ஜவ்ஹர் - சுயவிவரம்

(Profile)தமிழ் பித்தன்
இயற்பெயர்:  ஜவ்ஹர்
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  01-May-1963
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Jan-2014
பார்த்தவர்கள்:  946
புள்ளி:  1005

என்னைப் பற்றி...

கவி படிக்கவும் படைக்கவும் ஆர்வமாயுள்ளேன்.
தொடர்பு-0773711142
மின்னஞ்சல் -mhjawhar @gmail.com

என் படைப்புகள்
ஜவ்ஹர் செய்திகள்
ஜவ்ஹர் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Aug-2016 7:39 am

நீ நீயாக இரு!
***********************

பாராட்டுக்கள் உன்னை
சீராட்டி
தாலாட்டுப்பாடி
தூங்கவைத்துவிடக்கூடாது!!

உன்னுயர்ச்சியும்
வளர்ச்சியும்
மற்றவர்களை இகழ்ச்சியாக
பார்க்கும் அளவுக்கு
அமைந்துவிடக்கூடாது!!

கல்வி உன்னை
நல்ல பண்பாடுடையவனாக
மாற்றவேண்டுமே தவிர
உலகை வென்றவன் என்ற
இறுமாப்பை கொண்டவனாக
அடையாளப்படுத்திவிடக்கூடாது!!

நான் என்ற அகங்காரம்கொள்
தவறில்லை
மற்றவரை மதிப்பதில்
நான் முதன்மையானவன் என்ற
நானாக இருக்கும்வரை!!

ஜவ்ஹர்

மேலும்

இன்று உலக கவிதைதினம் எழுத்துதள தோழமை கவிஞரே.. உங்களுடைய கவிதைக்கு என் வாழ்த்துக்கள்! நட்புடன் குமரி 21-Mar-2017 5:21 pm
வாழ்க்கையின் பணிவு என்பதே மனிதனின் நிலையை முழுமையடையச் செய்கிறது 07-Aug-2016 7:58 am
ஜவ்ஹர் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Aug-2016 7:37 am

மறந்தே தூங்குகிறான்!!
*****************************

துயிலெழுந்த கதிரவனும்
தன் கடமைக்காய்
கீழ் வானில்
தன் கடை திறந்தே
மஞ்சள் ஔி தௌித்துவிட்டான்!!

மரக் கிளை தனிலெ
மறந்தே துயின்ற பட்சிகளும்
ஒலி எழுப்பி
ஆராவாரம் செய்தே
இரைக்காய் சிறகடிக்கின்றன!!

பாவம் இவன் மட்டும்
இறை பணியவும் மறந்தே
போர்வைக்குள் சுகம் காண
தன் சுமை மறந்தே
அயர்ந்தே தூங்குகிறான்!!

மேலும்

எத்தனை பேர் உலகில் இதே நிலையில் காலத்தை நகர்த்தி கொண்டிருக்கிறார்கள் 07-Aug-2016 7:56 am
ஜவ்ஹர் - ஜவ்ஹர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Aug-2016 7:30 am

என் மனம் என்காதலுக்கெதிரி!!
************************************
அவளுடன்
மனம் திறந்து
பேச நினைத்தேன்!
ஒரு கனம்,
அவர் குணம் அறியாமலா
பேசுவது என என்
மனம் தடை போட
என் காதலும்
இடை நடுவே ப்ரேக்டவுன்
ஆகிப்போன
வண்டியாய்
தடைபட்டுப் போனது!!
காதலியோ
வாகனம் மாறிச்
சென்று விட்டாள்!!
மற்றவரின் அன்புக்குரியவளாய்!!

ஜவ்ஹர்

மேலும்

உண்மைதான் சர்பான்! 03-Aug-2016 5:32 am
கருத்திட்டமைக்கு நன்றி தோழரே! 03-Aug-2016 5:31 am
உள்ளத்தில் உள்ளதை வெளிபடடுத்தி விடுவது நல்லது ... வாழ்த்துக்கள் .... 02-Aug-2016 6:51 am
காதலின் முதல் எதிர் தாமதம் தான் 02-Aug-2016 6:47 am

ஜவ்ஹர் - ஜவ்ஹர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jul-2016 7:36 pm

உலகில் பல மதங்கள்
மதத்துக்குள் பல பிரிவுகள்
சாதி வேறுபாடு குல வேறுபாடு
அந்தஸ்த்து வேறுபாடு என மனிதன் தமக்குள்
பல பிரிவுகளை ஏற்படுத்தி நிம்மதியற்று
எது சரி? எது பிழை? என்று தெரியமல் ஒரு குழப்ப நிலையில் வாழ்கிகிறான்..

