ஏன் , எதற்கு ,யாருக்காக , வாழ்க்கை 555
***ஏன் , எதற்கு ,யாருக்காக , வாழ்க்கை 555 ***
அயல்நாடு...
மனதின் வலியோடு
இரவே நேர பயணம்...
கம்பி இல்லாத
ஜன்னலோர இருக்கை...
பனித்துளியோ, மழைதுளியோ
கண்ணாடியில் சில நீர் துளிகள்...
கீழ் உதட்டில்
ஒருவிரல் மெல்ல வருட...
மேகத்தை
கிழித்தது வானூர்தி...
கண்களில் தெரிந்த மலைகளும்,
மரங்களும் மறைந்தன...
நினைத்தாலும் திரும்ப
முடியாத தூர உயரத்தில் நான்...
விழிகளை ஈரமாக்கிய
சில நீர்த்துளிகள்...
என் பயணமும் தூரம்
நான் மிதப்பதும் உயரம்...
வாகன ஒலிபெருக்கியோ
சாலையோர மக்கள் கூட்டமோ...
காணமுடியாத
ஒரு பயணம் ஆகாயத்தில்...
சில மணி நேரம்
சில ஆயிரம் கிலோமீட்டர்...
மனதில் எத்தனையோ
மனஓட்டங்கள்...
அத்தனையும்
விழிகளில் கண்ணீராக...
எல்லாம் இழந்த
அனாதையாய் இந்த பயணம்...
கைபேசியில்
பதிவாகிய பாடல்கள் எல்லாம்...
அத்தனையும் நினைவூட்ட மனதுக்குள்
சொல்ல முடியாத துயரம்...
மெல்லிசை பாடல்கள்
மனதை தாலாட்ட...
சோக பாடல்கள்
மனதை உருக்க...
ஏன், எதற்கு,
யாருக்காக, இந்த பயணம்...
கேள்விகள் மனதில்
பல எழுந்தாலும்...
எல்லாம் நம்
குடும்பத்திற்குத்தானே...
நினைத்தால் சின்ன
சந்தோசம் மனதில்...
வாழ வேண்டிய வயது
மனது சொன்னாலும்...
சம்பாதிக்க வேண்டிய
வயது குடும்பம் சொல்கிறது...
இதோ வானூர்தி ஒலிபெருக்கியில்
ஆங்கில வார்த்தை...
அயல் நாட்டில்
இறங்க போகிறோம் என்று...
தாய்நாட்டில்
இறங்க போகிறோம் என்று...
வானூர்தி ஒலிபெருக்கி
ஆங்கிலத்தில் எப்போது சொல்லும்...
தெரியாமலே இந்த
பயணமும் தொடர்கிறது...
வலிகள்
சுமந்த நெஞ்சோடு.....
***முதல்பூ .பெ.மணி.....***