தொலைந்த தங்க வளையல்கள்

தொலைந்த தங்க வளையல்கள்!

"நான் அவருக்கு என்ன பதில் சொல்லுவேன்.வந்து கேட்டா நான் எங்கே என்று சொல்வேன்.அவரு எவ்வளவு கஸ்டப் பட்டு உழைத்து கொஞ்சம் கொஞ்சமா சேர்த்த பணத்துல ஆசையா வாங்கித் தந்தாரே.இப்ப நான் அவருக்கு என்ன சொல்லுவேன்"

என்று அழுதுகொண்டிருந்தாள் ஜெமீலா.
"என்ன சிணுங்கிக் கொண்டிருக்கிறாய்; சமைக்கவும் இல்ல என்ன நடந்தது?"
அப்போதுதான் வீட்டுக்கு வந்தவர் மனைவியை சற்று கோபமாக கேட்டார்.

"இல்லங்க இப்பதான் இந்த மேசையில கலட்டி வெச்சிட்டு குளியலறைக்கு போய் வந்து பார்த்தேன்; என்ற வளையல் இரண்டையும் காணல" என்று பயந்தவளாக அழுதுகொண்டு கூறினாள்.

"என்ன காணலையா? என்ன சொல்றாய்! மூன்று இலட்சம் பெருமதியான வளையல காணலையா? எவ்வளவு கஸ்டப்பட்டு வாங்கின நகை அது; காணல என்று சாதாரணமாய் சொல்றாய்.யாரும் வீட்டுக்குள்ள வந்து போனதா?"

என்று கேட்டவனிடம், இல்லங்க "நம்ம சுலைகா தாத்தாதான் வந்து போனா ஆனா அவ எடுக்க மாட்டா?"

இஞ்ச இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியாது.அவட புருசனுக்கும் வேலை இல்ல. வீட்டுல சரியான கஸ்டம் போல எடுத்தாலும் எடுத்திருப்பா போய் கேட்டுப் பாரு என்று மனைவியை அதட்டினான்.

என்ன செய்வதென்று புரியாமல் எதற்கும் போய் கேட்டுப் பார்ப்போம் என்று எழுந்த நேரம்,

ஜெமீலா தாத்தா..ஜெமீலா தாத்தா என்று அழைக்கும் சத்தம் கேட்டு வாசற் படிக்கு சென்று பார்த்தவளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

வந்தவரைக் கண்டதும் ஜெமீலாவுக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. ஆம் தன்னுடைய சாச்சிட மகள் பரீதாதான் அது. கல்யாண வீட்டுக்குப் போவதற்கு நேற்று மாலை இரவலாக இவளது வளையல்களை வாங்கிச் சென்றிருந்தாள்.

கொஞ்சம் சுனங்கிட்டு தாத்தா மன்னிச்சிக்கோங்க என்று கூறி அந்த இரண்டு தங்க வளையல்களையும. அவளது கையில் திணித்து அப்பால் சென்றாள் பரீதா.

தன் பின்னால் நின்றிருந்த கணவனை ஒரு குற்ற உணர்வுடன் நோக்க அவனும் தனது அவசரப் புத்தியை எண்ணி வெட்கித்து நின்றான்.

ஜவ்ஹர்.

எழுதியவர் : ஜவ்ஹர் (19-Apr-24, 5:08 pm)
சேர்த்தது : ஜவ்ஹர்
பார்வை : 27

மேலே