இதை வைத்துப் பார்க்கும் போது மனிதன் இன்னும் முழுமையான அறிவைப்பெறாமல் அறியாமையிலேயே வாழ்கிறான் என்று ஏன் சொல்ல முடியாது?.

மேலும்

இல்லை. உங்கள் கருத்தோடு நான் சிறிது மாறுபடுகிறேன். அறிவு முழுமை அடைவதில்லை என்பது அறியாமையை குறிக்காது. ஏனெனில் காலத்திற்கேற்ப அறிவின் நீட்சி மாறிக்கொண்டே இருக்கிறது. மாட்டு வண்டியில் சென்றபோது தானியங்கி வாகனம் பற்றித் தெரியாதது அறியாமை ஆகுமா? அஞ்சல் அட்டை அனுப்பிக்கொண்டிருந்த பொது மின்னஞ்சல் பற்றி தெரியாதது அறியாமை ஆகுமா? ......இப்படி எத்தனையோ ......எனில் காலம் தான் அறிவின் வீச்சை தீர்மானிக்கிறது. ஆனால் ஒன்று, நிகழ்காலத்தில் இருக்கின்ற உலகத்தோடு பயணிக்காத போது அது அறியாமை என்றே கொள்ளப்படும். 10-Aug-2016 1:54 pm
இழத்தல் என்பது இருப்பதை தொலைத்தல் என்றுதானே பொருள்.இங்கு இழப்பு என்பது அல்ல பொருள்.இழந்தால்,மீண்டும் வேறு வகையில் அதை,அடைய முடியும். ஆனால், அதை மறைத்து விட்டு வாழ்ந்தால், அதை எப்படி வெளிக் கொணரமுடியும்? மனிதத்தை ஒதுக்கி விட்டு இன்றைய நாகரீக மோகத்தால் தன்னை ,அலங்கரித்துக் கொண்டு வண்ணம் என்ற அழகை விரும்பும் நரியைப்போல் வாழ விரும்புகிறான். சாயம் வெளுக்கும்போது தான் , நானும் மனிதன் என்ற உணர்வு அவனுக்கு வருகிறது. இது பற்றி நான் படித்த கவி ஒன்று ஞாபகம் வருகிறது. மரணம் நெருங்கும் நேரத்தில் தான் மனம் யோசிக்கிறது கொஞ்சம் மனிதனாக வாழ்ந்திருக்கக் கூடாதா ? என்று----------- இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் மனிதனாக அவனால் வாழ முடியும் ஆனால், மனிதனாக வாழ்ந்தால் இன்று பல கொள்கைகளை பின்பற்ற வேண்டி உள்ளது. அதனால், அவன் மாமனிதன் என்ற வேடம் பூண்டு அடுத்தவர்களை அதிகாரம் செய்யவும் , ஆணையிடவும் கற்றுக் கொண்டான். அறியாமையில் அல்ல, அறிவை விரும்பாமல் அநீதி உலகில் ஆனந்தமாக வாழ்கிறான். 06-Aug-2016 6:57 pm
இஸ்லாம் கிரித்தவம் தோன்றியதற்கான உங்கள் விளக்கம் நீங்கள் இச்சமயங்கள் விடயத்தில் குழம்பிப் போ ய் இருக்கிறீர்கள் என்று மட்டு்ம் புரிகிறது. 06-Aug-2016 6:07 am
அதைத்தான் நானும் சொல்கிறேன் மனிதன் இன்னும் அறியாத விடயங்கள் அதிகமாக இருக்கிறது என்பதால் உண்மையான அல்லது சரியான அறிவை பெற்றுக்ெகாள்ளவில்லை. 06-Aug-2016 6:04 am
ஜவ்ஹர் - கேள்வி (public) கேட்டுள்ளார்

29-Jul-2016 6:18 am

ஒரு நாத்திகனால்
பஞ்சமா பாதகங்களை
தவிர்ந்து கொள்ள முடியும் என்றால்
இறைவனை நம்பும்
ஆஸ்திகனால் ஏன் தவிர்ந்துகொள்ளமுடியவில்லை!!

