகள் மறுக்கின்றன;
பித்தானை அமுக்க பிடிவாதம் பிடிக்கின்றது;
பொறுத்தே அமுக்கினாலும்
செவிட்டுக் காதுக்கு செவிசாய்க்க மனம் இல்லை;
செல்லாத காசுதான்;
செல்லரித்துக் கொண்டே இருப்பது சரீரம் தான்;
பொறுமை இழந்த கைபேசி,
மெதுவாய் ஓசையை நிறுத்துகின்றது;
மீண்டும் மீண்டும் ஒலிக்கின்றது;
சலித்து போன இதயம் தான்;
சற்றே தாமதிப்பது கைகள் தான்;
ஒருபக்க பாசை தான்; ஊ ஊ என்ற ஓசை தான்;
சரி வைத்துடு என்ற இரட்டை சொற்கள் தான் சொந்தம்;
இதயத்தின் தவிப்பு, எடுக்குது மன கசப்பு;
வாழ்க்கையே பாரம் தான்;
வலு இழந்த காலம் தான்;
சுற்றி இருந்த சுவர்கள் நலம் விசாரிக்கின்றது;
சாய்ந்த நாற்காலி, ஆட்டிவிடுகின்றது;
சுற்றும் விசிறி சுகம் குசேலம் விசாரிக்கிறது;
இருமலின் தாளம்;
தனிமையை விரட்டும் கொட்டாவி;
நேரத்திற்கு வராத ஆகாராம்
தண்ணீரே ஆகாராம்; குடிக்க நேரம் இல்லை;
கண்ணீரும் வத்திப்போய்
விழுவோமா வேண்டாமா என்றே
யோசித்து யோசித்து வடிக்க துடிக்கின்றது;
எல்லாம் முதுமை சுமக்கும் சுமைதான்;
மூப்பு பிணி சாக்கடு என்று மூன்றும்
வந்து பிடித்துக் கொள்ள போட்டி தான்
சரீரமே ஒரு சடு குடு விளையாடும் மைதானம் தான்;
ஜென்னல் வழியாக வந்த காற்று
தேடியே வந்தது தாத்தாவை
வாட்டத்தைப் போக்க,
அவ்வப்போது வந்து போனது;
காரணம் தாத்தா தன் வாலிப காலத்தில்,
நட்டு தண்ணீர் ஊற்றிய மரம் அது;
மறக்காமல் நன்றி விசுவாசத்துடன் தன் கடமையை செய்கின்றது; கூவும் குயில்களையும்
காக்கா, குருவிகளை தங்க வைத்து
ஒலியை எழுப்பச் செய்து;
தாத்தாவின் தனிமையை விரட்ட துடிக்கிது;
கொத்திய பழத்தை தாத்தாவின் மடியில் போட வைக்கின்றது;
தின்ன ஆசைதான்;
தின்னால் வரும் செரிமான தொல்லை தான்;
அன்றாட வாடிக்கைக்காரன்; அண்டங் காக்கா தான்
அந்த வீட்டின் ஜென்னல் கதவில் வந்து அமர்ந்து
தாத்தாவை குசேலம் விசாரிக்கின்றது;
தாத்தாவும் தான் தனிமை படலத்தை சொல்லியே
அரிசியை தூவ,
காக்காவும் தன் நன்றியை தெரிவிக்கும் வகையில்
கா கா என்றே கரைந்தது;
நான் இருக்க உனக்கு ஏன் தனித்திருக்கின்றேன் என்ற சிந்தனை
என்று சொல்லாமல் சொல்வது போன்று இருந்தது;
தாத்தா காக்காவின் உறவு தினமும் நீடிக்கும் தொடர்கதைதான்;
காக்கா பேசுவது தாத்தாவுக்கு புரிய வில்லை;
தாத்தா நன்றி கூறுவது காக்காவுக்கு புரிய வில்லை;
பரிபாசைதான், பாசத்தின் தவிப்புத்தான்;
அரிசியை தின்ன காக்காவும்,
தாத்தா கவலைப் படாதே;
உன் பிண்ட சோற்றை தின்ன உடனே ஓடிவருவேன்;
பிடிவாதம் பிடிக்காது உறங்கு
நாளையும் நலம் விசாரிக்க வருவேன் என்று கூறி பறந்தது;
விடிவின் துவக்கம், விழுந்தது சரீரம்;
விழுந்து அழுதது தாத்தாவின் நண்பன் காக்கைதான்;
காக்கா காக்கா என்று கரைவதைப் பார்த்து;
நாய்கள் தொடர்ந்து குரைக்க;
அடுத்த வீட்டில் இருந்து வந்து எட்டிப்பார்த்தனர்;
தாத்தாவின் லொக்கு லொக்கு இருமல் நீண்ட நேரமாக இல்லையே என்று;
சுவரும் காற்றாடியும் கண்ணீர் வடிக்க
சுற்றங்கள் வர தாமதம் தான்;
சுற்றி சரீரத்தை எடுக்க தாத்தாவின் குழந்தைகள் வரவும் தாமதம் தான்
சொந்த பந்தங்கள் கூடியதைவிட;
சுற்றி இருந்தவர்களும் நண்பர்களும் எடுத்த முடிவு
நல்ல முடிவுதான்;
நாற்றம் எடுக்கும் முன் சடலத்தை எடுக்க முடிவு செய்தனர்;
சடலத்தை வெளியில் எடுக்கும் போது
சரமாறி கதறியே பூக்கலைக் கொட்டியது
தாத்தா வளர்த்த மரம் தான்;
விசுவாச பறவைகள் காக்காக கீக்கீ; கூகூ; என்றே கதற;
உதவியாக இருந்த நாய் ஊளையிட;
தாத்தாவின் சொந்தமான அண்டங்காக்காவும்
பாடையின் மேல் அர்ந்து தாத்தாவுடன் பவனி போனதுவாம்;
தனிமைக்கு வந்தது ஒரு முடிவு;
தள்ளாமைக்கு வந்தது ஒரு முடிவு;
தனித்து விடப்பட்ட உறவுக்கு வந்தது ஒரு முடிவு;
தருமம் தலைகாக்கும் என்பது
தாத்தா செய்த உதவியால்
திருவிழாபோன்று நடந்தது; தாத்தாவின் இறுதி ஊர்வலம்,
தாத்தாவின் குழந்தைகள் இல்லாமல்.
தாத்தாக்களின் தனிமை, இளைய தலைமுறைகள் செய்யும் கொடுமை;
தவம் இருந்து பெற்ற பிள்ளைகளால் தனித்து விடப்பட்ட கொடுமை;
முதுமையும் மூப்பும் மோப்பம் பிடித்து வருவது வாழ்வியலில் நியதிதான்;
வயோதிகத்தை பழிக்காதே;
வாழ்க்கை பயணத்தின் முடிவுதான் வயோதிகம்;
துவக்கத்தில் உனக்கு உன் தாய் தந்தையர் செய்த உதவியை நினைத்தால்,
வயோதிகமும் உனக்கு வரன் தான்;
முதியோரை முறையின்றி முதியோர் இல்லத்திற்கு அனுப்பாதே;
முதியோரை தனிமை படுத்தாதே;
முடிந்த வரை உதவி செய்;
முடியும் காலத்தில் உடன் இருக்க முயற்சி செய்

அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (10-May-22, 6:17 pm)
பார்வை : 126

மேலே