ஒற்றையாய் அவள்

அவள் எண்ணம் சுட்ட
விழி நீர் வெந்நீராகி
கொதி நீராய் கிணறு பொங்கி
வழிந்து ஆறாய் ஒட்டுகிறாள்!!
அவள் எண்ணச் சிறகடித்து
வண்ணக் கனவுக்காய்
விழி மூட மறுத்து
அடம்பிடிக்கும் அவளுள்ளம்
பட்டாம் பூச்சியாய் இனம் சேர்த்து
பறக்கும் அவள் பருவம்
ஒற்றையாய் நின்றவள்
ஊமையாய் அழுகிறாள்
துணைக்காய் பிடித்த தலையணை
நனைத்தே கண் சிவந்து
காளையவன் நினைவாய்
காலத்தை ஓட்டுகிறாள்
கருமுகில் களைந்து
ஆதவன் தன் முகம் காண
விட்டத்தை வெறித்தே
வான் முகில் வெறுக்கிறாள்!!