அப்படியாயின் இவன் இறை பக்தி போழியானதா?

குற்றங்களுக்கு இறைவனின் தண்டனை உண்டு என்பது இவனுக்கு நன்கு தெரிந்திரு ந்தும் இவ்வாறு குற்றங்கள் புரிவது, இறை நம்பிக்கை இவனிடம் நடிப்பாகவே இருக்கிறது! என்பதைத்தான் உணர்த்துகிறது!!

மேலும்

நிச்சயமாக... உயிருள்ள ஜீவன்களை மதிக்காமல் உயிரற்ற சிலையை வணங்கும் நிலைக்கு இறை நம்பிக்கையாம்... நம் தலைமுறையிலாவது திருந்துவோமே... 01-Aug-2016 5:13 pm
மிகப்பொருத்தமான பதிலிடல் உங்களுடையது.நன்று தோழமையே! 30-Jul-2016 5:44 pm
யாருக்கும் எந்த ஒரு நெருக்கடியிலும் தீங்கு செய்யக் கூடாது என்பதை தனது நிரந்தரமான சங்கற்பமாகக் கொண்டு, கடவுளை வழிபடுபவனே உண்மையான ஆஸ்திகன்! அஃதின்றி சுயநலத்துக்காக பாதகங்கள் ஒருவன் செய்வானேயாயின், அவனை விட யாருக்கும் எப்போதும் தீங்கு செய்யாத நாஸ்திகன் நல்லவன் ஆகிறான். பாதகங்கள் செய்யாமல் இருப்பதன் நோக்கம், செய்தால் இறைவன் தண்டிப்பான் என்பதற்காக அல்லாமல், அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின்பொருட்டு இருக்க வேண்டும். 29-Jul-2016 11:12 pm
ஜவ்ஹர் - ஜவ்ஹர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jul-2016 6:00 am

காளை யவன்
கரம் பிடிக்க முன்னே
மங்கையவள் உடல்
தொட்ட,
மல்லிகை
மலர் பெற்ற
வரம் இதுவோ?
*******************
வற்றிய குளத்தினிலே
நட்ட நடுவினிலே
உள்ள
பட்ட மரத்தினிலே
குந்தி
தன் இரைக்காய்
குறியாய் காத்திருக்கும்
பட்சியின் நம்பிக்கை கூட
ஏன் உனக்கில்லை
மனிதா?
********************
கருங்கற் பாரை
உடைத்து
மலை உயர
வீடமைத்துக் கொடுக்கும்
இரும்புக் கரம் படைத்த
மனிதன் வாழ
காய்ந்த புல் வேய்ந்த
ஓட்டை வீடு!!!
******************
ஊர்க்குருவி!!
*********************
என் சிறு வீட்டுக்கே
உன் வீட்டில்
இடமில்லை என்றால்
உன் அயல் வீட்டுக்கு
உன் மனதில்
இடமேது!!
*****************
எம் மண

மேலும்

நன்றி சர்பான் 29-Jul-2016 9:14 am
அழகிய சிந்தையில் முளைத்த விருட்சங்கள் 29-Jul-2016 8:41 am
ஜவ்ஹர் - அன்புமலர்91 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jul-2016 7:28 am

உம் பேத்திக்க என்ன பேருடா வச்சிருக்க, தம்பி?

நம்ம பாட்டி பேரத்தான் வச்சிருக்கென்.

ஓ ....நம்ம கஸ்தூரி பாட்டி பேரா?

ரொம்ப நல்ல பாட்டிடா அவுங்க.அவுங்க பேருக்கு என்ன அர்த்தம்னெ தெரில உனக்குத் தெரிஞ்சா சொல்லு.

அண்ணே, கஸ்தூரி மான் -னு கேள்விப்பட்டிருக்கறிங்களா?

ஆமாம கேள்விப்பட்டிருக்கேன்.

அந்த மானிலிருந்து சுரக்கும் ஒரு பொருள்ல இருந்து ஒரு வகையான வாசனை திரவியம் தயாரிக்கலாங்க. அதுக்குப் பேரு தான் கஸ்தூரியா இருக்கும்.

ஓ....அப்பிடியா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சிரிக்க அல்ல.

மேலும்

ஜவ்ஹர் - ஜவ்ஹர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Dec-2015 4:53 pm

அவள் எண்ணம் சுட்ட
விழி நீர் வெந்நீராகி
கொதி நீராய் கிணறு பொங்கி
வழிந்து ஆறாய் ஒட்டுகிறாள்!!

அவள் எண்ணச் சிறகடித்து
வண்ணக் கனவுக்காய்
விழி மூட மறுத்து
அடம்பிடிக்கும் அவளுள்ளம்

பட்டாம் பூச்சியாய் இனம் சேர்த்து
பறக்கும் அவள் பருவம்
ஒற்றையாய் நின்றவள்
ஊமையாய் அழுகிறாள்

துணைக்காய் பிடித்த தலையணை
நனைத்தே கண் சிவந்து
காளையவன் நினைவாய்
காலத்தை ஓட்டுகிறாள்

கருமுகில் களைந்து
ஆதவன் தன் முகம் காண
விட்டத்தை வெறித்தே
வான் முகில் வெறுக்கிறாள்!!

மேலும்

மிகச் சிறப்பு காலத்தை வெறுக்கும் மனதின் குமுறல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Dec-2015 5:20 pm
ஜவ்ஹர் - ஜவ்ஹர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Nov-2015 10:06 pm

குட்டை ஊரிய மட்டைகள்!!!
**************************************
ஆப்பிழுத்த குரங்காகி
அவமானம்தோள் சுமந்து
நகைக்க இடம் தந்து
நடைப் பிணமாய் இப்பூமி!!

வாழ வழி வகுத்திருந்தும்
வாள் பலி கொள்வதற்கும்
இனம் பிரித்துப் பார்ப்பதற்கும்
இரண்டாய்க் கிடக்கிறது இப் பூமி!!

சமூகம் பல இயக்கமாகி
சந்தி பிரித்துப் பார்த்து
சாலைககோர் வழிபாடு செய்து
சந்தி சிரிக்க அழுகிறது இப் பூமி!!

தன் தலையில் மண் வாரி
தலையுசுப்பி அது களைந்து
தனை நொந்து கொள்ளாமல்
தலைவன் ஏசும் இப்பூமி!!

திரை மறைவில் தீதுகளும்
தேவைக்காய் புகழ்ச்சிகளும்
செயற்கை பூசிய உணர்வுகளும்
அரங்கேற்றம் செய் இப் பூமி!!!

பிணம் தின்னிக

மேலும்

மிக்க நன்றி தோழமையே! 09-Dec-2015 8:21 am
கவிதை நன்று. கவிதையில் சொன்ன கருத்துக்கள் இன்னுன் நன்று 08-Dec-2015 10:32 pm
மிக்க நன்றி தோழமையே 01-Dec-2015 8:50 pm
பணி நிமிர்த்தும் சற்று தாமதங்கள் எற்படுகின்றன.நன்றி தோழரே 01-Dec-2015 8:50 pm
ஜவ்ஹர் - ஜவ்ஹர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Aug-2015 10:11 am

ஆழமான சிந்தனை!
அரவனைத்துச் செல்லும்
உன் விடிவுக்காய்!!!
தேடல் இன்றி
தேனாய் சுவைக்கும்
எதுவும் நிலைக்காது
அறிவாய் நீ!!
வானைத்தைத் தொட முடியாது
முடியும் முயன்று பார்!!
அறிவில் முதுமை
உனை வாழ்த்தும்!!
முடியாது எனும் வார்த்தை!
முதுகெலும்பில்லாதவன் கொண்ட
நஞ்சான வாக்கு!!
கல்வியைப் போற்று
கயவரைத் தூற்று
அவரை திருத்திப் பார்
திரும்பிப் பார்ப்பார்
பலபேர் உன்னை!!
உதவு
ஊழல் அற்ற அப்பாவிகளுக்கு!
அவர் மனதில் வாழ்வாய்!
அவணி போற்றும் உன்னை!!
என்றும் மாற்றான்
மனம் குளிர வாழ்வாய்!!
மலராய் புத்தெழுச்சி பெறுவாய்!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (99)

சிவா

சிவா

Malaysia
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (99)

என் படங்கள் (1)

Individual Status Image

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே